search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathankulam"

    • சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம், நாசரேத் போலீஸ் நிலைய பகுதியில் குற்ற பின்னணியில் உள்ளவர்களுக்கு புதிய பாதை திட்ட விளக்க கூட்டம் நடந்தது.
    • பிரச்சினை ஏற்படும்போது நாம் சிந்தித்து செயல்பட்டால் தவறுகள் நடக்காது என்று டி.எஸ்.பி. பேசினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் துணை காவல் சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம், நாசரேத் போலீஸ் நிலைய பகுதியில் குற்ற பின்னணியில் உள்ளவர்களுக்கு புதிய பாதை திட்ட விளக்க கூட்டம் நடந்தது. சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள் தலை மை தாங்கினார். சாத்தா ன்குளம் இன்ஸ்பெ க்டர் முத்து முன்னிலை வகி த்தார். நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வரவேற்று பேசினார். இதில் அரசு மருத்துவர் ஆத்திக்குமார், டாக்டர் ஜெய்கணேஷ், வக்கீல் வேணுகோபால், பிசியோதெரபிஸ்ட் லட்சுமி, சித்த மருத்துவர் மதுரம் செல்வராஜ், மிக்கேல் அறக்கட்டளை நிர்வாகி சுசிலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் டி.எஸ்.பி. அருள் பேசுகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரையின் பேரில் மாற்றத்தைத் தேடி எனும் சமூக நிகழ்ச்சி மூலம் தூத்துக்குடியை குற்றமில்லா மாவட்டமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பலனாக பொதுமக்கள் கிராமங்களில் தாங்களாகவே முன்வந்து பொது இடங்களில் உள்ள சாதி அடையாளங்களை அழித்து வருகின்றனர். தற்போது மாவட்ட எஸ்.பி., புதிய பாதை திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின நோக்கம் குற்ற பின்னணியில் உள்ளவர்கள் திருந்தி புதிய பாதையில் செல்ல வேண்டும் என்பதே. தற்போது பலர் தேவையில்லாத பிரச்சி னைகளுக்கு ஆத்திரம் அடைந்து கொலை உள்ளிட்ட குற்ற செயல்கள் நடக்க காரணமாக அமைகிறது. பிரச்சினை ஏற்படும்போது நாம் சிந்தித்து செயல்பட்டால் தவறுகள் நடக்காது. எனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தி புதிய பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும். குற்றமில்லா சமுதாயத்தை நாம் ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய குமார், விஜயதாஸ், நெ ல்சன், தனிப்பிரிவு காவலர் விக்ராந்த் உள்பட போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் நன்றி கூறினார்.

    • சாஸ்தாவின்நல்லூர் கிராமம் புதுக்குடியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள், தாது உப்பு கலவை, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே சாஸ்தாவின் நல்லூர் கிராமம் புதுக்குடியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சாத்தான்குளம் கால்நடை உதவி மருத்துவர் காயத்ரி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார், விஜயகுமார், பராமரிப்பு உதவி ஆய்வாளர் சுதா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினராக சாஸ்தாவின் நல்லூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் லூர்து மணி, பஞ்சாயத்து தலைவி திருக்கல்யாணி ஆகியோர்கலந்து கொண்டனர்.

    இதில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள், தாது உப்பு கலவை, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மேலும் சிறந்த கால்நடைகளை வளர்த்தவர்களுக்கு விருதும், சிறந்த கிடாரி கன்று வளர்த்தவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. முகாமில் ராஜ்குமார், பேச்சி,சோமு, சீனி பாண்டி, கோபிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • மழை காலங்களில் நீர் நிலைகளில் பாதுகாப்பு இல்லாமல் குளிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக பாது காப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் கனகா தலைமை தாங்கினார். இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் சதீஷ்குமார், தவசிராஜ், மாரிமுத்து, சுப்பிரமணியன், சுரேஷ்குமார்,துரை ஆகியோர் பங்கேற்று, மாணவ- மாணவிகளுககு பருவ மழை முன்னெ ச்சரிக்கை நடவடிககையாக தண்ணீரினால் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து தப்பிககும் வழிமுறைகள் குறித்து செயல் முறைகள் மூலம் எடுத்துரைத்தனர். தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையும் அதற்கான உரிய ஆவணங்களுடன் செய்து காண்பித்தனர்.

    மழை காலங்களில் குளம், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் பாதுகாப்பு இல்லாமல் குளிக்க மற்றும் நீர் எடுக்கவோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். மேலும் தக வல் அறியும் சட்டம் குறி த்தும் எடுத்து ரைத்தனர்.

    இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொ ண்டனர். முடிவில் உதவி ஆசிரி யர் சண்முக ராஜ் நன்றி கூறினார்.

    • ஜெனித், ஜோசுவா ஆகிய 2 சிறுவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்தனர்.
    • இதனையறிந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அவர்களது பள்ளி மேற்படிப்பிற்க்கான செலவை ஏற்று 8 வருடமாக கல்வி கட்டணத்தை தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தி வருகிறார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் தச்சன்விளை கிராமத்தை சேர்ந்த தாய், தந்தையை இழந்த பாட்டி பால்தங்கம் பராமரிப்பில் உள்ள ஜெனித், ஜோசுவா ஆகிய இரு சிறுவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்தனர். இதனையறிந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அவர்களது பள்ளி மேற்படிப்பிற்க்கான செல வை ஏற்று கடந்த 2014-முதல் 8 வருடமாக கல்வி கட்டணத்தை தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தி வருகிறார்.

    அதில் ஜெனித் பள்ளி படிப்பை முடித்து சென்னை-கிங்ஸ் என்ஜினீ யரிங் கல்லூரியில் இலவச மாக என்ஜினீயரிங் கல்வி பயின்று வருகிறார். இரண்டாவது பேரன் ஜோசுவா திசையன்விளை-லயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார். இந்த நிலையில் மாணவன் ஜோசுவாவின் கல்வி கட்டணத்திற்க்காக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய கல்வி கட்டண வரைவோலையை தச்சன்விளையில் பாட்டி பால்தங்கம், மாணவன் ஜோசுவாவிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் துணைத் தலைவர் சங்கர் வழங்கினார்.

    அப்போது சாத்தா ன்குளம் வட்டார காங்கி ரஸ் கமிட்டி தலை வர்கள் சக்திவேல் முருகன், பார்த்த சாரதி, முத்து வேல், பிரபு கிருபா கரன், தச்சன்விளை கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சிவா, முதலூர் யோகபாண்டி, சாத்தான்குளம் நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சாலமோன்,முத்துராஜ், உதயமணி, மணிகண்டன், அழகேசன், மகாலிங்கம், சித்திரை பழம், ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். கல்வி உதவி தொகையை பெற்ற பாட்டிமற்றும் மாணவன் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • தட்டார்மடம் போலீஸ் நிலையம் அருகே முன்பு செயல்பட்ட இடத்தில் மீண்டும் வாரச்சந்தை தொடங்கப் பட்டது.
    • வாரந்தோறும் புதன்கிழமை இந்த வாரச்சந்தை நடைபெறும் எனவும் தெரிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டார்மடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை முறையாக செயல்பட்டு வந்தது. இதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். மேலும் அந்த வாரச்சந்தை செயல்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்ததால் அதனை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் மக்கள் கோரிக்கையை ஏற்று வாரச்சந்தை இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி தலைவர் சபிதா செல்வராஜ் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நேற்று கோழி மற்றும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. அவைகளை முறையாக வியாபாரிகள் வாங்கி சென்றனர். காய்கறி மற்றும் இதர கடைகள் வருகிற வாரம் செயல்படும் என தெரிவிக்கப் பட்டது. வாரந்தோறும் புதன்கிழமை இந்த வாரச்சந்தை நடைபெறும் எனவும் தெரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்ட பா.ஜனதா துணைத் தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. கிளை செயலாளர் முரளி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் கிருஷ்ண குமார், கோவில் தர்மகர்த்தா ஆதி லிங்கராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் சகாய் விஜயன், ஆடு வியாபாரிகள் கிருஷ்ணன், நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தெரு நாய்கள் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தூரத்துகிறது.
    • சிறுவர், சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக அங்குள்ள சாலையில் சுற்றி திரிந்து வருகிறது. சில நேரம் சாலையின் நடுவே சண்டையிட்டு அவ்வழியாக செல்லும் இருசகக்கர வாகனத்தில் விழுந்து அதில் வருபவர்களை பயமுறுத்துகிறது. மேலும் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தெரு நாய்கள் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தூரத்துகிறது. இதில் சிலர் தவறி விழுந்து காயம் அடையும் நிலையும் ஏற்படுகிறது.

    சிறுவர், சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் தெருவில் திரியும் நாய்களை கட்டுப்படுத்திட நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சாத்தான்குளம் யூனியனில் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி பங்கேற்று 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் யூனியனில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லா மேரி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜோசப், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் வசந்தா வரவேற்றார். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்திரி திட்டத்தை விளக்கி பேசினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி பங்கேற்று 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் ஒன்றிய ஆணையாளர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கருப்பசாமி, வட்டார மருத்துவ அலுவலர் ஐலின்சுமதி, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஊட்டச்சத்து பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார மேற்பார்வையாளர் புஷ்பா நன்றி கூறினார்.

    • விஜயராமபுரத்தில் ரூ.42.6 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப துணை சுகாதார மையம் கட்ட அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
    • இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, துணை சுகாதார நிலையம், ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் தச்சமொழி ஊராட்சி விஜயராமபுரத்தில் ரூ.42.6 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப துணை சுகாதார மையம் கட்ட அடிக்கல் நாட்டுவிழா, பண்டாரபுரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.13.16 லட்சம் மதிப்பில் ரேசன் கடை அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதுக்குளம் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு ஊராட்சித் தலைவர்கள் தச்சமொழி பிரேம்குமார், பண்டாரபுரம் பாலசிங், புதுக்குளம் பாலமேனன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி, ஒன்றிய ஆணையாளர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, துணை சுகாதார நிலையம், ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ஐலின்சுமதி, மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், நகர தலைவர் வேணுகோபால், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சாத்தான்குளம் சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, பிரபு, ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இசக்கிதுரை வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்று விட்டு 4, 5 நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு வரும்.
    • மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த இசக்கிதுரையின் மாட்டை மர்ம நபர் ஒருவர் கயிறு மூலம் கட்டி திருடிச்சென்றது சி.சி.டி.வி.யில் தெரியவந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிதுரை. இவர் ஆடு, மாடு வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்று விட்டு 4, 5 நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு வரும்.

    கடந்த 30-ந்தேதி மேய்ச்சலுக்காக சென்ற இசக்கிதுரை மாடுகள் இதுவரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய அப்பகுதி யில் அமைக்கப் பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது, கடந்த 30-ந்தேதி நள்ளிரவு மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த இசக்கிதுரை யின் மாட்டை மர்ம நபர் ஒருவர் கயிறு மூலம் கட்டி திருடிச் சென்றது தெரியவந்தது.

    மாட்டை தினமும் பழகுவது போல கொண்டு செல்வதால் இவர் மாடு வளர்ப்பவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகத்து, சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • சுப்பராயபுரம் ஊராட்சியில் சுய உதவிக்குழு கட்டிடம் படிக்கட்டுகளில் மேற்கூரை அமைக்க ரூ. 2.50 லட்சம் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்பாதுரை, ஒன்றிய ஆணையர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முருகேஸ்வரி தீர்மானங்களை வாசித்தார். இதில் ஒன்றிய தலநிதி கணக்கு உபரி நிதியில் இருந்து புதுக்குளம் ஊராட்சி வேலாயுதபுரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்ய ரூ. 5.30 லட்சமும், சுப்பராயபுரம் ஊராட்சியில் சுய உதவிக்குழு கட்டிடம் படிக்கட்டுகளில் மேற்கூரை அமைக்க ரூ. 2.50 லட்சமும் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் லதா, சுபா கிறிஸ்டி பொன்மலர், பிச்சிவிளை சுதாகர், செல்வம், ஜோதி, சசிகலா, ஜேசுஅஜிட் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், பொறியாளர் அருணா, உதவியாளர் சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • வேலாயுதபுர கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.
    • அதில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட வேலாயுதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 6மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் குடிநீர் முறையாக வழங்கிடகோரி மனு அளித்தனர். அப்போது ஊராட்சித் தலைவர், யூனியன் தலைவர் குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய ஆணையாளரிடமும் முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரை முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.

    மேலும் கடந்த மாதம் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது சாத்தான்குளம் போலீசார் குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதுவரை குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அதில் 6மாதமாக குடிநீர் வழங்கப்படாததால் அவதி அடைந்துள்ளோம். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    • கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்விற்காக பேச்சித்தாயும், அவரது தம்பியும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தனர்.
    • இதனையடுத்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் தட்டார் ரஸ்தா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு பேச்சித்தாய் என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது வீட்டிற்கு மின் வசதி இல்லாமல் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்விற்காக பேச்சித்தாயும், அவரது தம்பியும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தனர். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது.

    இது தொடர்பாக தகவல் கலெக்டர் செந்தில்ராஜ் கவனத்துக்கும் வந்தது. இதனையடுத்து. கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது தங்களுக்கு வீடு கட்ட நிதி தரவேண்டும் என மாணவி மற்றும அவரது பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் விருப்ப நிதியில் ரூ.2.10 லட்சம் நிதி அவர்களுக்கு வழங்கினார். அதன்பின் பேரூராட்சி சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது சாத்தான்குளம் வர்த்தக சங்க செயலர் மதுரம் செல்வராஜ், துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் கலெக்டரிடம், சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகம் அருகில் காலியாக உள்ள பழைய கூட்டரங்கில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இதனையடுத்து அந்த கட்டடத்தை பார்வையிட்டு அதில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அப்போது திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருசந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், தாசில்தார் ரதிகலா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தூர்ராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ×