search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கால்நடைகளை பறிமுதல்செய்ய ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய வாகனங்கள்
    X

    போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கால்நடைகளை பறிமுதல்செய்ய ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய வாகனங்கள்

    • கையாள்வதில் முன் அனுபவம் பெற்ற 10 பேர் கொண்ட ஒரு குழு பயன்படுத்தப்படும்
    • 5 கன்றுகள் உட்பட 10 கால்நடைகளை ரூ. 74,000 தொகைக்கு ஏலம் விடப்பட்டன.

    திருச்சி

    திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலைகளின் குறுக்கே கேட்பார் என்று சுற்றி தெரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் அந்த கால்நடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்கிறது.

    இந்த பறிமுதல் நடவடிக்கையின் போது மாடுகளை வாகனங்களில் ஏற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இதற்கிடையே கால்நடைகளை சிறை பிடித்து கொண்டு செல்ல வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்ட 2 சிறப்பு வாகனங்களை திருச்சி மாநகராட்சி வாங்கியுள்ளது.

    இதுவரை பயன்படுத்திய வாகனத்தில் மடிக்கக்கூடிய பாதையில் கால்நடைகளை நகர்த்துவது சவாலாக இருந்ததால், 15வது நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் கூடிய இந்த வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட சிறப்பு வாகனம் தொழிலாளர்களுக்கு சிரமமின்றி கால்நடைகளைப் பிடிக்க உதவும். கால்நடைகளை கையாள்வது குறித்த விமர்சனங்களை தடுக்கும். மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் கால்நடைகளை சிறைபிடிக்க இது பயன்படுத்தப்படும்

    என்று மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதன் மூலம் ஒரே நேரத்தில் 6 மாடுகள் வரை பறிமுதல் செய்து கோணக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான காப்பகத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய வாகனங்கள் சாலைகளில் கால்நடைகள் சுற்றி தெரியும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும். அதில்

    மாநகராட்சி பணியாளர்களுடன் கால்நடைகளை

    கையாள்வதில் முன் அனுபவம் பெற்ற 10 பேர் கொண்ட ஒரு குழு பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் அபராதம் செலுத்தி வாங்கி செல்லாததால்

    5 கன்றுகள் உட்பட 10 கால்நடைகளை ரூ. 74,000 தொகைக்கு ஏலம் விடப்பட்டன.

    புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதால் இனி வரும் காலங்களில் நடவடிக்கை வேகம் எடுக்கும் என்றனர்.

    Next Story
    ×