சாத்தான்குளத்தில் மேய்சலுக்கு சென்ற மாட்டை திருடி சென்ற மர்மநபர் - சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் விசாரணை

இசக்கிதுரை வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்று விட்டு 4, 5 நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு வரும். மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த இசக்கிதுரையின் மாட்டை மர்ம நபர் ஒருவர் கயிறு மூலம் கட்டி திருடிச்சென்றது சி.சி.டி.வி.யில் தெரியவந்தது.
சாத்தான்குளத்தில் மேய்சலுக்கு சென்ற மாட்டை திருடி சென்ற மர்மநபர் - சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் விசாரணை
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிதுரை. இவர் ஆடு, மாடு வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்று விட்டு 4, 5 நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு வரும்.

கடந்த 30-ந்தேதி மேய்ச்சலுக்காக சென்ற இசக்கிதுரை மாடுகள் இதுவரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய அப்பகுதி யில் அமைக்கப் பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, கடந்த 30-ந்தேதி நள்ளிரவு மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த இசக்கிதுரை யின் மாட்டை மர்ம நபர் ஒருவர் கயிறு மூலம் கட்டி திருடிச் சென்றது தெரியவந்தது.

மாட்டை தினமும் பழகுவது போல கொண்டு செல்வதால் இவர் மாடு வளர்ப்பவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகத்து, சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மர்மநபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com