search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagiri"

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சார்பாக சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷம் எழுப்பப்பட்டது.

    சிவகிரி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சார்பாக சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ ஓட்டுனர் தென்காசி மாவட்ட செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா, தென்காசி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கிதுரை, சிவகிரி கூட்டுறவு பண்டக சாலையின் தலைவர் ராஜேந்திரன், சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர் அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் போன்றவற்றை மானிய விலையில் வழங்கிட வேண்டும், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிககைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    • கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தெப்பத்தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த 26-ந்தேதியன்று கொடி யேற்றம் நடைபெற்றது.
    • வான வேடிக்கைகள் முழங்க சிறப்பாக தெப்பத்தில் 11 முறை தேர் வலம் வந்தவுடன் தேரோட்டம் முடிவுற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தெப்பத்தேர்த் திருவிழாவை முன்னிட்டு கடந்த 26-ந்தேதியன்று கொடி யேற்றம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாள் திருவிழா வும் ஒவ்வொரு சமூகத்தினரால் நடத்தப்பட்டது. முத்துக்குமாரசாமிக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு மான், மயில், அண்டரண்ட பட்சி, யானை, காமதேனு போன்ற வாகனங்களில் சப்பரத்தில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.

    தெப்பத்தேர்த் திருவிழாவை முன்னிட்டு முத்துக்குமாரசாமி கோவி லிருந்து எழுந்தருளி புறப்பட்டு தங்கு மண்டபத்திற்கு வருகை தந்து பின்பு அங்கிருந்த கூடாரப் பாறை பால சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பாக அமைந்துள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த தேரில் வந்து அமர்ந்தார்.

    சிவகிரி ஜமீன்தார் சேவுகப் பாண்டியன் என்ற விக்னேஸ்வர சின்னத் தம்பியார் இரவு 9.30 மணி யளவில் வடம் தொட்டு கொடுத்தவுடன் பக்தி கரகோஷம் முழங்க பக்தர் கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தெப்பத்தேர்த் திருவிழா தொடங்கியவுடன் வான வேடிக்கைகள் முழங்க தெப்பத்தேர் திருவிழா சிறப்பாக தெப்பத்தில் 11 முறை தேர் வலம் வந்தவுடன் தேரோட்டம் முடிவுற்றது.

    ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் சேவுகப்பாண்டி யன் என்ற விக்னேஸ்வர சின்னத்தம்பியார், ராணி பாலகுமாரி நாச்சியார், ராணி பிரசன்னா, ராணி ஸ்ரீ தங்கதேவசேனா நாச்சி யார் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    திருவிழாவைக் காண ராஜபாளையம், சங்க ரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர், தளவாய்புரம், ராயகிரி போன்ற பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    இதில் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரு மான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோகரன், பேரூர் செய லாளர் செண்பகவிநாயகம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமி ராமன், சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமிபாண்டி யன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருதுபாண்டியன், உள்ளார் தளவாய்புரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், கவுன் சிலர்கள் செந்தில்குமார், சித்ரா, ரமேஷ், விக்கி, கிராம நிர்வாக அலுவ லர்கள், தலையாரிகள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த 26 -ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
    • 9 -வது திருநாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிர மணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை யொட்டி கடந்த மாதம் 26 -ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தார் சார்பில் திருவிழா கொண்டா டப்பட்டது. நேற்று 9 -வது திருநாள் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. சிவகிரி ஜமீன் தார் சேவுகப்பாண்டி யன் என்ற விக்னேஷ்வர சின்னத்தம்பியார் தேரடி முனியாண்டி கோவில் அருகே தேரின் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து நிலையத்திற்கு வந்தது.

    இதில் பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீத கிருஷ்ணன், கவுன்சிலர்கள், அலுவலர்கள், அனைத்து சமுதாய பொறுப்பாளர்கள், டாக்டர் செண்பகவிநாயகம், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று பங்குனி உத்திரத்தை யொட்டி தெப்பத்தேர் திருவிழா நடைபெற உள்ளது.

    • சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.
    • தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கான தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் சங்கை சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.

    செயல் வீரர்கள் கூட்டத்தில் வாக்குச்சாவடி பணிக்குழு அமைப்பது, கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்த தீர்மானங்களை தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்மொழிந்தார். தீர்மானங்கள் குறித்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், விவசாய அணி இணைச் செயலாளர் நல்ல சேதுபதி கருத்துரை வழங்கினார்.

    கூட்டத்தில் தனுஷ்குமார் எம்.பி., சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கர பாண்டியன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன், நகர செயலாளர் அந்தோணிச்சாமி, வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசைப்பாண்டியன், மதி மாரிமுத்து, பேரூர் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் செண்பகவிநாயகம், ராயகிரி கே.டி.சி. குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபி பாலசுப்ரமணியன், புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிய ராஜா, வெள்ளையப்பன், கிருஷ்ண லீலா, புல்லட் கணேசன், பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் அமர்ந்து வலம் வரும் காட்சி நடந்தது.
    • இரவு 7 மணிக்கு சேனைத்தலைவர் சமுதாய மகாசபை மண்டபத்திலும், திருமண மண்டபத்திலும் 526 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திரம் தேரோட்டம், தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று சிவகிரி சேனைத்தலைவர் சமூகத்தினரால் 6-ம் திருநாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    காலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் அமர்ந்து வலம் வரும் காட்சியும், காலை 11 மணியளவில் 7-ம் திருநாள் மண்டகப்படி சந்திப்பு பகுதியில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சேனைத்தலைவர் சமுதாய மகாசபை மண்டபத்திலும், திருமண மண்டபத்திலும் 526 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கணபதி சுந்தர குருக்கள் பக்தி பஜனை பாடல்கள் பாடியும், மந்திரங்கள் ஓதியும் விளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குத்து விளக்குகளை ஏற்றிவைத்து பக்தி பாடல்கள் பாடினர்.

    விளக்கு பூஜைக்கு தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலைஞர் மூக்கையா, செயலாளர் தங்கேஸ்வரன், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜைகள் நடத்தினர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.இரவு 10 மணிக்கு மேல் தீபாராதனை காட்சியும், முத்துக்குமாரசாமி மயில் வாகனத்திலும், மீனாட்சியம்மன் காமதேனு வாகனத்திலும் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    • பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி இன்று கொடியேற்றப்பட்டது.
    • முன்னதாக மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்கு பாத்தி யப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி இன்று கொடியேற்றப்பட்டது. முன்னதாக மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ராணி பால குமாரி நாச்சியார், ராஜா சேவுகப் பாண்டியன் என்ற விக்னேஷ்வர சின்னத் தம்பியார், ராணி பிரசன்னா, ராணி ஸ்ரீ தங்கதேவசேனா நாச்சியார் மற்றும் குடும்பத்தினர், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், சிவகிரி தேவர் மகா சபை தலைவர் குருசாமிப்பாண்டியன், செயலாளர் சுந்தரராஜன், துணை செயலாளர் கற்பகசுந்தரம், பொருளாளர் ராஜேந்திரன், திருஞானம், ஆசிரியர் மருதுபாண்டியன், அனைத்து சமுதாய பொறுப் பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 1-ம் திருநாளான இன்று கீழத்தெரு தேவர் மண்டபம் சார்பில் விழா நடைபெறு கிறது.

    • சிவகிரி தாலுகா அலுவலக கூட்டரங்கில் தாசில்தார் பழனிவேல்சாமி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
    • மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா அலுவலக கூட்டரங்கில் சிவகிரி அருகே ராயகிரி மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணி தொடர்பாக தாசில்தார் பழனிவேல்சாமி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    ராயகிரி பாகம் -1 கிராமத்தில் மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மாற்று சாலை போக்குவரத்து வசதிகள் செய்து தராமல் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் விஸ்வநாதபேரி, வடக்கு சத்திரம், தெற்கு சத்திரம் வழியாக ராயகிரி செல்லும் சாலையில் சுமார் இரண்டு மாத காலமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    ராயகிரி, ராமநாதபுரம், அருளாட்சி மற்றும் ராயகிரி வழியாக துரைச்சாமியாபுரம், சங்கரன்கோவில் செல்லும் பஸ்கள் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உள்ளார் சாலை வழியாக சென்று வந்தன. இதனால் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    ஆகவே இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிவகிரியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டம் பொறி யாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடுவதாக அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக ராயகிரி மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணிக்கு மாற்றுப்பாதை 10 நாட்களுக்குள் அமைத்துத் தருவதாக உறுதிமொழி கடிதம் தரப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த சிவகிரி நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டம் பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டுப் போடும் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பாலம் கட்டவும், போக்கு வரத்திற்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்துமாறு தெரிவி க்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நிரந்தரமாக இப்போராட்டம் வாபஸ் பெறப்படும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் இன்ஸ்பெ க்டர் மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) கணேஷ், மண்டல துணை தாசில்தார் சிவபிரகாசம், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சமுத்திரகனி, வேலு, ராஜேந்திரன், மணிகண்டன், சின்ன வேல்சாமி, சொரிமுத்து, அய்யாசாமி, பேரூராட்சி கவுன்சிலர் இருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகிரி காந்திஜி கலையரங்கத்தில் நடைபெற்றது.
    • வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி.ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகிரி காந்திஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. வாசு. வடக்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், ராயகிரி பேரூர் செயலாளர் குருசாமி, சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம் வரவேற்று பேசினார்.

    தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சரவணன், தலைமைக் கழக பேச்சாளர் இஸ்மாயில், முத்துசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் மருதப்பன், அவைத் தலைவர் துரைராஜ், துணைச்செயலாளர்கள் முனியாண்டி, முத்தையா, ராமுத்தாய், பொருளாளர் பரமசிவன், மாவட்ட பிரதிநிதிகள் மாரித்துரை, கந்தவேல், ஒன்றிய பிரதிநிதிகள் மாடசாமி, சி.எஸ்.மணி, சுந்தரவடிவேலு, ராமச்சந்திரன், அழகுவேல், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுந்தரவடிவேலு நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசு யூனியன் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன், பேரூர் செயலாளர் செண்பகவிநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கடந்த 13-ந்தேதி செல்வக்குமார் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • பழிக்குப்பழியாக சிவக்குமாரின் நண்பர்கள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40).

    கொலை

    இவர் கடந்த ஆண்டு சிவக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி ஜாமீனில் வெளிவந்த நிலையில், கடந்த 13-ந்தேதி மர்மகும்பலால் செல்வக்குமார் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    15 பேரிடம் விசாரணை நீடிப்பு

    விசாரணையில் சிவக்குமார் கொலை செய்யப்பட்டதில் பழிக்குப்பழியாக அவரது நண்பர்கள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தி யிருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையிலான போலீசார் 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வக்குமார் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்.
    • குற்றவாளிகளை சிவகிரி போலீஸ் தேடி வருகின்றனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதியன்று சிவக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    வெட்டிக்கொலை

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று மதியம் சிவகிரியில் ஒரு வக்கீலை பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருடன் செல்வக்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அரசு மருத்துவமனை அருகே அவரை வழிமறித்த கும்பல் செல்வக்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இச்சம்பவம் குறித்து சிவகிரி இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீஸ் தேடி வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் சிவக்குமார் கொலை செய்யப்பட்டதில் பழிக்குப்பழியாக அவரது நண்பர்கள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரியவந்து.

    இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், நெய், சந்தனம், பன்னீர், குங்குமம், விபூதி, இளநீர் உள்பட நறுமண பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர், முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மாலையில் முத்துக்குமாரசுவாமி சப்பரத்தில் அலங்கரித்து முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் சிவகிரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊழியர் கூட்டம் ஆசிரியர் காலணியில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் சிவகிரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊழியர் கூட்டம் ஆசிரியர் காலணியில் நடைபெற்றது. நகர தலைவர் ஒருசொல்வாசகன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இக்கூட்டத்தில் வருகிற 13 -ந்தேதியன்று தென்காசியில் நடைபெற இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள வருகை தரும் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு சிவகிரி பா.ஜ.க. சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கவும், கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்டோர் ஆனந்தன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைத்து கொண்டனர். தொடர்ந்து தென்காசி மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் பெற்ற ராஜ் நியூ நர்சரி பிரைமரி பள்ளிக்கு ஆனந்தன் நேரில் சென்று முதல்வர் ராமருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயகோதண்டராமன், ஓ.பி.சி. அணி மாவட்ட துணைத் தலைவர் தங்கம், மகளிர் அணி மாவட்ட துணைத்தலைவர் தேவி, பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் ராமசாமி, ஓபிசி அணி மாவட்ட ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பொன்சேகர், வாசு வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சேட்குமார், ஒன்றிய செயலாளர் கருப்பையா, ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சக்திவேல், புலியூரான், பிரச்சார பிரிவு ஒன்றிய செயலாளர் பரமசிவம், சிவகிரி நகர கிளை தலைவர்கள், கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×