search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagiri"

    • நிகழ்ச்சிக்கு மாநில மருத்துவர் அணி துணைச்செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் தலைமை தாங்கினார்.
    • ஒடிசாவில் ரெயில் விபத்து காரணமாக பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சிவகிரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவப் படத்திற்கு சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பில் மாலைகள் அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு பேரூர் தி.மு.க. செயலாளரும், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோ கரன், வக்கீல் மருதப்பன், பேரூராட்சிமன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செய லாளரும் வாசு. யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கருணாநிதியின் உருவப் படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக ஒரிசாவில் ெரயில் விபத்து காரணமாக பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாள் அன்று பிறந்து ஒரு வயது நிரம்பிய டாக்டர் செண்பக விநாயகம் பேத்திக்கு அனை வரும் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    விழாவில் டாக்டர் ஜோதிமணிகண்டன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி, மகளிர் அணி கிருஷ்ண லீலா, கலைஞர் பகுத்தறிவு பாசறை அணி செயலாளர் நல்லசிவன், விவசாய தொழிலாளர் அணி கார்த்திக், விவசாய அணி வீரமணி, தொ.மு.ச. மாடசாமி, ஆனந்தா ஆறுமுகம், தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், அவைத்த லைவர் துரை ராஜ், பொரு ளாளர் பரம சிவம், முத்தையா, சி.எஸ்.மணி, பிச்சுமணி, இளைய ராஜா, புல்லட் கணேசன், கதிரேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முருகலெட்சுமி தனது வீட்டில் கூண்டு அமைத்து புறாக்கள் வளர்த்து வருகிறார்.
    • நேற்று அதிகாலை மர்ம நபர் யாரோ 12 புறாக்களையும் திருடிச்சென்றுள்ளார்.

    நெல்லை:

    சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டினத்தை அடுத்த ராமசாமியாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி முருகலெட்சுமி. இவர் தனது வீட்டில் கூண்டு அமைத்து புறாக்கள் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் அதில் அடைக்கப்பட்டிருந்த 12 புறாக்கள் நேற்று அதிகாலை மாயமானது. அதனை மர்ம நபர் யாரோ திருடிச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக முருகலெட்சுமி சிவகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே கிராமத்தில் வசிக்கும் கணேசன் மகன் மகேஷ்குமார்(வயது 19) என்பவர் புறாக்களை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
    • முகாமில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றியம், ராமநாதபுரத்தில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன், ராம நாதபுரம் கிளைச்செய லாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோகரன் முன்னிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    இதில் அவைத்தலைவர் திருமலைச்சாமி, துணைச்செயலாளர் ராமராஜ், ஒன்றிய பிரதிநிதி சரவணன், தொழில் நுட்ப அணி மணிகண்டன், இந்திரஜித், செல்வராஜ், தங்கராஜ், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நேற்று கூடலூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இனாம்கோவில்பட்டி, தென்மலை பாகம்-1, பாகம்-2, ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன.
    • குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலமாக ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) 10 நபர்களுக்கும், மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகாவில் சிவகிரி, வாசுதேவநல்லூர், கூடலூர் ஆகிய 3 வருவாய் குறுவட்ட பகுதிகள் உள்ளன. சிவகிரி தாலுகா அலுவலகத்தில் கடந்த 24-ந் தேதி தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கர நாராயணன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.

    முதல் நாளன்று வாசுதேவநல்லூர் வருவாய் குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்கள் சுப்பிரமணியபுரம், சங்கனாபேரி, வாசு தேவநல்லூர், நாரணபுரம் பாகம்-1, பாகம்-2, திருமலாபுரம் ஆகிய கிராமங்களுக்கு சிவகிரி தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. 25-ந் தேதி(வியாழக்கிழமை) சிவகிரி வருவாய் குறுவட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி பாகம்-1, பாகம்-2, சிவகிரி பாகம்-1, பாகம்-2, ராயகிரி பாகம்-1, பாகம்-2, ராமநாத புரம் ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன. நேற்று கூடலூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இனாம்கோவில்பட்டி, தென்மலை பாகம்-1, பாகம்-2, கூடலூர், நெல்கட்டும்செவல், பட்டக்குறிச்சி, அரியூர் ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்களிடம் இருந்து ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், குடிநீர் இணைப்பு, கழிப்பிட வசதி போன்ற கோரிக்கைகள் அடங்கிய 253 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் இயற்கை மரண உதவித்தொகை 9 பேருக்கும், விபத்து மரண உதவித் தொகையாக ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் மற்றும் முதியோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கிட ஆணையும் பிறப்பிக்கப்பட்டன. குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலமாக ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) 10 நபர்களுக்கும், மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் ஆனந்த், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தலைமை உதவி யாளர் செய்யது அலி பாத்திமா மில்லத், சிவகிரி தலைமை யிடத்து துணை தாசில்தார் சரவணன், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுடலை மணி, குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர்கள் கூடலூர் கோபாலகிருஷ்ணன், வாசு தேவநல்லூர் வள்ளி யம்மாள், சிவகிரி சரவணக்குமார், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் வீரசேகரன், ஜெயபிரகாஷ், சங்கரவடிவு, பாக்கியராஜ், உதவியாளர்கள் அழகுராஜா, வேல்முருகன், முனியாண்டி, முத்துசாமி, அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் உரிய தகவல் அளிக்கப்படும் என கூறினார்

    • நிகழ்ச்சியில் ஜீரண மண்டல நோய்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் அரவிந்த் பேசினார்.
    • மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவ- மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மையத்தில் ஜீரண மண்டலம் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் வினுதா முன்னிலை வகித்தார். இதில் ஜீரண மண்டல நோய்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் அரவிந்த் பேசினார். உணவு முறைகள் மற்றும் அதற்கான யோகா பயிற்சிகள் குறித்து மருத்துவ கல்லூரி மாணவிகள் மோகன ஸ்வேதா, விஜயலட்சுமி மற்றும் தாரணி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். மேலும் மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவ- மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    • நிகழ்ச்சியை எஸ்‌.தங்கப்பழம்‌ கல்வி குழுமத்தின்‌ நிறுவனர்‌ தங்கப்பழம்‌ , தாளாளர்‌ முருகேசன்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.
    • உடற்பருமன்‌ பற்றியும்‌, அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள்‌ பற்றியும்‌ கல்லூரி துணை முதல்வர்‌ மற்றும்‌ பேராசிரியர்‌ கவிதா உரையாற்றினார்‌.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர், எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக கல்லூரி மையத்தில் உடற்பருமன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் தங்கப்பழம் , தாளாளர் முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் வினுதா முன்னிலை வகித்தார். இதில் உடற்பருமன் பற்றியும், அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள் பற்றியும் கல்லூரி துணை முதல்வர் மற்றும் பேராசிரியர் கவிதா உரையாற்றினார்.

    உடற்பருமனுக்கான யோகா பயிற்சிகள், உணவு முறைகள் குறித்து மருத்துவ கல்லூரி மாணவிகள் லோகேஸ்வரி, அபிஸ்ரீவர்ஷினி மற்றும் சண்முகப்பிரியா ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். மேலும் மருத்துவ கல்லூரியின் மாணவ-மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.

    • விழா கோவில் முன்பு கால்கோள் விழாவுடன், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நேற்று காலை, மாலை நேரங்களில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவிபட்டணம் கிருஷ்ணன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா கோவில் முன்பு கால்கோள் விழாவுடன், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றன.

    முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலையில் கோவில் பூசாரி சிவபெருமாள் கையில் தீப்பந்தம், சாட்டை, மூங்கில் பிரம்பு, ஆணி பதாதைகள் இவற்றுடன் கிருஷ்ணன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களோடு ஊர்வலத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று தட்டாங்குளம் காளியம்மன் கோவிலை வந்தடைந்தது.

    அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி போல் இங்குள்ள தட்டாங்குளத்தில் கோவில் பூசாரி தாதர் சிவபெருமாள் இறங்கி புனித நீராடினார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பினர். புனிதநீர் நீராடி விட்டு ஆண்டு பலன்கள், பக்தர்களுக்கு பலன்களை கூறினார். பின்னர் காளியம்மனை தரிசித்து விட்டு நகரில் உள்ள அனைத்து கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்து கோவிலை வந்தடைந்தார். வீதிகளில் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பூசாரி சிவபெருமாள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • ராஜபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மோட்டார் வாகன காப்பீட்டுத் திட்டம் போன்றவைகளைப் பற்றி பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகளிடம் விளக்கி கூறினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் அறிவுறுத்தலின் பேரில் ராஜபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தலைமையில் 10 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள், மோட்டார் வாகனச் சட்டப்பிரிவுகள், அச்சட்டத்தினைப்; பின்பற்றுதல், சாலை விபத்து கோரிக்கைகள் மற்றும் மோட்டார் வாகன காப்பீட்டுத் திட்டம் போன்றவைகளைப் பற்றி தெளிவாக ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகளிடம் விளக்கிக் கூறினார். ராஜபாளையம் ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற அனுமதி வழங்கிய முதல்வர் டாக்டர் எஸ். அருண் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் நன்றி கூறப்பட்டது.

    • சட்டக் கல்லூரி மாணவர்கள் கோர்ட்டில் நடைபெற்ற உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளைப் பார்வையிட்டனர்.
    • நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு வழக்குகளின் விபரங்கள் பற்றி கோர்ட்டு ஊழியர்கள் சட்டமாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் அதன் நிர்வாகத்தினர் தங்கள் மாணவர்களின் சட்டக் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.டி. முருகேசன் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதி அனுமதிப் பெற்று சிவகிரியில் அமைந்துள்ள கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையைப் பார்வையிட அழைத்துச் சென்றனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் கோர்ட்டில் நடைபெற்ற உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளைப் பார்வையிட்டனர்.

    மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு வழக்குகளின் விபரங்கள் பற்றி கோர்ட்டு ஊழியர்கள் சட்டமாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். முடிவில் கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் சட்ட மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க ஆலோசனைகளை எடுத்துரைத்தார்.

    • தேவிபட்டணம் ஊராட்சியில் தையல் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தையல் கூடம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் ராமராஜ், துணைத்தலைவர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தென்மலை கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர் முருகன், ஊராட்சி செயலர் பொன் செந்தில்குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமணி, பொன்ராஜ், நிர்வாகிகள் பரமேஸ்வரன், பொன்னுச்சாமி, பால்துரை, டேவிட், வைரசாமி, பாலகிருஷ்ணன், தங்கராஜ், இசக்கிமுத்து, மகாலிங்கம், விஜய்குட்டி, சின்னப்பராஜ், உள்ளார் விக்கி மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.
    • அனைத்து தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், மருதவள்ளி, உலகேஸ்வரி, ராஜலட்சுமி, அருணாசலம், விக்னேஷ், கலா, ரமேஷ், கருப்பாயி அம்மாள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் மனுநீதி முகாம் நடைபெற்றது.
    • மனுநீதி முகாமில் 29 பயனாளிகளுக்கு பட்டாவும், முதியோர் உதவித்தொகை 13 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா தென்மலை பாகம் 1 கிராமத்தைச் சார்ந்த வண்ணான்பாறை என்ற ஏ.சுப்பிரமணியாபுரம், அருகன்குளம், செந்தட்டியாபுரம்புதூர், இனாம்கோவில்பட்டி ஆகிய கிராமங்களுக்கு தென்மலை கிராம நிர்வாக அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    முகாமில் முதியோர் உதவித்தொகை, விவசாய பயிர்கள் சம்பந்தமான சலுகைகள், பட்டா மாறுதல் போன்ற கோரிக்கைகள் குறித்து பொது மக்களிடமிருந்து 71 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றிற்கு விளக்கம் மற்றும் தீர்வு காணும் வகையில் தென்மலை பாகம் 1 சமுதாய நலக்கூடத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் மனுநீதி முகாம் நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    முன்னோடி மனுநீதி நாளில் பெறப்பட்ட 71 மனுக்களில் 41 மனுக்கள் ஏற்கப்பட்டன. 30 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுநீதி முகாமில் 29 பயனாளிகளுக்கு பட்டாவும், முதியோர் உதவித்தொகை 13 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. ஹஸ்ரத் பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணை தாசில்தார் மைதீன் பாட்ஷா, சமூக பாதுகாப்பு திட்டத் தாசில்தார் திருமலைச்செல்வி, குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, வாசுதேவநல்லூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன்,

    மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா, பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா, வருவாய் ஆய்வாளர் அய்யனார், கிராம நிர்வாக அலுவலர்கள் லோகநாதன், வீரசேகரன், பால கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×