என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி- ராயகிரியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டுரை, கவிதை போட்டி
    X

    போட்டிகள் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சிவகிரி- ராயகிரியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டுரை, கவிதை போட்டி

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி சிவகிரி பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
    • தலா 3 நபர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு தென்காசி மகளிர் திட்டம் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    சிவகிரி:

    தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி சிவகிரி பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி திட்ட அலுவலர் சாந்தி, சமுதாய அமைப்பாளர் செல்வகுமார், சமுதாய ஒருங்கிணைப்பாளர் காளி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    போட்டியில் சிவகிரி பகுதியைச் சேர்ந்த 122 குழுவிற்கான கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் தலா 3 நபர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு தென்காசி மகளிர் திட்டம் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதனைப் போன்று ராயகிரி பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற போட்டியில் அப்பகுதியைச் சேர்ந்த 75 மகளிர் சுய உதவிக்குழுக்கள் கட்டுரை, கவிதை, ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தலா 3 நபர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு தென்காசி மகளிர் திட்டம் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குறிஞ்சி மகேஷ், செயல் அலுவலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் விவேகானந்தன், கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் பத்திரகாளி, அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×