என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவிபட்டணம் ஊராட்சியில் அலுவலர்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.
முதல்-அமைச்சர் பிறந்த நாள் விழா - தேவிபட்டணம் ஊராட்சியில் பொங்கலிட்டு கொண்டாட்டம்
- சிவகிரி அருகே தேவி பட்டணம் ஊராட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை பொங்கலிட்டு கொண்டாடினர்.
- ஊராட்சி மன்ற வளாகத்தில் பொங்கலிட்டு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி அருகே தேவி பட்டணம் ஊராட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை பொங்கலிட்டு கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை தாங்கி னார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற வளாகத்தில் பொங்கலிட்டு அலுவ லர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தி.மு.க. கிளை செயலாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தி.மு.க. நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள், அலுவ லர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
Next Story






