search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடற்பருமன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    உடற்பருமன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • நிகழ்ச்சியை எஸ்‌.தங்கப்பழம்‌ கல்வி குழுமத்தின்‌ நிறுவனர்‌ தங்கப்பழம்‌ , தாளாளர்‌ முருகேசன்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.
    • உடற்பருமன்‌ பற்றியும்‌, அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள்‌ பற்றியும்‌ கல்லூரி துணை முதல்வர்‌ மற்றும்‌ பேராசிரியர்‌ கவிதா உரையாற்றினார்‌.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர், எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக கல்லூரி மையத்தில் உடற்பருமன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் தங்கப்பழம் , தாளாளர் முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் வினுதா முன்னிலை வகித்தார். இதில் உடற்பருமன் பற்றியும், அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள் பற்றியும் கல்லூரி துணை முதல்வர் மற்றும் பேராசிரியர் கவிதா உரையாற்றினார்.

    உடற்பருமனுக்கான யோகா பயிற்சிகள், உணவு முறைகள் குறித்து மருத்துவ கல்லூரி மாணவிகள் லோகேஸ்வரி, அபிஸ்ரீவர்ஷினி மற்றும் சண்முகப்பிரியா ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். மேலும் மருத்துவ கல்லூரியின் மாணவ-மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.

    Next Story
    ×