என் மலர்

  நீங்கள் தேடியது "Chariot"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கயத்தாரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி விழா.
  • அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தேர் பவனி தொடங்கியது.

  கயத்தாறு:

  கயத்தாரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி விழா. இன்று அதிகாலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.

  திருவிழா கடந்த 10 தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மாலை நற்கருணை, திருப்பலி, நல் ஆராதனை, சொற்பொழிவுகள், உட்பட தினமும் பல்வேறு சபை களில் இருந்து கிறிஸ்துவ பாதிரியார்கள் வந்து சொற்பொழிவு ஆற்றினார்.

  இதனைத் தொடர்ந்து கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தேர் பவனி தொடங்கியது. இந்த தேர்பவணி ஆஸ்பத்திரி சாலை, பழைய கடம்பூர் ரோடு, வாரச்சந்தை ரோடு, விமான சாலை வழியாக பல்வேறு ரத விதிகளில் தேர் பவனி வந்தது. வழியெங்கும் பக்தர்கள் உப்பு, மிளகு பெற்றுக் கொண்டு, மாலை அணிவித்து ஜெப வழிபாடு செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.
  • தீர்த்தவாரி- கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

  காரைக்குடி

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இங்கு மூலவராக விநாயகப் பெருமான் காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

  இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளிலிருந்து தினந்தோறும் காலையில் வெள்ளிக் கேடயத்திலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் கற்பக விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

  விழாவில் கடந்த 27-ந் தேதி கஜமுக சூரசம்காரம் நடந்தது. நேற்று குதிரை வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளினார். முன்னதாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

  விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. 4‌.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் கற்பக விநாயகர் வீதி உலா வருகிறார். சிறிய தேரில் சண்டிகேஸ்வரர் வலம் வருகிறார். இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள்.

  தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதன் பின் விநாயகர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த தேரோட்டம் இந்த ஆண்டு இன்று மாலை நடை பெறுவதால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டுள்ளது.

  ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மூலவரான கற்பக விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கும் அதன்படி. நாளை சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று (30-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு கற்பக விநாயகர் காட்சியளிப்பார். இரவு 10 மணி வரை இந்த தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.

  விநாயகர் சதுர்த்தியான நாளை காலை கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பிற்பகலில் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று முதல் பிள்ளையார்பட்டியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதையொட்டி பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.

  வாழப்பாடி:

  சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில், மெழுகு தீபமேந்தி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு,சேலம் மறை மாவட்ட ஆயர். அருட்செல்வம் ராயப்பன் தலைமை வகித்தார். இதனைத்தொடர்ந்து புனித அந்தோணியார், அன்னை மரியாள், புனித பத்தாம் பத்திநாதர் ஆகியோர் திருவுருவத்துடன், 3 திருத்தேர்பவனி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த தேர்பவனி ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவ திருச்சபை பங்குத்தந்தை ஜெயசீலன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரியாங்குப்பத்தை அடுத்துள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது.
  • இந்த கோவிலில் ஆடித் தேரோட்டம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  புதுச்சேரி:

  அரியாங்குப்பத்தை அடுத்துள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது.

  இந்த கோவிலில் ஆடித் தேரோட்டம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு தினசரி இரவு பல்வேறு வகையான அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்று வந்தது.

  விழாவின் முக்கிய நாளான (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. தேரினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

  இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், சம்பத், சிவசங்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.

  இந்த தேரோட்டத்திற்கு புதுவை, தமிழகப் பகுதியில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.

  விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்லால் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசித்தனர். தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

  விழாவையொட்டி அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை தெருவெங்கும் பொதுமக்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

  இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர், மக்கள் குழுவினர், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் செய்து உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் முன்புறம் தீப கம்பம் அமைந்துள்ளது.
  • மூவர்கண்டியம்மன் கோவில் கல் தூண்கள் கொண்டும் மேற்கூரை முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது.

  திருப்பூர் :

  திருப்பூர் சோமவாரப்பட்டியில் மிகவும் பழமை வாய்ந்த மூவர்கண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வடபுறம் உள்ள ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் முன்புறம் தீப கம்பம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் கிழக்குபுறத்தில் திண்ணை மண்டபம் அமைந்துள்ளது.

  வடக்கு பிரகாரத்தில் உள்ள வாயில் நுழையும் போது கல்யாண மண்டபம் அடுத்து மணி மண்டபம் அமைந்துள்ளது. சிற்ப கட்டிட வேலைப்பாடுகள் நிறைந்த மூவர் கண்டியம்மன் கோவில் கல் தூண்கள் கொண்டும் மேற்கூரை முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூண்களிலும் சிற்பக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கூரையில் நடுவிலும் சிற்பங்கள் காணப்படுகிறது. கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து கருவறை மண்டபத்தில் இரு பக்கங்களிலும் உள்ள தூண்களில் காவல் தெய்வங்களின் சிற்பங்கள் காணப்படுகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான தேரை இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தின் போது தேர்திருவீதி உலா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.

  புதுச்சேரி:

  வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.

  ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் வைக்கப்பட்டு, திருத்தேரோட்டம் நடந்தது.

  அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர் இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.
  • திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

  ஸ்ரீவில்லிபுத்தூர்

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது.

  இந்த கோவிலில் ஆடிப்பூரத்தேரோட்ட திருவிழா 5 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

  விழாவையொட்டி தினமும் பல்வேறு அலங்கா ரங்களில் ஆண்டாள்-ரங்க மன்னார் வீதி உலா, ஆன்மீக கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், சொற்பொழிவு நடைபெறுகிறது. விழா 10 நாட்கள் நடைபெறும்.

  முதல் நாள் கொடியேற்றம், 5-ம் நாள் கருட சேவை, 7-ம்நாள் சயன சேவை, 9-ம் நாள் தேரோட்டம் ஆகிய விழாக்களில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 5-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு 5 கருடசேவை கோலாகலமாக நடந்தது. இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு 5 வருட சேவையை வழிபட்டனர்.

  காலையில் மங்களாசனம் நடைபெற்றது. 5-ம்நாள் திருவிழாவில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் சின்ன அன்ன வாகனத்திலும், ரங்க மன்னார் -பெரிய பெருமாள், சுந்தராச பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மண்டையூரில் பூர்ண புஷ்கலாம்பிகா சமேத பெரிய அய்யனார் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது
  • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

  புதுக்கோட்டை,

  புதுக்கோட்டை விராலிமலை ஒன்றியம், மண்டையூரில் பூர்ண புஷ்கலாம்பிகா சமேத பெரிய அய்யனார் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படித்தாரர்கள் சார்பில், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பெரிய அய்யனார் தேரில் எழுந்தருளினார். பின்னர் ேதரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

  தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள், விழா கமிட்டியாளர்கள், மிராஸ்தார்கள் செய்திருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணியளவில் படுகளம், பாரிவேட்டையும் மாலையில் சாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

  கடலூர்:

  கடலூர் திருப்பா திரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது . இக்கோவி லில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 4- ந்தேதி திருமஞ்சனம் மற்றும் அனுக்ஞை , வாஸ்து சாந்தி , அங்குரார்ப்பணம் மற்றும் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது . தொடர்ந்து 5 - ந் தேதி ( செவ்வாய்க்கிழமை ) முக்கிய விழாவான பிரம்ம உற்சவ கொடியேற்று விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 6 - ந் தேதி திருப்பல்லக்கும் , 7 - ந் தேதி திருப்பல் லக்கு - ராஜகோபாலன் சேவையும் 8 - ந் தேதி விமானம் வேணுகோபாலன் சேவையும் , தங்க கருட சேவையும், 9 - ந் தேதி நாச்சியார் திருக்கோலம் - ஊஞ்சல் சேவையும், 10 - ந் தேதி திருப்பல்லக்கும் , 11 - ந் தேதி சூர்ணாபிஷேகம் , 108 கலச திருமஞ்சனமும், 12 - ந் தேதி வெண் ணெய்த்தாழி உற்சவம் , வேடுபரி உற்ச வமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய சிகர விழாவான தேரோட்டம் இன்று 13 - ந் தேதி ( புதன்கி ழமை ) காலையில் நடைபெற்றது.

  காலையில் வரதராஜ பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் முக்கிய மாட வீதி வழியாக தேர் வலம் வந்தது. இதனை தொடர்ந்து தீர்த்தவாரி யும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயப்பட்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இக்கோவில் கட்டி சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது . ஆனால் இது வரை கோவிலில் தேரோட்டம் நடத்தியது கிடையாது . தற்போது தான் முதல் முறையாக தேரோட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் . அதனை தொடர்ந்து 14 மற்றும் 15 - ந் தேதிகளில் திருமஞ்சனமும் , திருக்கல் யாண உற்சவமும் , 16 - ந் தேதி விடை யாற்றி உற்சவமும் நடக்கிறது . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மீனாட்சி-சொக்கநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.
  • சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை 4 ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

  அருப்புக்கோட்டை

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காைல, மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று காலை விமர்சியாக நடந்தது.

  மாலையில் மணக்கோலத்தில் சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து வாத்தியங்கள் முழங்க, தேரோட்டம் நடந்தது. இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் நகர் மன்ற தலைவர் சுந்தரலெட்சுமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவபிரகாசம், முன்னாள் யூனியன் சேர்மன் சுப்பாராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை 4 ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஆனி பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • திருவிழாவின் 8-ம் நாளான இன்று தங்க சப்பரத்தில் கங்காளநாதா் தங்க திருஓட்டுடன் திருவீதி புறப்பாடு நிகழ்வு நடக்கிறது.

  நெல்லை:

  நெல்லை டவுன் நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் கோவிலில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஆனி பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும், பக்தி இன்னிசை, சமய சொற்பொழிவு, சிறுவர்களின் பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

  இதனையொட்டி விழாவின் 8-ம் நாளான இன்று தங்க சப்பரத்தில் கங்காளநாதா் தங்க திருஓட்டுடன் திருவீதி புறப்பாடு நிகழ்வு நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

  இ்ன்று காலையில் நடராஜா் முதலில் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், தொடா்ந்து பச்சை சாத்தி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

  தொடர்ந்து மாலையில் அன்னபூரணிக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், கங்காளநாதராக திாிசடையும், தங்க திருஓடும் கையில் ஏந்தி தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறாா்.

  அப்போது பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை கங்காளநாதா் திருஓட்டில் செலுத்துவார்கள். அதன்பின்னர் பஞ்ச வாத்தியங்கள் முழங்க குடைவரை வாசல் தீபாராதனைக்கு பின் மங்கள வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நடைபெறும்.

  இரவில் சுவாமி தங்க கைலாச பா்வத வாகனத்திலும், அம்மன் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி தோ் கடாட்சம் கண்டருளி வீதி உலா வரும் நிகழ்வு நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

  இதனையொட்டி தேைர தயார்படுத்தும் பணி முடிவடைந்து விட்டது. தேரோட்டம் நாளை நடைபெறுவதையொட்டி கோவிலை சுற்றி உள்ள 4 ரதவீதிகளிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

  கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிப்பதற்காக இன்று தேர் மற்றும் அதன் வடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 11-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • 10-ந்தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 11-ந்தேதி தேரோட்டம், நடைபெற உள்ளது.

  அருப்புக்கோட்டை

  தமிழகத்தில் சில மாதங்களாக தேர் திருவிழாவின் போது உயிர் பலிகள் மற்றும் விபத்துக்கள் நடந்தன. குறிப்பாக தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் தேரோட்ட திருவிழாவில் சிறுவன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் கோவில் திருவிழாக்கள் மற்றும் தேரோட்ட விழாக்களில் விபத்துகள் நடந்தன.

  இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மீனாட்சி- சொக்கநாதர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம், அடுத்த நாள் தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

  தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கொரோனா தொற்று காரணமாக 2 வருடங்களாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த கோவிலில் கடந்த 1-ந் தேதி கொடியேற்றதுடன் திருவிழா ஆரம்பமானது.

  10-ந்தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 11-ந்தேதி தேரோட்டம், நடைபெற உள்ளது. தேரோட்டமானது சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை, 4 ரத வீதிகளில் மீனாட்சி- சொக்கநாதர் பவனி வருவார்கள்.

  சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தேரோட்ட விழாவில் அசம்பாவிதமும், விபத்துகளும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தி திருவிழாவை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.