புனித பத்தாம் பத்திநாதர் ஆலய தேர் பவனி

சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.
புனித மரியாள் மற்றும் அந்தோனியார் திருத்தேர் பவனி நடந்தபோது எடுத்த படம்.
புனித மரியாள் மற்றும் அந்தோனியார் திருத்தேர் பவனி நடந்தபோது எடுத்த படம்.
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில், மெழுகு தீபமேந்தி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு,சேலம் மறை மாவட்ட ஆயர். அருட்செல்வம் ராயப்பன் தலைமை வகித்தார். இதனைத்தொடர்ந்து புனித அந்தோணியார், அன்னை மரியாள், புனித பத்தாம் பத்திநாதர் ஆகியோர் திருவுருவத்துடன், 3 திருத்தேர்பவனி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த தேர்பவனி ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவ திருச்சபை பங்குத்தந்தை ஜெயசீலன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com