எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் சட்ட மாணவர்கள் கோர்ட்டு வழக்கு விசாரணை பார்வையிட்டனர்

சட்டக் கல்லூரி மாணவர்கள் கோர்ட்டில் நடைபெற்ற உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளைப் பார்வையிட்டனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு வழக்குகளின் விபரங்கள் பற்றி கோர்ட்டு ஊழியர்கள் சட்டமாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.
சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.
Published on

சிவகிரி:

வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் அதன் நிர்வாகத்தினர் தங்கள் மாணவர்களின் சட்டக் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.டி. முருகேசன் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதி அனுமதிப் பெற்று சிவகிரியில் அமைந்துள்ள கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையைப் பார்வையிட அழைத்துச் சென்றனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் கோர்ட்டில் நடைபெற்ற உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளைப் பார்வையிட்டனர்.

மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு வழக்குகளின் விபரங்கள் பற்றி கோர்ட்டு ஊழியர்கள் சட்டமாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். முடிவில் கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் சட்ட மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க ஆலோசனைகளை எடுத்துரைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com