search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure"

    • போலீசார் அந்த லாரியை சோதனை செய்ய டிரைவரிடம் லாரியின் பின்பக்க கதவை திறக்க உத்தரவிட்டார்.
    • கடத்தல் பிரிவு அதிகாரிகள் இன்று காலை கடலூரில் இருந்து திட்டக்குடிக்கு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரவு திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமை யிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக விருத்தாசல த்திலிருந்து தொழுதூர் நோக்கி மினி லாரி ஒன்று வந்தது. அந்த மினி லாரியை மடக்கிய போலீசார் அந்த லாரியை சோதனை செய்ய டிரைவரிடம் லாரியின் பின்பக்க கதவை திறக்க உத்தரவிட்டார். உடனே மினி லாரி டிரைவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். இதை பார்த்த போலீசார் டிரைவரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி லாரியின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து பார்த்தபோது லாரியில் மூட்டை மூட்டைாயக ரேஷன் அரிசி இருந்தது. சுமார் 50 கிலோ எடை கொண்ட 25 ரேஷன் அரிசி மூட்டைகளிலிருந்த 1.5டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த சம்பவம் பற்றி திட்டக்குடி போலீசார் கடலூர் உணவு பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உணவு பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் இன்று காலை கடலூரில் இருந்து திட்டக்குடிக்கு சென்றனர் . அவர்களிடம் திட்டக்குடி போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை ஒப்படைத்தனர். இதனையடுத்து உணவு பொருள் கடத்தல் பிரிவினர் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தி வந்து போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனியாக அவரது வீட்டிற்கு சென்றார்.
    • மோட்டார் சைக்கிளை பறித்து சென்றார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் பகுதியில் பெண்களை தாக்கிவிட்டு நகைகளை வழிப்பறி செய்தல் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி செல்லுதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடை பெறுவது வாடிக்கை யாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் செல்லவே அஞ்சும் நிலை உள்ளது. மரக்காணம் அருகே உள்ள அழகன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ராஜேஷ் (வயது 19) இவர் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வழக்கமாக கல்லூரியி லிருந்து பஸ்சில் வந்து தாழங்காடு பகுதியில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனியாக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது எதிரில் வந் தஒருவர் ராஜேசை ஏதோ காரணத்திற்காக தாக்கிவிட்டு அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை பறித்து சென்றார். இச்சம்பவம் குறித்து மாணவன் ராஜேஷ் மரக்காணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமை யிலான போலீசார் பஸ்சினை நிறுத்தினர்.
    • டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு பஸ் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு புறப்பட்டு சென்றது. இந்தப் பஸ் திண்டிவனத்தை கடந்து செஞ்சி நோக்கி சென்றது. அப்போது செஞ்சி கூட்ரோடு அருகில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமை யிலான போலீசார் பஸ்சினை நிறுத்தினர். உள்ளே சென்ற போலீ சார் பயணிகளின் பைகளை சோதனையிட்டனர். அப்போது, பஸ்சில் பயணிகளின் பொருட்கள் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது. இதனை திறந்து போலீசார் சோதனையிட்டனர்.

    அதில் 30 குவார்ட்டர் மதுபான பாட்டில்களும், 10 புல் மதுபாட்டில்களும் இருந்தது. இந்த பை யாருடையது என்று போலீசார் விசாரித்தனர். எங்களுடையது இல்லை என பயணிகள் அனைவரும் கூறினர். இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 708 கிலோ போதைப் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதை கண்டறிந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலீஸ் எல்லைக்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுராந்தகம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கோபால் மகன் பழனி (வயது 40), தண்டலம் அப்துல்கலாம் தெருவை சேர்ந்த முனிநாதன் மகன் சத்தியமூர்த்தி (38) ஆகிய இருவரும் மினி லாரியில் குட்கா, கூல் லிப் உள்ளிட்ட 708 கிலோ போதைப் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதை கண்டறிந்தனர். 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார், கடத்தி வரபரபட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    • மளிகை கடையில் பதுக்கி விற்பனை செய்வதாக ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது.
    • சேகரைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கத்தில் குட்கா பொருள்கள் மளிகை கடையில் பதுக்கி விற்பனை செய்வதாக ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்துஅந்தக் கடையில் திடீரென சோதனை செய்த போலீசார் அங்கு பதுக்கி விற்பனை செய்த 20 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப், குட்கா,போதை பொருட்களை பறிமுதல் செய்து அதே பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சேகரை( வயது 55) கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கையாள்வதில் முன் அனுபவம் பெற்ற 10 பேர் கொண்ட ஒரு குழு பயன்படுத்தப்படும்
    • 5 கன்றுகள் உட்பட 10 கால்நடைகளை ரூ. 74,000 தொகைக்கு ஏலம் விடப்பட்டன.

    திருச்சி

    திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலைகளின் குறுக்கே கேட்பார் என்று சுற்றி தெரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் அந்த கால்நடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்கிறது.

    இந்த பறிமுதல் நடவடிக்கையின் போது மாடுகளை வாகனங்களில் ஏற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இதற்கிடையே கால்நடைகளை சிறை பிடித்து கொண்டு செல்ல வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்ட 2 சிறப்பு வாகனங்களை திருச்சி மாநகராட்சி வாங்கியுள்ளது.

    இதுவரை பயன்படுத்திய வாகனத்தில் மடிக்கக்கூடிய பாதையில் கால்நடைகளை நகர்த்துவது சவாலாக இருந்ததால், 15வது நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் கூடிய இந்த வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட சிறப்பு வாகனம் தொழிலாளர்களுக்கு சிரமமின்றி கால்நடைகளைப் பிடிக்க உதவும். கால்நடைகளை கையாள்வது குறித்த விமர்சனங்களை தடுக்கும். மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் கால்நடைகளை சிறைபிடிக்க இது பயன்படுத்தப்படும்

    என்று மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதன் மூலம் ஒரே நேரத்தில் 6 மாடுகள் வரை பறிமுதல் செய்து கோணக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான காப்பகத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய வாகனங்கள் சாலைகளில் கால்நடைகள் சுற்றி தெரியும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும். அதில்

    மாநகராட்சி பணியாளர்களுடன் கால்நடைகளை

    கையாள்வதில் முன் அனுபவம் பெற்ற 10 பேர் கொண்ட ஒரு குழு பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் அபராதம் செலுத்தி வாங்கி செல்லாததால்

    5 கன்றுகள் உட்பட 10 கால்நடைகளை ரூ. 74,000 தொகைக்கு ஏலம் விடப்பட்டன.

    புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதால் இனி வரும் காலங்களில் நடவடிக்கை வேகம் எடுக்கும் என்றனர்.

    • ஒரு இடத்தில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.
    • திருடிய 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் கோவத்த குடியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி அன்னபூரணி (வயது 75).

    இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக மணச்சநல்லூரில் இருந்து டவுன் பஸ்ஸில் சென்றார்.

    சமயபுரம் சந்தை பேட்டை பஸ் நிறுத்தம் வந்ததும் அவர் கீழே இறங்கியபோது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் உடனடியாக பஸ் நிறுத்த த்தில் வைக்கப்பட்டிருந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேர்முக தொடர்பு எண்ணுக்கு சம்பவம் குறித்து தெரிவித்தார்.

    அப்போது, தான் வந்த பஸ்ஸின் அருகில் சந்தேகப்ப டும்படி இரு பெண்கள் நின்றதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

    பின்னர் சமயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இரு பெண்களை தனிப்படையினர் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவர்களின் போட்டோக்களை நவீன அப்ளிகேஷன் மூலமாக சோதனை செய்தபோது திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (43 ), சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி சேர்ந்த ரேகா என்கிற கல்பனா(43) என்பது தெரியவந்தது.

    பின்னர் காளியம்மாளின் செல்போனை சோதனை செய்தபோது அவர்கள் ஒரு இடத்தில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி அன்ன பூரணியின் செயினை திருடியவர்கள் என்பதை உறுதி செய்தனர்.

    இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சரவணன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கோவை, பழனி, திருச்சி, திருவண்ணாமலை, சென்னை, திருவாரூர் , செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், பெங்களூர், மேட்டுப்பாளையம், வேளாங்கண்ணி, சித்தூர், காலகஸ்தி, திருப்பதி, மும்பை, புனே, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் ரேகா மற்றும் காளியம்மாளிடம் போலீசார் அன்னபூரணியிடம் திருடிய ஒன்றரை பவுன் செயின் மற்றும் வேறு பெண்களிடம் திருடிய 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கைதான இந்த பெண்கள் கடந்த 15 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து பல்வேறு இடங்களில் நகை பணம் திருடி ரூ.3 கோடிக்கு மேல் சொத்து சேர்த்திருப்பது அறிந்து போலீசாருக்கு தலை சுத்தியது.

    பின்னர் அவர்களிடமி ருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து பத்திர ஆவணங்கள் 2 செல்போன்கள் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் காளியம்மாள் மற்றும் ரேகா ஆகியோரை திருச்சி ஜூடிசியல் மாஜி ஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறும்போது,

    வழக்கமாக திருடும் நகைகளை அந்த பெண்கள் உடனடியாக விற்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களிடம் கொடுத்து நிலங்களை வாங்கி குவித்துள்ளனர். இவ்வாறு ரூ.3 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் காளியம்மாள் தனது மகளுக்கு சமயபுரத்தில் உள்ள மண்டபத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ள தகவலும் கிடைத்துள்ளது.

    காளியம்மாள் மற்றும் ரேகாவுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டு வந்த சரத்குமார் மற்றும் சரவணன் இடம் விசாரணை நடத்த உள்ளோம்.

    அதில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

    • போலீசார் கள்ளிப்பட்டு பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
    • 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கள்ளிப்பட்டு பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகில் அதே கிராமத்தை சேர்ந்த முத்துசாமி(45) சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார்அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • சொந்த காரை வாடகை உபயோகத்துக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.
    • விதிமுறைக்கு மாறாக அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த பயணிகள் ஆட்டோவை பறிமுதல் செய்யப்பட்டது.

    அவிநாசி,ஆக.19-

    அவிநாசியில் தகுதிச் சான்று இல்லாமல் அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த ஆட்டோ, சொந்த காரை வாடகை உபயோகத்துக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன் பறிமுதல் செய்தாா்.

    அவிநாசி புனித தோமையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, விதிமுறைக்கு மாறாக அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த பயணிகள் ஆட்டோ, அதேபோல, சொந்த காரை வாடகைக்குப் பயன்படுத்தி பள்ளி மாணவா்களை அழைத்து வந்த காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தாா்.

    மேலும் இந்த வாகனங்களுக்கு ரூ. 17ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • திண்டிவனம் அருகே ஓட்டலில் சிலிண்டர், இரும்பு பைப்புகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாரம் லேபை அருகே திண்டிவனம் ஜக்கா பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் (வயது 36) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்பக்கத்தில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 2 சிலிண்டர்கள், இரும்பு பைப்புகளை திருடி சென்றனர். இது குறித்து அசோக் கொடுத்த புகாரின் பெயரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

    அப்போது சாரம் லேபை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சாரம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 54), கலாநிதி (35) ஆகியோர் என்பதும், இருவரும் ஓட்டலில் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த சிலிண்டர் மற்றும் இரும்பு பைப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • களூர் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு பெட்டி கடையில்பான் மசாலா, குட்கா பறிமுதல்
    • விற்பனை ெசய்தவர்கள் மீது வழக்கு பதிவு

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம் பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த செக்குமேடு பகுதியைச் சேர்ந்த ராஜீவ் (வயது60) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முட்புதரில் மறைத்து வைக்கப்பட்ட 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் 2 பேரிடம் விசாரணை
    • இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி

    திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான முட்புதர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை போலீஸ் கமிஷனர் காமினி ஆலோசனையின் படி உதவி போலீஸ் கமிஷனர் காமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    பின்னர் முட்புதர் பகுதியில் சல்லடை போட்டு தேடினர். அப்போது அங்கு ஒரு அட்டைப்பெட்டியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் அந்த வெடிகுண்டுகளை பாதுகாப்பு கருதி மணச்சநல்லூர் எதுமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் வெடிமருந்து குடோனுக்கு அனுப்பி வைத்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என போலீசார் தெரிவித்தனர்.

    ரவுடி கும்பல் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அந்த பகுதியில் இரு ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் இருந்து வருகிறது.

    இதில் ஒரு ரவுடி அவரது எதிரியை தீர்த்து கட்ட அந்த வெடிகுண்டுகளை வாங்கி வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    அதன் அடிப்படையில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் அரியமங்கலம் மற்றும் பொன்மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×