என் மலர்
கிரிக்கெட் (Cricket)

My Boy: மானத்தை காப்பாற்றிய ரூட்.. நிர்வாண சவாலில் வென்ற ஹேடன் வீடியோ வெளியிட்டு பரவசம்
- இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
- ஹேடனின் மகள், எங்கள் கண்கள் தப்பித்தது என பதிவிட்டார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்றுநடந்தது. இதில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்து. தொடர்ந்து 3ம் நாள் முடிவில் நியூசிலாந்து 417/4 என்ற அளவில் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து சாதித்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தனது முதல் சத்தத்தை ரூட் பதிவு செய்தார்.
முன்னதாக ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார். தற்போது ரூட் சதம் அடித்ததால் ஹைடன் தப்பித்தார்.
இந்நிலையில் சதம் அடித்து மானத்தை காப்பாற்றிய ரூட்-க்கு தற்போது வர்ணனையாளராக உள்ள ஹைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி எக்ஸ்-இல் பகிர்ந்த வீடியோவில், ஹேடன் நிம்மதியை வெளிப்படுத்தினார்.
ரூட்டின் முயற்சியைப் பாராட்டிய அவர், "வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவில் நீங்கள் சதம் அடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சதம் அடிக்க நீண்ட நேரம் பிடித்துவிட்டது. நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை. அதனால், மீண்டும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
முன்னதாக ஹேடனின் மகள், "எங்கள் கண்கள் தப்பித்தது" என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






