search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senkottai"

    • புளியரையில் வருகிற 26-ந்தேதி காலை 10 மணியளவில் அ.தி.மு.க. சார்பில் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜ லட்சுமி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கனிமவள கொள்ளையை கண்டித்து தென்காசி வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, ஜெயலலிதா பேரவை செயலாளர், ஆர்.பி.உதய குமார் தலைமையிலும், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடைய நல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வமோகன் தாஸ்பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும், புளியரையில் வருகிற 26-ந்தேதி காலை 10 மணியளவில் அ.தி.மு.க. சார்பில் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜ லட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன் உள்பட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செய லாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

    • செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் ஷிபா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா மற்றும் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது.
    • முகாமில் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று சென்றனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் ஷிபா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா மற்றும் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஜமாஅத் தலைவா் அகமது மீரான் தலைமை தாங்கினார்.கடையநல்லுார் கே.எம்.எஸ். மருத்துவமனை நிர்வாகக்குழு தலைவா் அப்துல்ரஷீத் முன்னிலை வகித்தார். வல்லம் நேஷனல் பள்ளி தாளாளா் அப்துல்மஜீத் வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து வல்லம் ஜூம்மா மஜீத் பள்ளிவாசல் தலைமை இமாம் சுல்தான் ஷிபா மெடிக்கல் சென்டரை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்னா் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண்பரிசோதனை முகாமை குற்றாலம் முத்துநகர் அரிமா சங்க பட்டயத்தலைவா் சண்முகநாதன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

    முகாமில் நெல்லை டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை கண் மருத்துவா் அபினயா தலைமையில் மருத்துவ குழுவினா் இலவச கண்பரிசோதனை மற்றும் மருந்து ,கண்கண்ணாடி, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா். நிகழ்ச்சியில் முதன்மை முகாம் மேலாளா் மாணிக்கம், விழிஒளி ஆய்வாளா் சிஞ்சு, உதவி விழிஒளி ஆய்வாளா்கள் மனோ, ஹசீனா உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று சென்றனா். ஷிபா மெடிக்கல் சென்டர் நிர்வாகி பீர் முகம்மது நன்றி கூறினார்.

    • செங்கோட்டை நுழைவுவாயில் மற்றும் செங்கோட்டை-பாவூர்சத்திரம் நெடுஞ்சாலை வளைவு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • இதனை சரிசெய்ய போலீசார் கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் கட்டுப்பாடு விதித்தல், போக்குவரத்து மாற்றம் போன்ற முறைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லையில் மிக முக்கிய பகுதியாக செங்கோட்டை நகராட்சி விளங்கி வருகிறது. இந்த வழியாக கேரளாவுக்கு நாள்தோறும் அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவை ஆயிரக்க ணக்கான வாகனங்களில் இரவு, பகலாக சென்று வருகிறது.

    போக்குவரத்து நெரிசல்

    கடந்த சில மாதங்களாக தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து எம்-சாண்ட் மணல், ஜல்லி கற்கள் என அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக செங்கோட்டை நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டை நுழைவுவாயில் மற்றும் செங்கோட்டை-பாவூர்சத்திரம் நெடுஞ்சாலை வளைவு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் 2 மாநில பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைகிறது.

    இதனை சரிசெய்ய போலீசார் போராடி வரும் நிலையில் கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் கட்டுப்பாடு விதித்தல், போக்குவரத்து மாற்றம் போன்ற முறைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கைகளை சம்பந்தபட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு செங்கோட்டை முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சீவநல்லூர் சட்டநாதன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
    • அதில் , பள்ளியை அரசுடமையாக்கி, அரசு பள்ளியாக மாற்றி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார்.

    செங்கோட்டை:

    தென்காசி அருகே இலத்தூரில் அரசு உதவி பெறும் லட்சுமி அரிகர உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளி மூடப்படு வதா கவும், மாணவ-மாணவிகள் சேர்க்கை நிறுத்தப்படு வதாகவும் பள்ளியின் முன்பு அறிவிப்பு ஒட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகி ன்றனர்.

    இந்நிலையில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு செங்கோட்டை முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சீவநல்லூர் சட்டநாதன் கோரிக்கை மனு அனுப்பி யுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    லட்சுமி ஹரிஹர உயர்நிலைப் பள்ளியானது கடந்த 1956-ம்ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் 7 கிலோமீட்டர் தூரம் வரை வேறு உயர்நி லைப்பள்ளிகள் இல்லாத நிலையில் பண்பொழி, வடகரை, அச்சன்புதூர் பேரூராட்சிகள். நெடுவயல், கொடிக்குறிச்சி, சீவ நல்லூர், குத்துக்கல் வலசை, கணக்க ப்பிள்ளை வலசை ஊராட்சி களில் இருந்து மாணவ, மாணவிகள் இந்த பள்ளிக்கு வந்து தான் கல்வி படித்து சென்றனர்.

    இந்நிலையில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியரிடம் வரும் கல்வி ஆண்டு முதல் இப்பள்ளி செயல்படாது. புதிய மாண வர்கள் சேர்க்கை கூடாது என கூறியதாகவும், மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பள்ளியின் முன்பு அறிவிப்பு ஒட்டப்பட்ட தாகவும் தெரிகிறது. இது ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பள்ளியை அரசுடமையாக்கி, அரசு பள்ளியாக மாற்றி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த கோரிக்கை மனுவின் நகலை தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர், மாநில பள்ளிக் கல்வி துறை செயலர், மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.

    • செங்கோட்டை கோவிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • இதில் 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு நடத்தினர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ஆரியநல்லூர் தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவிலில் கொடைவிழாவை யொட்டி நாடு செழிக்கவும், மக்கள் நோய்- நொடி இல்லாமல் இருக்கவும், மழை வேண்டியும், கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக விடுபடுவதுடன் புதிய நோயில் இருந்து மக்களை காத்திட வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    பூஜையையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு நடத்தினர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சோந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதுார் நெடுவயல் ஸ்ரீசிவசைலநாத நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 2022-23-ம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி கணேஷ்ராம், அச்சன்புதுார் பேரூராட்சி மன்ற தலைவா் டாக்டா் சுசிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தலைமைஆசிரியா் சுதாநந்தினி வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி பள்ளியின் சார்பில் தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் தலைமைஆசிரியா் கார்த்திக்கேயன், வெள்ளத்துரை, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் தம்புசாமி, மணிகண்டன் மற்றும் இசக்கித்துரை, இசக்கி, சந்திரன், அருட்செல்வம், உள்பட பலா் கலந்து கொண்டனா். மேலும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம், தலைமைஆசிரியா், ஆசிரியா்கள் சார்பாகவும் பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியா் பிரபாகரன் நன்றி கூறினார்.

    • செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • நேற்றும் மாலை 6 மணி முதல் சுமார் 1 மணி நேரம் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் மழை பொழிகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலை 6 மணி முதல் சுமார் 1 மணி நேரம் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரத்திற்கு இணையாக வெயில் அடித்து வந்த நிலையில், இந்த தொடர் மழையால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி செங்கோட்டையில் 23.8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசியை அடுத்த ஆய்க்குடியில் 8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை பகுதியில் சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேலும் குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 17.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தற்போது குண்டாறு அணையில் 19.50 அடி நீர் இருப்பு உள்ளது.

    கடனா, ராமநதி அணைகளில் நீர்மட்டம் தலா 31 அடி உள்ளது. பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 10.75 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    • பஸ் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.
    • கொட்டாரம் ரோட்டில் கூட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி ஆணையாளா் ஜெயப்பிரியா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி பஸ் நிலையத்தில் பொதுமக்களுடன் இணைந்து சுகாதார விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் பஸ் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.

    அதனைதொடா்ந்து மெயின்ரோட்டில் உள்ள மின்கம்பங்களில் கட்டி இருக்கும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது. பின்னர் கொட்டாரம் ரோட்டில் கூட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு ரத வீதியில் கட்டிடக்கழிவுகள் இருக்கும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    • நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் குண்டாறு அணையில் குளிக்க சென்றார்.
    • அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சகதியில் அவரது கால் சிக்கிக்கொண்டது.

    நெல்லை:

    செங்கோட்டையை அடுத்த கண்ணுப்புளி மெட்டு பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் சேலம் மாவட்டம் காட்டு வளவு பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது 35) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தனது மனைவி பிரியாவுடன் அங்கு தங்கியிருந்து தோட்டத்தை பராமரித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் குண்டாறு அணையில் குளிக்க சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சகதியில் அவரது கால் சிக்கிக்கொண்டது. உடனே அவர் காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டார். ஆனால் அவரால் சகதியில் இருந்து வெளியே மீள முடியாமல் பரிதாபமாக மூழ்கி இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று பாலமுருகன் உடலை போராடி மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்ேகாட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கோட்டை அடுத்துள்ள தேன்பொத்தை கிராமத்தில் பல்வேறு வடிவங்களில் மண்பாண்டங்களை தொழிலாளிகள் செய்து வருகின்றனர்.
    • குழந்தைகள் விளையாடி மகிழ அடுப்பு, அம்மிக்கல், தோசைக்கல், உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் முதலே கடும் வெயில் வாட்டி வருகிறது. இதன் காரணமாக அணைகள், கால்வாய்கள் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. வெப்பத்தில் இருந்த பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் இளநீர், பதினீர், மோர், கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்களை தேடி செல்கின்றனர். மேலும் இயற்கையான முறையில் குளிர்ந்த நீரை பருக மண் பானைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    செங்கோட்டை அடுத்துள்ள தேன்பொத்தை கிராமத்தில் பல்வேறு வடிவங்களில் மண்பாண்டங்களை தொழிலாளிகள் செய்து வருகின்றனர். தற்போது அங்கு விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.

    இது தொடர்பாக மண்பானைகள் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    மண்பானையில் பைப் வைத்து விற்கப்படும் பானை, சின்னபானை, டம்ளர், வாட்டர் கேன், கருப்பு சட்டி, வடசட்டி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் விளையாடி மகிழ அடுப்பு, அம்மிக்கல், தோசைக்கல், உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பைப் வைத்த பானைகள் 10 லிட்டர், 12 லிட்டர், 20 லிட்டர் என வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு ரூ.300 முதல் ரூ.700 வரையும், பைப் இல்லாமல் உள்ள மண்பானைகள் ரூ.250 முதல் ரூ.350 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பல வடிவங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பலவிதங்களில் செய்து உள்ளோம். இதனை தமிழகம் மற்றுமின்றி கேரள மக்களும் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் இதனால் எங்களது வாழ்வாதாரம் செழித்து காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிட வேலைகள் தற்போது நடைபெற்று பெற்று வருகிறது.
    • ஆனால் பல நாட்களாக அதற்கான பணிகள் நடை பெறாமல் தற்போது வரை சாலையிலேயே மணல், ஜல்லி கற்கள் கொட்டி கிடக்கிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கீழுர் பகுதியில் பிரசித்தி பெற்ற அழகிய மனவாள பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு காலை- மாலை என இரு வேளைகளிலும் செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    மேலும் கோவிலை யொட்டி ஏராளமான குடியிருப்பு வாசிகள் வாழ்ந்து வருகின்றனர். இதன் அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும். அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளிகளில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இருந்து மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அவ்வாறு வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமககள் கீழுர் தபால் நிலையத்தை யொட்டி பிரதான குறுகிய சாலையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் குறுகிய சாலையையொட்டி உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிட வேலைகள் தற்போது நடைபெற்று பெற்று வருகிறது. இதற்கான மணல், ஜல்லி கற்களை கொட்டி உள்ளனர். ஆனால் பல நாட்களாக அதற்கான பணிகள் நடை பெறாமல் தற்போது வரை சாலையிலேயே கொட்டி கிடக்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவசர உதவிக்கு கூட ஆட்டோவில் செல்ல முடியாத நிலை உள்ளது.

    மேலும் மிக முக்கியமான குறுகிய சாலையே பயன் படுத்தும் பள்ளி மாண வர்கள், பக்தர்கள், குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்துடன் கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டுள்ளனர். இருப்பி னும் சாலையில் கொட்டி கிடக்கும் மணல், ஜல்லி கற்கள் இன்னும் அகற்றப் படாமல் இருக்கிறது.

    எனவே பள்ளி மாண வர்கள், பக்தர்கள் குடி யிருப்பு வாசிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மணல், ஜல்லியை அகற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செங்கோட்டை விஸ்வநாதபுரம் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ட்ரஷர் திருவிழா நடைபெற்றது.
    • மேஜிக் ஷோ, இயற்கை முறை அழகு சாதனங்கள், மெஹந்தி, லக்கி கார்னர், ஜம்பிங் பெட், ராட்டினம், ஜம்பிங் பலூன் விழாவில் இடம் பெற்றிருந்தது.

    தென்காசி:

    செங்கோட்டை விஸ்வநாதபுரம் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ட்ரஷர் திருவிழா நடைபெற்றது. சுரண்டை சாந்தி நர்சிங் ஹோம் மருத்துவர் அரவிந்த் மேனன் , வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத் , கே கம்பீரம் பாலசுப்பிரமணியம், பெரிய பிள்ளை வலசை ஊராட்சி தலைவர் வேலுச்சாமி, லீட் அமைப்பின் மீனா சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி நிறுவனர்கள் முகமது பண்ணையார், மைதீன் பாத்திமா , தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மழலையர் பிரிவு மாணவர்கள் பூமியின் 4 வகையான பருவ நிலைகளை தத்ரூபமாக தங்களது படைப்புகள் மூலம் வகுப்பறைக்குள் கொண்டு வந்தனர். 2 வகுப்பு மாணவர்கள் சூரிய குடும்பத்தை மிக அழகாக காட்சிப்படுத்தினர். மேலும் அறிவியல் கண்காட்சி, தமிழ், ஆங்கிலம், கணிதம், இந்தி மற்றும் சமூக அறிவியல் துறை ரீதியான மாணவர்களின் படைப்புகள், மாணவ, ஆசிரிய வகுப்புகள் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது திறமைகளை காட்சிப்படுத்தினர்.

    மேஜிக் ஷோ, வேடிக்கை விளையாட்டுகள், வணிகக் கடைகள், உணவுத்திருவிழா, இயற்கை முறை அழகு சாதனங்கள், மெஹந்தி, குழந்தைகள் விளையாடி மகிழ துப்பாக்கி சுடுதல், லக்கி கார்னர், ஜம்பிங் பெட், ராட்டினம், ஜம்பிங் பலூன் விழாவில் இடம் பெற்றிருந்தது. முன்னதாக மிக்கி மவுஸ் மற்றும் மினி மவுஸ் பொம்மைகள் வேடம் அணிந்தவர்கள் வரவேற்றனர்.

    மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறமைகளை பார்வை யாளர்கள் அனைவரும் பாராட்டினர். இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×