search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shubman Gill"

    • சாரா அலி கான் மற்றும் சுப்மான் கில் ஒருநாள் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
    • கில் மைதானத்தில் விளையாடும் போது சாரா என்ற பெயரைக் கூறி அவரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

    இந்திய அணியின் தற்போது நட்சத்திர கிரிக்கெட் வீரராக சுப்மன் கில் பார்க்கப்படுகிறார். 3 வடிவ (டெஸ்ட், ஒருநாள், டி20) கிரிக்கெட்டிலும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

    கிரிக்கெட் தவிர மற்றொரு காரணத்திற்காகவும் கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் இவரையும் சாரா டெண்டுல்கர் மற்றும் சாரா அலிகான் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில காலமாக, சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்ததாகவும் மேலும் சிலர் அதை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்ததாகவும் நெட்டிசன்கள் குழப்பி வந்தனர்.

    முன்னதாக, சாரா அலி கான் மற்றும் சுப்மான் கில் ஒருநாள் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது அனைவராலும் பகிரப்பட்டு பெரிய அளவில் பேசப்பட்டது.

    ஆனால் தங்கள் டேட்டிங் வதந்திகள் குறித்து மூவரும் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். அதே வேளையில், அவர் மைதானத்தில் விளையாடும் போது சாரா என்ற பெயரைக் கூறி அவரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

    இந்நிலையில் சுப்மன் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் பிரிந்ததாகக் தகவல் வெளியாகி உள்ளது. சாரா டெண்டுல்கருடனான டேட்டிங் வதந்திகளுக்கு மத்தியில், சாரா கானும் கில்லும் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டனர். மற்றும் அவர்களின் சமீபத்திய நடவடிக்கை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    • 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
    • மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சதம் அடித்த ஷூப்மான் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இதில், 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர். தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார்.

    இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், மூன்றாவது சதம் அடித்த ஷூப்மான் கில் களத்தில் தனது பேட்டை முத்தமிட்டு கொண்டாடினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சதம் அடித்த ஷூப்மான் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    விராட் கோலி, ஜோஸ் பட்லருக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் மூன்று சதங்கள் அடித்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
    • முதலில் ஆடிய குஜராத் அணியின் ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.

    இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின், மழை நின்ற பிறகு ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர்.

    தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கில்லின் சகோதரியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது டெல்லி மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
    • சுப்மன் கில்லின் சகோதரியை அவமானப்படுத்துவது மிகவும் வெட்கக்கேடானது.

    புதுடெல்லி:

    ஐபிஎல்-2023 இன் கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. கடைசி ஓவரில் ஏற்பட்ட இந்த தோல்வியுடன், நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பயணம் முடிவுக்கு வந்தது. குஜராத்தின் வெற்றியின் பலன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கிடைத்தது. குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.

    பெங்களூர் பிளே ஆப்பில் இருந்து வெளியேறியவுடன், சமூக ஊடகங்களில் சுப்மான் கில் மற்றும் அவரது சகோதரியை டிரோல் செய்யத் தொடங்கினர். இதில், தங்களை ஆர்சிபி மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ரசிகர்கள் என வர்ணித்தவர்களும் இடம் பெற்றனர்.

    கில்லின் சகோதரி ஷஹனீல் கில் குறித்து சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இப்போது டெல்லி மகளிர் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால் இதுபோன்ற டிரோலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி உள்ளார்.

    இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து, சிலர் அவரது சகோதரிக்கு எதிராக தவறான கருத்துக்களை தெரிவித்தனர். இப்போது டெல்லி மகளிர் ஆணையம் இதுபோன்ற டிரோலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.

    சுவாதி மாலிவால் பல டுவீட்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார். கில்லின் சகோதரியை துஷ்பிரயோகம் செய்பவர்களை ஒரு போதும் விட்டுவைக்க முடியாது என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். சுப்மான் கில்லின் சகோதரியை அவமானப்படுத்துவது மிகவும் வெட்கக்கேடானது. முன்னதாக, விராட் கோலியின் மகளை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம்.

    கில்லின் சகோதரியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது டெல்லி மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என கூறி உள்ளார்.

    கில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் உட்பட 680 ரன்கள் குவித்துள்ளார். 

    • நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    • எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    பெங்களூரு:

    பெங்களூரு அணி வெளியேறுவதற்கு குஜராத் தொடக்க வீரர் சுப்மன்கில் காரணமாக இருந்தார். அவரது அதிரடி சதத்தால் குஜராத் 198 ரன் இலக்கை எடுத்து பெற்றது. அவர் 52 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சுப்மன்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை சென்னையில் சந்திக்கிறோம். சி.எஸ்.கே.வை சென்னையில் எதிர்கொள்வது பரபரப்பாக இருக்கும். சேப்பாக்கம் ஆடுகளத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெங்களூர் அணிக்கு எதிரான சதம் சிறப்பானது. எனது ஷாட் மிகுந்த திருப்தியை அளித்தது.

    இவ்வாறு சுப்மன்கில் கூறியுள்ளார். அவர் இந்த சீசனில் 680 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    • குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.
    • சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத அணிகள் மோதின. இதில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கேமரூன் க்ரீன் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.

    இதனையடுத்து இரவு நடந்த மற்றோரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு- குஜாராத் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் ஆடிய பெங்களூரு அணி தோல்வியடைந்தது.

    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றாலும் பெங்களூரு அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் தொடரில் 4-வது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தகுதி பெற்றது.

    பெங்களூரு அணிக்கு எதிராக பேட்டிங் ஆடிய குஜராத் அணியில் சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    இந்நிலையில், குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.

    அதில், கேமரூன் க்ரீன் மற்றும் சுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடினர். மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஐதராபாத் அணிக்கு எதிராக சுப்மன் கில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை கில் நேற்று பதிவு செய்தார்.

    ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியும் குஜராத் அணியும் நேற்று மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.

    மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிக்சர் அடிக்காமல் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் நீண்ட கால சாதனையை கில் முறியடித்துள்ளார்.

    2010-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் போது டெல்லி அணிக்கு எதிராக 23 பந்துகளில் எந்த சிக்சரும் இல்லாமல் சச்சின் அரைசதம் அடித்திருந்தார். கில் நேற்றைய போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 22 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார்.

    ஒட்டுமொத்தமாக, அவர் இந்த சீசனில் 13 போட்டிகளில் 145-க்கும் அதிகமான ஸ்டிக்-ரேட்டில் 576 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    கில் 50 ரன்களை எட்டிய பிறகு தனது இன்னிங்சில் மேலும் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை அடித்தார். அவர் குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேனின் முதல் சதத்தைப் பதிவு செய்தார். 

    • நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை சுப்மன் கில் பதிவு செய்தார்.
    • சுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி சும்பன் கில் சதத்தால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.

    தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார். இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை சுப்மன் கில் பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

    அதில், உனக்கு திறமை இருக்கிறது. அடுத்த தலைமுறையினரை நீ வழி நடத்தி செல்ல வேண்டும் என அவர் கூறினார்.

    • குஜராத் அணி வீரர் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.
    • புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 27 ரன்களை எடுத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டன.

    குஜராத் அணி வீரர் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். குஜராத் அணிக்காக முதல் சதம் அடித்த வீரரும் கில். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 27 ரன்களை எடுத்துள்ளார்.

    இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் எதிரணி ஜோடி சுப்மன் கில் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆவர். ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை.

    ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் கூட, இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே இது நடந்துள்ளது. சையது முஷ்டாக் அலி டிராபியில் கர்நாடகாவின் கருண் நாயர் (111), தமிழகம் சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் (5/30) இந்த சாதனையை படைத்தனர்.

    2021-ல் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா இடையேயான டி20 சர்வதேச ஆட்டத்தில் இதுபோன்ற மற்றொரு நிகழ்வு நடந்தது. பெல்ஜியத்தின் சபர் ஜாகில் (100*) மற்றும் ஆஸ்திரியாவின் அகிப் இக்பால் (5/5) ஜோடி சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு தனித்துவமான சாதனை படைக்கப்பட்டது.

    • குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை.
    • 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் கேஎல் ராகுல் சதமடித்து 149 ரன்கள் அடித்தார்.

    உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

    அதில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் ரோகித் சர்மாவுடன் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ளும் அளவுக்கு சுப்மன் கில்லிடம் டெக்னிக்கல் அளவில் குறைபாடுகள் இருப்பதாகவும் கோப்பையை வெல்ல ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக ராகுல் தான் விளையாட வேண்டுமென்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வரலாற்றை மறந்து விட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய டெக்னிக்கில் சில குறைபாடுகளை நான் பார்த்துள்ளேன்.

    குறிப்பாக பந்து நகரும் போது அவர் தன்னுடைய கைகளை பந்தை நோக்கி சற்று அதிகமாக எடுக்கிறார். அதனால் அடிக்கடி எட்ஜ் கொடுக்கிறார். எனவே கில்லுக்கு பதிலாக ராகுல் தேர்வு செய்யப்படுவாரா என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் நான் இந்திய அணியின் தேர்வு குழுவில் இல்லை.

    ஆனால் ஃபைனலுக்கு பின்பாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு அந்த போட்டிக்கான அணியை தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் இறுதிபோட்டி எனும் ஒரு போட்டியில் வெல்வதற்கான சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    என்று அவர் கூறினார்.

    அவர் கூறுவது போல 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய கில் 28, 8 என 2 இன்னிங்சிலும் சுமாராகவே செயல்பட்டார்.

    மறுபுறம் 2021-ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது பெற்ற ராகுல் 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் சதமடித்து 149 ரன்கள் விளாசிய அனுபவத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்துவிதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார்.
    • தற்போது ஐ.பி.எல். போட்டியிலும் அபாரமாக ஆடி வருகிறார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல அதிரடி தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:-

    இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அனைத்துவிதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார்.

    அவர் சமீபத்தில் டெஸ்ட்டில் 2 சதமும் ஒரு நாள் போட்டியில் 4 சதமும், 20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரு சதத்தையும் அடித்தார். தற்போது ஐ.பி.எல். போட்டியிலும் அபாரமாக ஆடி வருகிறார். அடுத்த 10 ஆண்டுகள் வரை அவர் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.
    • இவர் விராட் கோலி சாதனையை முறியடிப்பார் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 16 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 973 ரன்கள் சேர்த்தார்.

    இந்நிலையில், கோலி சாதனையை முறியடிக்க யாருக்கு வாய்ப்புள்ளது என இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

    என்னைப் பொறுத்தவரை விராட் கோலியின் சாதனையை தகர்ப்பது மிகவும் கடினம். ஏனெனில் ஒரு சீசனில் 900 ரன்களுக்கு மேல் எடுப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் இச்சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தால் அது ஒரு தொடக்க ஆட்டக்காரரால் தான் முடியும். ஏனெனில் தொடக்க ஆட்டக்காரருக்கு தான் அதிகமான ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

    அந்த வகையில் கோலியின் சாதனையை முறியடிக்கும் திறமை குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷுப்மன் கில்லுக்கு இருப்பதாக கருதுகிறேன். ஏனெனில் அவர் தொடக்க ஆட்டக்காரர். நல்ல பார்மில் உள்ளார். ஆடுகளங்களும் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளன.

    அவர் அடுத்த 2-3 இன்னிங்சில் தொடச்சியாக 80-100 ரன்கள் வீதம் எடுத்தால் மொத்தம் 300-400 ரன்கள் சேர்த்து விடுவார். தொடக்க ஆட்டக்காரர் கூடுதலாக இரண்டு ஆட்டங்கள் ஆடும்போது இச்சாதனையை முறியடிக்க சாத்தியம் உண்டு என தெரிவித்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.

    ×