என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை பகுதியில் மண்பானைகள் விற்பனை அமோகம் - நல்லி வைத்த பானைகள் ரூ. 300 முதல் விற்கப்படுகிறது
    X

    தேன்பொத்தையில் பல்வேறு வடிவங்களில் தயார் செய்யப்பட்டுள்ள மண்பானைகள் .

    செங்கோட்டை பகுதியில் மண்பானைகள் விற்பனை அமோகம் - நல்லி வைத்த பானைகள் ரூ. 300 முதல் விற்கப்படுகிறது

    • செங்கோட்டை அடுத்துள்ள தேன்பொத்தை கிராமத்தில் பல்வேறு வடிவங்களில் மண்பாண்டங்களை தொழிலாளிகள் செய்து வருகின்றனர்.
    • குழந்தைகள் விளையாடி மகிழ அடுப்பு, அம்மிக்கல், தோசைக்கல், உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் முதலே கடும் வெயில் வாட்டி வருகிறது. இதன் காரணமாக அணைகள், கால்வாய்கள் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. வெப்பத்தில் இருந்த பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் இளநீர், பதினீர், மோர், கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்களை தேடி செல்கின்றனர். மேலும் இயற்கையான முறையில் குளிர்ந்த நீரை பருக மண் பானைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    செங்கோட்டை அடுத்துள்ள தேன்பொத்தை கிராமத்தில் பல்வேறு வடிவங்களில் மண்பாண்டங்களை தொழிலாளிகள் செய்து வருகின்றனர். தற்போது அங்கு விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.

    இது தொடர்பாக மண்பானைகள் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    மண்பானையில் பைப் வைத்து விற்கப்படும் பானை, சின்னபானை, டம்ளர், வாட்டர் கேன், கருப்பு சட்டி, வடசட்டி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் விளையாடி மகிழ அடுப்பு, அம்மிக்கல், தோசைக்கல், உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பைப் வைத்த பானைகள் 10 லிட்டர், 12 லிட்டர், 20 லிட்டர் என வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு ரூ.300 முதல் ரூ.700 வரையும், பைப் இல்லாமல் உள்ள மண்பானைகள் ரூ.250 முதல் ரூ.350 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பல வடிவங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பலவிதங்களில் செய்து உள்ளோம். இதனை தமிழகம் மற்றுமின்றி கேரள மக்களும் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் இதனால் எங்களது வாழ்வாதாரம் செழித்து காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×