சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. சுப்பராயபுரம் ஊராட்சியில் சுய உதவிக்குழு கட்டிடம் படிக்கட்டுகளில் மேற்கூரை அமைக்க ரூ. 2.50 லட்சம் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சாத்தான்குளம் ஒன்றியக்குழு  கூட்டம் தலைவர் ஜெயபதி தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
சாத்தான்குளம் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் ஜெயபதி தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்பாதுரை, ஒன்றிய ஆணையர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முருகேஸ்வரி தீர்மானங்களை வாசித்தார். இதில் ஒன்றிய தலநிதி கணக்கு உபரி நிதியில் இருந்து புதுக்குளம் ஊராட்சி வேலாயுதபுரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்ய ரூ. 5.30 லட்சமும், சுப்பராயபுரம் ஊராட்சியில் சுய உதவிக்குழு கட்டிடம் படிக்கட்டுகளில் மேற்கூரை அமைக்க ரூ. 2.50 லட்சமும் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் லதா, சுபா கிறிஸ்டி பொன்மலர், பிச்சிவிளை சுதாகர், செல்வம், ஜோதி, சசிகலா, ஜேசுஅஜிட் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், பொறியாளர் அருணா, உதவியாளர் சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com