திண்டிவனம் அருகே ஓட்டலில் சிலிண்டர், இரும்பு பைப்புகளை திருடிய 2 பேர் கைது

திண்டிவனம் அருகே ஓட்டலில் சிலிண்டர், இரும்பு பைப்புகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ராஜமாணிக்கம், கலாநிதி.
ராஜமாணிக்கம், கலாநிதி.
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாரம் லேபை அருகே திண்டிவனம் ஜக்கா பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் (வயது 36) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்பக்கத்தில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 2 சிலிண்டர்கள், இரும்பு பைப்புகளை திருடி சென்றனர். இது குறித்து அசோக் கொடுத்த புகாரின் பெயரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

அப்போது சாரம் லேபை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சாரம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 54), கலாநிதி (35) ஆகியோர் என்பதும், இருவரும் ஓட்டலில் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த சிலிண்டர் மற்றும் இரும்பு பைப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com