என் மலர்
உள்ளூர் செய்திகள்

புத்தாடை வழங்கப்பட்ட போது எடுத்த படம்
சாம்பவர் வடகரை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை- இனிப்புகள்
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகள்
- பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து வழங்கினார்.
சாம்பவர் வடகரை:
சாம்பவர்வடகரை பேரூராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகளை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து வழங்கினார்.
பேரூராட்சி மன்ற செயலாளார் காயத்ரி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நாலாயிரம் என்ற பாப்பா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பழனிக்குமார், சுடலை முத்து, முத்துலட்சுமி, பட்டு மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






