search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தனது நீண்ட கால சாதனையை கோலி முறியடிப்பார்- மேத்யூ ஹைடன்
    X

    தனது நீண்ட கால சாதனையை கோலி முறியடிப்பார்- மேத்யூ ஹைடன்

    • நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 708 ரன்களை குவித்துள்ளார்.
    • ஏனெனில் கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் எப்படி செயல்பட்டாரோ அதே ஃபார்மை இந்த ஐபிஎல் சீசனிலும் தொடர்ந்து வருகிறார்.

    17-வது சீசன் ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளது. அதன்பைன் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கொத்தா மற்றும் ஐதராபாத் அணிகளும், எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதி முடிவின் போது புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, அதன்பின் அடுத்தடுத்து தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

    குறிப்பாக அணியின் மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 708 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் தனது சொந்த சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய சாதனை நிகழ்த்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி தனது இரண்டாவது சிறந்த ஐபிஎல் சீசனைக் கொண்டாடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஏனெனில் கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் எப்படி செயல்பட்டாரோ அதே ஃபார்மை இந்த ஐபிஎல் சீசனிலும் தொடர்ந்து வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, இது அவர் இந்த விளையாட்டின் மீது வைத்துள்ள ஆர்வம், அர்பணிப்பு மற்றும் காதலை இது வெளிக்காட்டுகிறது.

    இவ்வாறு ஹைடன் கூறினார்.

    முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய கோலி, 973 ரன்களைக் குவித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×