என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிவகிரி அருகே கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா
  X

  வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் அடிக்கல் நாட்டிய காட்சி.

  சிவகிரி அருகே கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேவிபட்டணம் ஊராட்சியில் தையல் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
  • இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  சிவகிரி:

  சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தையல் கூடம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் ராமராஜ், துணைத்தலைவர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தென்மலை கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர் முருகன், ஊராட்சி செயலர் பொன் செந்தில்குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமணி, பொன்ராஜ், நிர்வாகிகள் பரமேஸ்வரன், பொன்னுச்சாமி, பால்துரை, டேவிட், வைரசாமி, பாலகிருஷ்ணன், தங்கராஜ், இசக்கிமுத்து, மகாலிங்கம், விஜய்குட்டி, சின்னப்பராஜ், உள்ளார் விக்கி மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×