search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure"

    பெரம்பலூரில் ரூ.1.20 லட்சம் அபராதம்போக்குவரத்து விதிமுறைகளை மீறிஇயக்கப்பட்ட 6 வாகனங்கள் பறிமுதல்

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வா ளர் ராஜாமணி மற்றும் குழுவினர், பெரம்பலூர் பகுதிகளில் வாகனத்த ணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியாருக்குச் சொந்தமான கார் மற்றும் வேன்களில் பள்ளிக் குழந்தைகளை மாத வாடகைக்கு அழைத்துச் சென்று வந்த 3 வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்கப்ப டாத நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 3 வாகனங்கள் என மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தகுதிச்சான்று புதுப்பிக்கப் படாத சரக்கு வாகனம், வரி செலுத்தாத சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்க ளுக்கு இணக்கக் கட்டண மாக ரூ.1.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் கூறுகையில்:- தனியாருக்குச் சொந்தமான வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி இயக்குவது கண்ட றியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்க ளில் அதிக பயணிகளை ஏற்ற க்கூடாது, சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றக்கூடாது. வாகனங்கள் அனைத்து போக்குவரத்து விதிமுறை களை பின்பற்றி இயக்க வேண்டும். இது சம்பந்தமாக தினமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்ப டும் என்று அவர் எச்சரித்தார்.

    • பண்ருட்டியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சோதனையில் புதுச்சேரி மதுப்பாட்டில்கள் 15 வைத்திருந்தது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி உட்கோட்ட கிரைம் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பண்ருட்டி ஆர் எஸ் மணி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 37) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் புதுச்சேரி மதுப்பாட்டில்கள் 15 வைத்திருந்தது தெரியவந்தது பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் மோகன்ராஜை கைது செய்து அவனிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.அப்போது மாளிகம்பட்டு அம்மன் கோவில் தெரு சேர்ந்த பத்மநாபன் (43), என்பவர் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்தார். போலீசார் விரைந்து அவரை கைது செய்து மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில்அடைத்தனர்

    • பண்ருட்டி அடுத்த திருவாமூர் சிவாஜி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக் டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் திருவாமூர் பகுதியில் தீவிர மது சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி அடுத்த திருவாமூர் சிவாஜி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்த 180மில்லி லிட்டர் அளவு கொண்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • சங்ககிரி புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொண்டனர்.
    • அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொறுத்தி இருந்த 7 தனியார் பஸ்களுக்கு சோதனை செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின்பேரில் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் சங்ககிரி புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொறுத்தி இருந்த 7 தனியார் பஸ்களுக்கு சோதனை செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரின் உடலை ஏற்றிக் கொண்டு பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்
    • 75 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென சாலையை கடக்க முயன்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30)ஆம்புலன்ஸ் டிரைவர். இவர்,நேற்று இரவு பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் ஓடப்பன்குப்பத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரின் உடலை ஏற்றிக் கொண்டு பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார். இரவு சுமார் 8 மணி அளவில் கொஞ்சி குப்பம் அய்யனார் கோவில் அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக சைக்கிளில் வந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத வகையில் ஆம்புலன்ஸ் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த முதியவர் அதே ஆம்புலன்சில் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆம்புலன்ஸ் மோதி பலியான முதியவர் கொஞ்சிகுப்பத்தை சேர்ந்த ஏழுமலை (75) எனவும், இவர் அதே பகுதியில் சைக்கிளில் சென்று பாட்டில்கள் பொறுக்கி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய ஆம்புலன்சை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த ராமலிங்கத்தின் உடலை வேறு ஒரு ஆம்புலன்சில் ஏற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • வாணாபுரம் அருகே லாரி மோதி முதியவர் பலியானார்.
    • பொறுபாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜான் போஸ்கோ என்பது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா தொண்டனந்தல் அருகே 60 வயது மதிக்கத்தக்க அடை யாளம் தெரியாத நபர் லாரி மோதி இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டு ரோடு போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த வரின் உடலை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியது பொறுபாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜான் போஸ்கோ (35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

    • பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.
    • தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக 4 பயணிகள் இருந்தனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தொப்பி, முழங்கால் மற்றும் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் 4 பேரிடம் இருந்து 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.77 கோடி ஆகும். தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை.

    • பாலக்கரையில் பாலக்கரையில் தடை செய்யப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல்
    • செந்தண்ணீர்புரம் ஆசாத் தெருவை சேர்ந்த ரவீந்திரன் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி  

    திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டிக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடம் விரைந்து சென்று அந்த கடையில் சோதனையிட்டார். அப்போது அங்கு 6.3 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை எடுத்து அந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அதன் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் உணவு பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில்

    கடையின் உரிமையாளர் செந்தண்ணீர்புரம் ஆசாத் தெருவை சேர்ந்த ரவீந்திரன் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

    • ஒருவர் பீரோவில் இருந்த ரூ.12 ஆயிரம் பணம், மோதி ரம் உள்ளிட்ட 3 சவரன் நகைகளை திருடிக்கொண்டி ருந்தான்.
    • மேலும் தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ஷர்மிளா (வயது 21). இவர் சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்து அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் சத்தம் கேட்டு ஷர்மிளா உள்ளே சென்று பார்த்த போது, அங்கு மர்ம நபர் ஒருவர் பீரோவில் இருந்த ரூ.12 ஆயிரம் பணம், மோதி ரம் உள்ளிட்ட 3 சவரன் நகைகளை திருடிக்கொண்டி ருந்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். உடனே அந்த நபர் நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மர்ம நபர் பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

    பின்னர் பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் வாணாபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும், வீடு புகுந்து நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து திருடிய நகை, பணத்தை பறிமுதல் செய்த னர். மேலும் தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்காலில் போதை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.1000 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ள ஒரு கடையில் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார், குறிப்பிட்ட கடையில், சில சாட்சிகள் முன்னிலையில் சோதனை செய்தபோது, ரூ.1000 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது. மேலும், கடை உரிமையாளர் காரைக்கால் பெருமாள் கோவில் வீதியைச்சேர்ந்த முகம்மது சகாபுதினை போலீசார் கைது செய்தனர்.

    • திருச்சி விமான நிலையத்தில்சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15.47 லட்சம் தங்கம்
    • அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி

    திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர் துபாய் ஓட்டு நாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருகின்றனர் இதனை சுங்கத்துரோகி அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில்நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 15. 47 லட்சம் மதிப்புள்ள 260 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் அந்த லாரியை சோதனை செய்ய டிரைவரிடம் லாரியின் பின்பக்க கதவை திறக்க உத்தரவிட்டார்.
    • கடத்தல் பிரிவு அதிகாரிகள் இன்று காலை கடலூரில் இருந்து திட்டக்குடிக்கு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரவு திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமை யிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக விருத்தாசல த்திலிருந்து தொழுதூர் நோக்கி மினி லாரி ஒன்று வந்தது. அந்த மினி லாரியை மடக்கிய போலீசார் அந்த லாரியை சோதனை செய்ய டிரைவரிடம் லாரியின் பின்பக்க கதவை திறக்க உத்தரவிட்டார். உடனே மினி லாரி டிரைவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். இதை பார்த்த போலீசார் டிரைவரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி லாரியின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து பார்த்தபோது லாரியில் மூட்டை மூட்டைாயக ரேஷன் அரிசி இருந்தது. சுமார் 50 கிலோ எடை கொண்ட 25 ரேஷன் அரிசி மூட்டைகளிலிருந்த 1.5டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த சம்பவம் பற்றி திட்டக்குடி போலீசார் கடலூர் உணவு பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உணவு பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் இன்று காலை கடலூரில் இருந்து திட்டக்குடிக்கு சென்றனர் . அவர்களிடம் திட்டக்குடி போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை ஒப்படைத்தனர். இதனையடுத்து உணவு பொருள் கடத்தல் பிரிவினர் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தி வந்து போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×