search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Clay pots"

    • செங்கோட்டை அடுத்துள்ள தேன்பொத்தை கிராமத்தில் பல்வேறு வடிவங்களில் மண்பாண்டங்களை தொழிலாளிகள் செய்து வருகின்றனர்.
    • குழந்தைகள் விளையாடி மகிழ அடுப்பு, அம்மிக்கல், தோசைக்கல், உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் முதலே கடும் வெயில் வாட்டி வருகிறது. இதன் காரணமாக அணைகள், கால்வாய்கள் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. வெப்பத்தில் இருந்த பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் இளநீர், பதினீர், மோர், கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்களை தேடி செல்கின்றனர். மேலும் இயற்கையான முறையில் குளிர்ந்த நீரை பருக மண் பானைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    செங்கோட்டை அடுத்துள்ள தேன்பொத்தை கிராமத்தில் பல்வேறு வடிவங்களில் மண்பாண்டங்களை தொழிலாளிகள் செய்து வருகின்றனர். தற்போது அங்கு விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.

    இது தொடர்பாக மண்பானைகள் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    மண்பானையில் பைப் வைத்து விற்கப்படும் பானை, சின்னபானை, டம்ளர், வாட்டர் கேன், கருப்பு சட்டி, வடசட்டி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் விளையாடி மகிழ அடுப்பு, அம்மிக்கல், தோசைக்கல், உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பைப் வைத்த பானைகள் 10 லிட்டர், 12 லிட்டர், 20 லிட்டர் என வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு ரூ.300 முதல் ரூ.700 வரையும், பைப் இல்லாமல் உள்ள மண்பானைகள் ரூ.250 முதல் ரூ.350 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பல வடிவங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பலவிதங்களில் செய்து உள்ளோம். இதனை தமிழகம் மற்றுமின்றி கேரள மக்களும் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் இதனால் எங்களது வாழ்வாதாரம் செழித்து காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி உற்சாக மாக கொண்டாடப்படுகிறது.
    • பொங்கல் என்றாலே புது அரிசியும், செங்கரும்பும், வெல்லமும் கூடவே புதுப்பானையும் நினைவுக்கு வரும்.

    வாழப்பாடி:

    தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி உற்சாக மாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே புது அரிசியும், செங்கரும்பும், வெல்லமும் கூடவே புதுப்பானையும் நினைவுக்கு வரும்.

    மாறிவரும் கலாச்சாரத்திற்கேற்ப நகர்ப்புற பெண்கள் மட்டுமின்றி, கிராமப்புற பெண்களும், சமைப்பதற்கு மண் பாண்டங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, இன்டோலியம், எவர் சில்வர் உள்ளிட்ட உலோகத்தாலான நவீன பாத்திரங்களை பயன்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஆனால், தமிழர்களின் பாராம்பரியத்தை பறைச்சாற்றும் பொங்கல் பண்டிகை வந்து விட்டால், தமிழகம் முழுவதும் குடும்பத்தோடு வார விழா எடுக்கும் அனைத்து தரப்பு மக்களும், தினம்தோறும் புதுப்புது மண் பானைகளில் பொங்கலிட்டு சமைத்து உண்டு மகிழ்வதை மரபு மாறாமல் தொடர்ந்து வருகின்றனர்.

    குறிப்பாக, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், புதுமண தம்பதியருக்கு பெண் வீட்டு பொங்கல் சீதனமாக புத்தாடை, கரும்பு, நெல் தானியம், மஞ்சள், பாத்திரங்கள் மட்டுமின்றி, நம் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் வண்ண கோலமிட்ட மண் பானைகளையும் பரிசாக வழங்குவது வழக்கமாக தொடர்ந்து வருகிறது. இதனால், இந்த நவீன காலத்திலும் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை தருணத்தில் மண் பானைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் கிராமியக் கைத்தொழில், பழங்காலம் தொட்டு இன்றளவிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குலத்தொழிலாகவே இருந்து வருகிறது. நவீன சமையல் பாத்திரங்களின் மீதான மோகம் அதிகரித்து, மண்பாண்டங்களுக்கு வரவேற்பு குறைந்ததால், இச்சமூகத்தை சேர்ந்த தற்கால சந்ததியர், இத்தொழிலை கைவிட்டு மாற்றுத்தொழில், வேலைவாய்ப்பைத் தேடிச் செல்கின்றனர்.

    ஆனால், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 300 ஆண்டுகளுக்கு மேலாக மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் குலத்தொழிலை கைவிடாமல் இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த கிராமத்தில் விதவிதமான மண் பானைகள் தயாரிக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண் பானைகள், ஜனவரி முதல் வாரத்தில், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தை மண்பாண்ட கைவினைத் தொழிலாளர்கள் கூறியதாவது:

    ' பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், முன்னோர்களின் வழியில் பாரம்பரிய முறையில் மண் பாண்டங்கள் தயாரிக்கும் கைத்தொழிலை கைவிடாமல் குலத்தொழிலாக தொடர்ந்து வருகிறோம். கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மண் பானைகள் தயாரிப்புத் தொழில் முடங்கிக்கிடந்தது.

    கடந்த சில தினங்களாக மழையின்றி வெய்யில் அடித்து வருவதால், பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகள் தயாரிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம். ஓரிரு தினங்களில் பானைகளை சூளையில் வைத்து சுட்டு பதப்படுத்தி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதி வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    3 மாதங்களாக மழை பெய்து வந்ததோடு, நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி கிடப்பதால், பானைகள் செய்வதற்கு உகந்த களிமண் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதால், மண் பானைகள் உற்பத்தியும், வருவாயும் குறைந்துள்ளது' என்றனர்.

    ×