search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "S.Thangapazham law college"

    • ராஜபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மோட்டார் வாகன காப்பீட்டுத் திட்டம் போன்றவைகளைப் பற்றி பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகளிடம் விளக்கி கூறினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் அறிவுறுத்தலின் பேரில் ராஜபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தலைமையில் 10 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள், மோட்டார் வாகனச் சட்டப்பிரிவுகள், அச்சட்டத்தினைப்; பின்பற்றுதல், சாலை விபத்து கோரிக்கைகள் மற்றும் மோட்டார் வாகன காப்பீட்டுத் திட்டம் போன்றவைகளைப் பற்றி தெளிவாக ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகளிடம் விளக்கிக் கூறினார். ராஜபாளையம் ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற அனுமதி வழங்கிய முதல்வர் டாக்டர் எஸ். அருண் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் நன்றி கூறப்பட்டது.

    • சட்டக் கல்லூரி மாணவர்கள் கோர்ட்டில் நடைபெற்ற உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளைப் பார்வையிட்டனர்.
    • நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு வழக்குகளின் விபரங்கள் பற்றி கோர்ட்டு ஊழியர்கள் சட்டமாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் அதன் நிர்வாகத்தினர் தங்கள் மாணவர்களின் சட்டக் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.டி. முருகேசன் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதி அனுமதிப் பெற்று சிவகிரியில் அமைந்துள்ள கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையைப் பார்வையிட அழைத்துச் சென்றனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் கோர்ட்டில் நடைபெற்ற உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளைப் பார்வையிட்டனர்.

    மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு வழக்குகளின் விபரங்கள் பற்றி கோர்ட்டு ஊழியர்கள் சட்டமாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். முடிவில் கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் சட்ட மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க ஆலோசனைகளை எடுத்துரைத்தார்.

    • வாசுதேவநல்லூரில் கே.சுப்பிரமணிய நாடார்- வடிவம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லூரிகள், பள்ளி செயல்பட்டு வருகின்றன.
    • சட்டக்கல்லூரி தொடங்கு வதற்கு மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.

    வாசுதேவநல்லூர்:

    வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    வாசுதேவநல்லூரில் கே.சுப்பிரமணிய நாடார்- வடிவம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, மருத்துவ கல்லூரி, மெட்ரிகுலேசன் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    தற்போது இங்கு புதிதாக எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி தொடங்கு வதற்கு மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று, அதன் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு எஸ்.டி. கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்குகிறார். கல்வி குழுமத்தின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் வரவேற்று பேசுகிறார். தமிழக சபாநாயகர் அப்பாவு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பவானி சுப்புராயன், தாரணி, ஸ்ரீமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

    ஏற்பாடுகளை எஸ்.டி. கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    ×