மரக்காணம் அருகே கல்லூரி மாணவனை தாக்கி மோட்டார் சைக்கிள் பறிப்பு

மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனியாக அவரது வீட்டிற்கு சென்றார். மோட்டார் சைக்கிளை பறித்து சென்றார்.
மரக்காணம் அருகே  கல்லூரி மாணவனை தாக்கி மோட்டார்  சைக்கிள் பறிப்பு
Published on

விழுப்புரம்:

மரக்காணம் பகுதியில் பெண்களை தாக்கிவிட்டு நகைகளை வழிப்பறி செய்தல் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி செல்லுதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடை பெறுவது வாடிக்கை யாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் செல்லவே அஞ்சும் நிலை உள்ளது. மரக்காணம் அருகே உள்ள அழகன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ராஜேஷ் (வயது 19) இவர் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வழக்கமாக கல்லூரியி லிருந்து பஸ்சில் வந்து தாழங்காடு பகுதியில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனியாக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது எதிரில் வந் தஒருவர் ராஜேசை ஏதோ காரணத்திற்காக தாக்கிவிட்டு அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை பறித்து சென்றார். இச்சம்பவம் குறித்து மாணவன் ராஜேஷ் மரக்காணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com