என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா
  X

  5 கருட சேவைகளில் காட்சி அளித்த ஆண்டாள்-ரங்க மன்னார், பெரியஆழ்வார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன்.

  ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.
  • திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

  ஸ்ரீவில்லிபுத்தூர்

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது.

  இந்த கோவிலில் ஆடிப்பூரத்தேரோட்ட திருவிழா 5 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

  விழாவையொட்டி தினமும் பல்வேறு அலங்கா ரங்களில் ஆண்டாள்-ரங்க மன்னார் வீதி உலா, ஆன்மீக கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், சொற்பொழிவு நடைபெறுகிறது. விழா 10 நாட்கள் நடைபெறும்.

  முதல் நாள் கொடியேற்றம், 5-ம் நாள் கருட சேவை, 7-ம்நாள் சயன சேவை, 9-ம் நாள் தேரோட்டம் ஆகிய விழாக்களில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 5-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு 5 கருடசேவை கோலாகலமாக நடந்தது. இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு 5 வருட சேவையை வழிபட்டனர்.

  காலையில் மங்களாசனம் நடைபெற்றது. 5-ம்நாள் திருவிழாவில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் சின்ன அன்ன வாகனத்திலும், ரங்க மன்னார் -பெரிய பெருமாள், சுந்தராச பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

  Next Story
  ×