search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Matthew Hayden"

    • இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும்.
    • 2013-க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம்.

    டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் ஜூன் 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது. அது இங்கிலாந்தில் இருக்கும் வழக்கமான பவுன்ஸ் மைதானங்களை விட சற்று அதிக சவாலாகவே இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்காது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிகமாக கை கொடுக்காது.

    எனவே பொதுவான அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா எப்படி விளையாடப் போகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறேன். ஒருவேளை இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும்.

    மேலும் 2013-க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம். அது திறமையைப் பற்றிய கேள்வி கிடையாது. மாறாக எந்த மனதுடன் அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தது. இப்போட்டியின் முடிவை பற்றி கவலைப்படாமல் செயலில் சிறப்பாக செயல்படுங்கள் என்பதே இந்திய அணிக்கு என்னுடைய ஆலோசனையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்துவிதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார்.
    • தற்போது ஐ.பி.எல். போட்டியிலும் அபாரமாக ஆடி வருகிறார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல அதிரடி தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:-

    இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அனைத்துவிதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார்.

    அவர் சமீபத்தில் டெஸ்ட்டில் 2 சதமும் ஒரு நாள் போட்டியில் 4 சதமும், 20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரு சதத்தையும் அடித்தார். தற்போது ஐ.பி.எல். போட்டியிலும் அபாரமாக ஆடி வருகிறார். அடுத்த 10 ஆண்டுகள் வரை அவர் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சரிவில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எந்த நேரத்திலும் நான் உதவத் தயார்.
    • ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சியையும், அறிவுரையையும் வழங்க தயாராக இருக்கிறேன்.

    பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 3 நாட்களுக்குள் சுருண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளதால் இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது.

    அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தையும் ஏறத்தாழ இந்தியா உறுதி செய்துள்ளது. முதல் 2 போட்டிகளும் முதல் 3 நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டன. ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சரிவில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எந்த நேரத்திலும் நான் உதவத் தயார். எப்போது என்னிடம் இதுபற்றி கேட்டாலும் சம்மதம் என்றுதான் கூறியுள்ளேன்.

    சிறந்த அறிவுரை வேண்டும் என்றால் முன்னாள் வீரர்களை கிரிக்கெட் நிர்வாகம் தனிமைப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும்.

    ஆஸ்திரேலிய வீரர்களுக்குபயிற்சியையும், அறிவுரையையும் வழங்க நான் தயார். மேலும் இந்திய ஆடுகளங்களில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் நான் அவர்களுக்கு பயிற்சி தருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும்.
    • இந்த இளைஞர்கள் குழு உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடிய விதம் குறித்து பெருமைப்படுவதாக அந்த அணியின் ஆலோசகர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் ட்விட்டரில் பதிவேற்றிய வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

    ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர்கள் தங்களால் இயன்றதை முயற்சித்தனர். அது கைதட்டலுக்கு தகுதியானது என்று நான் நினைக்கிறேன். இந்த தொடரில் நாங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது, நீங்கள் காயப்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அது வலிக்கிறது, ஆனால் உண்மை என்னவென்றால் நாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

    உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த தொடரில் 100% உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கியதற்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி செல்லும் நேரத்தில், முடிவுகள் மிகவும் சாதகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த இளைஞர்கள் குழு உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    ஹர்திக் பாண்டியாவை விட மார்கஸ் ஸ்டோனிஸ் சிறந்த ஆல் ரவுண்டர் என ஆஸ்திரேலியா முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். #INDvAUS #MarcusStoinis #HardikPandya #MatthewHayden
    மும்பை:

    இந்தியா- ஆஸ்திரேலிய தொடர் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:-



    இந்திய தொடக்க வீரர் தவானுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கும்மின்ஸ் நெருக்கடியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். யுசுவேந்திர சாஹால் மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

    ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் உலகின் சிறந்த ஆல் ரவுண்டராக மேம்பட்டு வருகிறார். ஹர்திக் பாண்டியாவை விட அவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #INDvAUS #MarcusStoinis #HardikPandya #MatthewHayden
    குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற விபத்தில் சிக்கி உயிர் தப்பினேன் என்று ரத்தக் காயம் படத்துடன் இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு ஹெய்டன் தெரிவித்துள்ளார். #Hayden
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் மேத்யூ ஹெய்டன். இடது கை தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஹெய்டன் மொத்தம் 103 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக 15 வருடங்கள் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

    கிரிக்கெட் மட்டுமின்றி சர்ஃபிங் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் சர்ஃபிங் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஆஸ்திரேலியாவின் கடலோர நகரமான குயின்ஸ்லாந்தில் வசித்து வந்ததால் இதில் அவருக்கு சிறு வயது அதிக ஆர்வம் உண்டு.



    குயின்ஸ்லாந்து நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள ஸ்டார்ப்ரோக் தீவில் தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்றுள்ளார். அங்கு தனது மகனுடன் சர்ஃபிங்கில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மணல் குவியலில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஹெய்டன் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக லேசான காயத்தால் உயிர் தப்பினார்.

    கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் எலும்பு முறிவு மற்றும் தசைகள் கிழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ரத்தக் காயத்துடன் உள்ள படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தகவலை கூறியுள்ளார்.
    ×