என் மலர்
நீங்கள் தேடியது "3rd century"
- 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
- மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சதம் அடித்த ஷூப்மான் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இதில், 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர். தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.
முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார்.
இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், மூன்றாவது சதம் அடித்த ஷூப்மான் கில் களத்தில் தனது பேட்டை முத்தமிட்டு கொண்டாடினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சதம் அடித்த ஷூப்மான் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
விராட் கோலி, ஜோஸ் பட்லருக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் மூன்று சதங்கள் அடித்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.