search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagiri"

    • சிவகிரி அருகே தேவி பட்டணம் ஊராட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை பொங்கலிட்டு கொண்டாடினர்.
    • ஊராட்சி மன்ற வளாகத்தில் பொங்கலிட்டு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவி பட்டணம் ஊராட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை பொங்கலிட்டு கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை தாங்கி னார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற வளாகத்தில் பொங்கலிட்டு அலுவ லர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. கிளை செயலாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தி.மு.க. நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள், அலுவ லர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம் வரவேற்று பேசினார்.
    • 2,500 பேருக்கு தலைக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது.

    ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையப்பன் தலைமை, தாங்கினார். யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், சீனிவாசன், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம் வரவேற்று பேசினார். மேலும் தீர்மான உரையாற்றினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தர வடிவேலு தொகுத்து வழங்கினார்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் சரவ ணன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜதுரை, தலைமை செயற்குழு பரமகுரு, லாலா சங்கரபாண்டியன், பூசைப்பாண்டியன், பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி, வழக்கறிஞர் அணி மருதப்பன், பூமிநாதன், டாக்டர் சுமதி, கடற்கரை, சேர்மதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பெரியதுரை, பேரூர் செயலாளர் ரூபி பாலா, ஆயில்ராஜா பாண்டியன், மருதுபாண்டியன், ஒன்றிய நிர்வாகிகள் பேரூர் பரமசிவன், முனியாண்டி, முத்தையா, மாடசாமி, இராமச்சந்திரன், கந்தவேல், அவைத்தலைவர் துரைராஜ்,

    புல்லட் கணேசன், பிச்சுமணி, கார்த்திக், இளையராஜா, வீரமணி, மணிகண்டன், தங்கப்பாண்டியன், ராயகிரி விவேகானந்தன், மாடசாமி, மைதீன் கனி, விஸ்வநாதபேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் ராமராஜ், பெரியாண்டவர், தங்கரத்தினராஜ், நெல்கட்டும் செவல் ஊராட்சி தலைவர் பாண்டியராஜா, ஒன்றிய கவுன்சி லர்கள் விமலா மகேந்திரன், செல்வி ஏசுதாஸ், தென்மலை முனியராஜ், அருளாட்சி ஜெயராமன், ராமநாதபுரம் சரஸ்வதி, கூடலூர் அருணா தேவி, தேவிபட்டணம் கிளை செயயலாளர் முருகன், வெள்ளையப்பன், பாறைப் பட்டி கணேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விக்னேஷ், இருளப்பன், கிருஷ்ண லீலா, முத்துலட்சுமி தங்கராஜ், ராஜலட்சுமி மற்றும் மாநில , மாவட்ட, ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் கிளைச்செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    இக்கூட்டத்தில், நாளை(1 -ந்தேதி) பிறந்தநாள் காணும் முதல்-அமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். சிவகிரி அரசு தாலுகா மருத்துவமனையினை மேம்படுத்தப்பட்ட பெண்கள் பிரசவ ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும்.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாய தோட்டத்தில் சேதங்களை ஏற்படுத்தும் வனவிலங்குகளை அடிவார பகுதிகளுக்கு வரவிடாமல் அதற்கு வேண்டிய சோலார் சிஸ்டங்களை நிறுவ வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசும்போது, முதல்-அமைச்சர் பிறந்த நாளை அனைத்து கிளைகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். முதல்-அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவியாக இனிப்பு, பொங்கல், சாக்லேட் வழங்குவதை விட பொதுமக்கள் கட்சி நிர்வாகிகளை பாதுகாக்கும் வண்ணமாக இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கின்ற தி.மு.க. நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 2,500 பேருக்கு தலைக்கவசம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் செய்திருந்தார்.

    • சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் பைப் லைன் பதித்தல், சுகாதார வளாகம் பராமரிப்பு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் பைப் லைன் பதித்தல், சுகாதார வளாகம் பராமரிப்பு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக 15-வது வார்டு கவுன்சிலர் ரமேஷின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 24 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
    • சிவகிரி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக மேலாளர் டாக்டர் கண்ணபிரான் ஆய்வு செய்தார்.

    சிவகிரி:

    தென்காசி மண்டலத்தில் நடப்பு கே.எம்.எஸ். பருவத்தில் 24 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சிவகிரி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக மேலாளர் டாக்டர் கண்ணபிரான் ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகளுக்கான மொத்த தொகையும் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவது குறித்தும், புகாருக்கு இடமின்றி கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி சிவகிரி பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
    • தலா 3 நபர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு தென்காசி மகளிர் திட்டம் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    சிவகிரி:

    தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி சிவகிரி பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி திட்ட அலுவலர் சாந்தி, சமுதாய அமைப்பாளர் செல்வகுமார், சமுதாய ஒருங்கிணைப்பாளர் காளி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    போட்டியில் சிவகிரி பகுதியைச் சேர்ந்த 122 குழுவிற்கான கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் தலா 3 நபர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு தென்காசி மகளிர் திட்டம் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதனைப் போன்று ராயகிரி பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற போட்டியில் அப்பகுதியைச் சேர்ந்த 75 மகளிர் சுய உதவிக்குழுக்கள் கட்டுரை, கவிதை, ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தலா 3 நபர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு தென்காசி மகளிர் திட்டம் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குறிஞ்சி மகேஷ், செயல் அலுவலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் விவேகானந்தன், கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் பத்திரகாளி, அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கு 18 வகையான நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
    • சிவகிரி கருப்பாயி நாச்சியார் கட்டளைக்கு பாத்தியப்பட்ட (தளத்துக்கோவில்) பால சுப்பிரமணியர் கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மூலவர் பால சுப்பிரமணிய சுவாமி மற்றும் உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கு பால், தயிர், நெய், பன்னீர், விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை சாறு, கும்பநீர் உட்பட 18 வகையான நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து விபூதி அலங்காரம் மற்றும் பட்டாடைகள் மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    இக்கோவில் அடி வாரத்தில் உள்ள கருணை ஆனந்தா சித்தர் சுவாமிகள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விபூதி, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் ராணி பாலகுமாரி நாச்சியார், ராஜா சேவுகப்பாண்டியன் என்ற விக்னேஷ்வர சின்னத்தம்பியார் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். சிவகிரி கருப்பாயி நாச்சியார் கட்டளைக்கு பாத்தியப்பட்ட (தளத்துக்கோவில்) பால சுப்பிரமணியர் கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவில் முத்துக்குமாரசாமி சப்பரத்தில் பவனி வந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். சிவகிரி அழுக்கு சித்தர் சுவாமிகள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சிவகிரி அருகே உள்ள கூடலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவகிரி, சங்கரன்கோவில், வாசு தேவநல்லூர், புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஜனவரி 27 -ந்தேதியன்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 2 நபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
    • சிவகிரி அருகே மான்களை வேட்டையாடியது சம்பந்தமாக இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகிரி:

    சிவகிரி வனத்துறை ரேஞ்சர் மவுனிகா தலைமையில், கடந்த மாதம் 17-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முருகன் என்பவரின் தோட்டத்தில் மான்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாக 5 நபர்களையும், இதனை தொடர்ந்து ஜனவரி 27 -ந்தேதியன்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 2 நபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜதுரை மகன் சதீஸ்குமார் (வயது 28) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி அருகே மான்களை வேட்டையாடியது சம்பந்தமாக இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    மேலும் இதுசம்பந்தமாக சில நபர்களை வனத்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.


    • சிவகிரி பேரூராட்சியும், தேவிபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சிவகிரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது
    • டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியும், தேவிபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சிவகிரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது. டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், ஒலிபெருக்கி மூலமாக விளம்பரம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    முகாமிற்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகி ருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். வாசுதே வநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிவகிரி யில் சிவராம லிங்க புரம் தெரு, தெற்கு ரத வீதி, அம்பேத்கார் தெரு, பால கணேசன் தெரு, மலைக் கோவில் ரோடு போன்ற பகுதிகளில் மருத்துவ முகாமும், மழையிலும் வெயிலிலும் கேட்பாரற்று கிடந்த கழிவு பொருட்களான டயர், டியூப், சிரட்டை, அம்மி, ஆட்டு உரல் போன்றவற்றை வீடுவீடாக சென்று அவற்றை அகற்றும் பணியும், ஒட்டுமொத்த துப்புரவு பணியும், நிலவேம்பு கசாயம் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராஜாராம், துப்புரவு ஆய்வாளர் லாசர் எட்வின், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முருகையா, இசக்கி, டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ராஜாராம் செய்திருந்தார்.

    • முன்னோடி மனு நீதி நாள் முகாமில் பொதுமக்களிடமிருந்து 193 மனுக்கள் பெறப் பட்டது.
    • 172 பயனாளிகளுக்கு ரூ.14,54,315 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா அருளாட்சி என்ற திருமலா புரம் கிராமத்தில் கடந்த மாதம் 30 -ந் தேதி நடைபெற்ற முன்னோடி மனு நீதி நாள் முகாமில் பொதுமக்களிடமிருந்து 193 மனுக்கள் பெறப் பட்டது. இவற்றில் 108 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதி உள்ள 85 மனுக்களுக்கு பதிலும், 172 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    சிவகிரி அருகேயுள்ள தலையணையில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மரக்கன்றுகளை நட்டு வைத்து முகாமிற்கு தலைமை தாங்கினார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தாசில்தார் செல்வக்குமார் வரவேற்று பேசினார்.

    வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா, திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மாப்பிள்ளைத்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மனுநீதி நாள் முகாமில் மொத்தம் 172 பயனாளிகளுக்கு ரூ.14,54,315 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சப்- கலெக்டர்கள் ஷீலா, சுதா, ராஜ மனோகரன், கந்தசாமி, சங்கர நாராயணன், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, துணை கலெக்டர் (பயிற்சி) கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ஆத்துவழி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், துணை தாசில்தார்கள் திருமலைச்செல்வி, சரவணன், சிவப்பிரகாசம், கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் வள்ளி யம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி நன்றி கூறினார்.

    முன்னதாக வனத்துறை யினர் இயற்கையாக விளை விக்கப்பட்ட காய்கறிகள், பழவகைகள், கீரை வகைகளை காட்சிப்படுத்தியிருந்தனர். எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் கிள்ளிகுளம் வேளாண் மாணவிகள் வேளாண் பொருட்களையும் அது குறித்த கையேடுகளையும் காட்சிப்படுத்திருந்தனர். அதனை சதன் திரு மலைக் குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், டி.ஆர்.ஓ. பத்மாவதி, சங்கர ன்கோவில் ஆர்.டி.ஓ. டாக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு அது குறித்து கேட்டறிந்தனர்.

    • வாசுதேவநல்லூரில் இயற்கை மருத்துவ ஆலோசனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • ரத்தினபிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர், எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் வாசுதேவநல்லூர் சேனைத்தலைவர் மண்டபத்தில் இயற்கை மருத்துவ ஆலோசனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன். சேனைத்தலைவர் சமுதாய பொறுப்பாளரான முருகன், ஆறுமுகம் ஆகியோர் முகா மை ெதாடங்கி வைத்தனர்.

    மருத்துவக் கல்லூரி மருத்து வர்கள் ரத்தினபிரகாஷ், கவிதா, வேடியப்பன் தலை மையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக உடல் பரிசோ தனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில் உணவுப்பழக்க வழக்கங்கள், பிசியோதெரபி, அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளித்து மருத்துவ ஆலோச னைகள் வழங்கப் பட்டது.

    ஏற்பாடுகளை சேனைத் தலைவர் இளைஞர் அணி பொறுப்பாளர் முத்து குமார், ஆசிரியர் கோபிகண்ணன் மற்றும் பேரூராட்சி நியமன குழு தலைவர் முனிஸ், பழனிசாமி, ஜெய்பாக்யா, மதன்குமார், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ ஆரா ய்ச்சி மருத்து வர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் முயற்சியால் தென்மலையில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
    • சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் ஊராட்சிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் முயற்சியால் தென்மலையில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் தென்மலை குமார், முருகன்சாமிநாதன், கிளைச் செயலாளர்கள் கருத்தப்பாண்டியன், முருகேசன், பாபுராஜ், தி.மு.க. நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதிய கட்டிடம்

    சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் ஊராட்சிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.


    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி மணிகண்டன், துணைத் தலைவர் காளீஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ், கிளை செயலாளர்கள் ராமமூர்த்தி, குருநாதன், ஊராட்சி மன்ற செயலர் உமாமகேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள், மைதீன்கனி, முருகன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அங்கன்வாடி மையம்

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நாரணாபுரம் கிராம ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடமும், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயராம், ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள், துணைத் தலைவர் திருமேனிராஜ், ஒன்றிய உதவி பொறியாளர் அருள் நாராயணன், கிளை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய பிரதிநிதி அந்தோணி, அங்குராஜ், வார்டு உறுப்பினர்கள் மாடசாமி, மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்திஜி கலையரங்கம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பள்ளி செல்லும் நேரங்களில் செங்கல் சூளைகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் பள்ளி குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.

    சிவகிரி:

    சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்திஜி கலையரங்கம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகர செயலாளர் பால சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர குழு உறுப்பினர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் சிவகிரி ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டார் சுற்றளவு பகுதி வரை செங்கல் சூளைகள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. அவ்வாறு இருந்தால் அவற்றினை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனை மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் உடனே அமல்படுத்த வேண்டும், பள்ளி செல்லும் நேரங்களில் செங்கல் சூளைகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் பள்ளி குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. அந்த நேரங்களில் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கருதி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும், சிவகிரி பேரூராட்சி வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதில் நகர துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், குருவு, மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், நகர பஞ்சாயத்து கவுன்சிலர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்.

    ×