search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி தாலுகாவில் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    ஜமாபந்தி நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன் நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம்.

    சிவகிரி தாலுகாவில் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • நேற்று கூடலூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இனாம்கோவில்பட்டி, தென்மலை பாகம்-1, பாகம்-2, ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன.
    • குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலமாக ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) 10 நபர்களுக்கும், மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகாவில் சிவகிரி, வாசுதேவநல்லூர், கூடலூர் ஆகிய 3 வருவாய் குறுவட்ட பகுதிகள் உள்ளன. சிவகிரி தாலுகா அலுவலகத்தில் கடந்த 24-ந் தேதி தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கர நாராயணன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.

    முதல் நாளன்று வாசுதேவநல்லூர் வருவாய் குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்கள் சுப்பிரமணியபுரம், சங்கனாபேரி, வாசு தேவநல்லூர், நாரணபுரம் பாகம்-1, பாகம்-2, திருமலாபுரம் ஆகிய கிராமங்களுக்கு சிவகிரி தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. 25-ந் தேதி(வியாழக்கிழமை) சிவகிரி வருவாய் குறுவட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி பாகம்-1, பாகம்-2, சிவகிரி பாகம்-1, பாகம்-2, ராயகிரி பாகம்-1, பாகம்-2, ராமநாத புரம் ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன. நேற்று கூடலூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இனாம்கோவில்பட்டி, தென்மலை பாகம்-1, பாகம்-2, கூடலூர், நெல்கட்டும்செவல், பட்டக்குறிச்சி, அரியூர் ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்களிடம் இருந்து ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், குடிநீர் இணைப்பு, கழிப்பிட வசதி போன்ற கோரிக்கைகள் அடங்கிய 253 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் இயற்கை மரண உதவித்தொகை 9 பேருக்கும், விபத்து மரண உதவித் தொகையாக ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் மற்றும் முதியோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கிட ஆணையும் பிறப்பிக்கப்பட்டன. குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலமாக ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) 10 நபர்களுக்கும், மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் ஆனந்த், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தலைமை உதவி யாளர் செய்யது அலி பாத்திமா மில்லத், சிவகிரி தலைமை யிடத்து துணை தாசில்தார் சரவணன், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுடலை மணி, குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர்கள் கூடலூர் கோபாலகிருஷ்ணன், வாசு தேவநல்லூர் வள்ளி யம்மாள், சிவகிரி சரவணக்குமார், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் வீரசேகரன், ஜெயபிரகாஷ், சங்கரவடிவு, பாக்கியராஜ், உதவியாளர்கள் அழகுராஜா, வேல்முருகன், முனியாண்டி, முத்துசாமி, அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் உரிய தகவல் அளிக்கப்படும் என கூறினார்

    Next Story
    ×