செங்கோட்டை அருகே குண்டாறு அணையில் மூழ்கி வாலிபர் சாவு

நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் குண்டாறு அணையில் குளிக்க சென்றார்.அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சகதியில் அவரது கால் சிக்கிக்கொண்டது.
செங்கோட்டை அருகே குண்டாறு அணையில் மூழ்கி வாலிபர் சாவு
Published on

நெல்லை:

செங்கோட்டையை அடுத்த கண்ணுப்புளி மெட்டு பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் சேலம் மாவட்டம் காட்டு வளவு பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது 35) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தனது மனைவி பிரியாவுடன் அங்கு தங்கியிருந்து தோட்டத்தை பராமரித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் குண்டாறு அணையில் குளிக்க சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சகதியில் அவரது கால் சிக்கிக்கொண்டது. உடனே அவர் காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டார். ஆனால் அவரால் சகதியில் இருந்து வெளியே மீள முடியாமல் பரிதாபமாக மூழ்கி இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று பாலமுருகன் உடலை போராடி மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்ேகாட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com