search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sanitation workers"

    • ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் உள்பட 132 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இப்பணியாளா்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

    தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.707 வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.

    ஆனால் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை விட குறைவாக நாளொன்று க்கு ரூ.395 மட்டுமே ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருவதாக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். போராட்டம் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.

    தொழிலாளர் நல சட்டங்களின் படியான சட்டபூர்வமான பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

    ஆனால் ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இரவு முழுவதும் கடும் பனியை பொறுப்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் காத்திருப்பு போரா ட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தூய்மை பணியாளர் பணியை தனியாருக்கு வழங்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி சங்க சி.ஐ.டி.யூ. சார்பில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆாப்பாட்டத்தில் தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தப்படி தூய்மைப்பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தூய்மை பணியாளர் பணியை தனியாருக்கு வழங்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி சங்க சி.ஐ.டி.யூ. சார்பில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, தினக்கூலி ரூ.750 வழங்க வேண்டும், தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தப்படி தூய்மைப்பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் 30 பெண் தொழிலாளர்கள் உட்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    மாநகராட்சிகளில் அனைத்து பணிகளையும் ஒப்பந்ததாரர் மூலம் வழங்குவதற்கான அரசாணை 152 ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று நடந்த முற்றுகை போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், கணக்கர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தற்காலிக முறைப்படி அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 30 பெண் தொழிலாளர்கள் உட்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

    • தீபாவளியை முன்னிட்டு க.செல்வராஜ் எம்.எல்.ஏ.முன்னிலையில் இனிப்புகள்- புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை பகுதியில் திருப்பூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் தலைமையில் தீபாவளியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும்,திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ.முன்னிலையில் மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ,சுகாதார பணியாளர்களுக்கு இனிப்புகள்- புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன்,தெற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.குமார்,பொங்கலூர் ஒன்றிய செயலாளர் எஸ்.அசோகன், மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, ஒன்றிய அவைத்தலைவர் மு.அப்துல்பாரி,ஒன்றிய பொருளாளர் மு.சர்புதீன் , தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் சுமதிசெந்தில், சகாப்தீன், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபுபாலசுப்பிரமணியம் ,மங்கலம் இளைஞர் அணி அமைப்பாளர் இப்ராஹிம் , முன்னாள் மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் தம்பிரஹீம், காங்கிரஸ் கட்சியின் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சபாதுரை மற்றும் தி.மு.க. கட்சியின் மங்கலம் நிர்வாகிகள் முபாரக்ராஜா , சேக்முஜிபுர் ரகுமான், சுல்தான்பேட்டை நிர்வாகிகள் பண்ணையார்திருமூர்த்தி ,பாலு , முருகன்,கிட்டான்,அர்ஜூனன் மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகள்
    • பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து வழங்கினார்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர்வடகரை பேரூராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகளை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து வழங்கினார்.

    பேரூராட்சி மன்ற செயலாளார் காயத்ரி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நாலாயிரம் என்ற பாப்பா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பழனிக்குமார், சுடலை முத்து, முத்துலட்சுமி, பட்டு மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோஷங்களை எழுப்பினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம் , திருமுருகன் பூண்டி , வெள்ளகோவில் உள்ளிட்ட 6 நகராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் , குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள ஊதியம் வழங்க வேண்டும், தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு நியாயமான போனஸ் வழங்கிட வேண்டும், ஆண்டு களாக மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கை வலியுறுத்தி இன்று காலை 300 மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையானவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினர்.
    • தூய்மை பணியாளர்களுக்கு போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மருத்துவ அலுவலர் விளக்கமாக எடுத்துரைத்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் கோபிசெட்டி பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோகன்குமார் தலைமையிலான குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையானவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார். முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத பரப்பு ரையாளர்கள் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசி, மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மருத்துவ அலுவலர் விளக்கமாக எடுத்துரைத்தார். விழிப்புணர்வு காணொளி காட்சிகளும் காண்பிக்கப்பட்டது.

    • கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • கோவை மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மற்ற மாவட்டங்களில் அளிக்கப்படும் குறைந்தபட்ச கூலியை விட குறைவாக உள்ளது.

    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

    கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி ரூ. 750 வழங்க கோரி, சமூக நீதி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

    அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மற்ற மாவட்டங்களில் அளிக்கப்படும் குறைந்தபட்ச கூலியை விட குறைவாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    ஊராட்சியில் 8 மணி நேரம் பணிபுரியும் பணியாளர்களுக்கு வெறும் 80 ரூபாய் மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு ரூ.325் மட்டும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை. எனவே மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கோவை சுண்டப்பா ளையம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் சுண்டப்பாளையம் ரோட்டில் மசுரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. பலதரப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 200 குடும்பத்தினர் தினசரி, வார மற்றும் மாதம் அமாவசை, பவுர்ணமி தினங்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நெடுஞ்சாலை துறையினர் கோவிலை அகற்ற போவதாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். எனவே கோவிலை அகற்றாமல் வழிபாடு மேற்கொள்ள நிரந்தர தீர்வு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, அங்குள்ள துப்புரவு தொழிலாளிகள் காலை கழுவியது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். #KumbhMela #PMModi #ChandrababuNaidu
    அமராவதி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி புனித நீராட பிரதமர் மோடி சென்றார். அங்கு பணிபுரிந்த  துப்புரவு தொழிலாளிகளின் கால்களை கழுவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் துப்புரவு பணியாளர்கள் மட்டுமே எவ்வித பாகுபாடுமின்றி பணி புரிகின்றனர் என மோடி பாராட்டினார். அத்துடன் அவர்களுக்கு அங்கவஸ்திரமும் அணிவித்து கவுரவித்தார். இந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவியது. மோடியின் இந்த செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.



    இந்நிலையில் ஆந்திர முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இது குறித்து கூறியதாவது:-

    துப்புரவு தொழிலாளர்கள் 4 ஆண்டுகளாக சேவை செய்து வருகின்றனர். ஒரு முறை கூட மோடி இவ்வாறு செய்யவில்லை. தற்போது தேர்தலை நினைவில் கொண்டு துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி மரியாதை செலுத்துகிறார்.  இந்த செயலினால் மோடியை விட சிறந்த நடிகர் யாரும் இல்லை என தெரிகிறது.

    தனக்கு வணக்கம் கூறுபவர்களுக்கு கூட திரும்ப மரியாதை செய்யாத மோடி, தனது குருவான அத்வானியையும் அவமரியாதை செய்தார்.  மத்தியில் ஆட்சியில் இருந்தும் அனைத்து துறைகளிலும் தோல்வியைக் கண்டுள்ளார். அமலாக்கத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என அனைத்தையும் தவறான வழியில் பயன்படுத்தினார். விவசாயிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியை தவிர, நாட்டில் அனைவரும் மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KumbhMela #PMModi #ChandrababuNaidu

    ×