search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி திறப்பு விழா நாளை நடக்கிறது
    X

    வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி திறப்பு விழா நாளை நடக்கிறது

    • வாசுதேவநல்லூரில் கே.சுப்பிரமணிய நாடார்- வடிவம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லூரிகள், பள்ளி செயல்பட்டு வருகின்றன.
    • சட்டக்கல்லூரி தொடங்கு வதற்கு மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.

    வாசுதேவநல்லூர்:

    வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    வாசுதேவநல்லூரில் கே.சுப்பிரமணிய நாடார்- வடிவம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, மருத்துவ கல்லூரி, மெட்ரிகுலேசன் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    தற்போது இங்கு புதிதாக எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி தொடங்கு வதற்கு மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று, அதன் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு எஸ்.டி. கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்குகிறார். கல்வி குழுமத்தின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் வரவேற்று பேசுகிறார். தமிழக சபாநாயகர் அப்பாவு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பவானி சுப்புராயன், தாரணி, ஸ்ரீமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

    ஏற்பாடுகளை எஸ்.டி. கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×