என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweets"

    குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வகையில் இது இரண்டையும் வைத்து சூப்பரான மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    குளிர்ச்சியான பால் - 2 கப்
    சாக்லேட் கிரீம் பிஸ்கட் பாக்கெட் - 1
    கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் - 1
    சாக்லேட் சாஸ் - 2 டீஸ்பூன்
        
    செய்முறை:

    முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதில் கிரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி.

    இந்த மில்க் ஷேக்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனை நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனை நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர். 

    அதன்படி மதுக்கூர் வடக்கு பகுதியில் பெரமையா கோயில் எதிரே  பெட்ரோல் பங்க் அருகில் மதுக்கூர் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கென்னடி  தலைமையில் மாவட்ட துணைத்தலைவர்கள் பஞ்சாட்சரம், அத்தி.வேதா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    அப்போது மத்திய அரசை பின்பற்றி மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

    இதில் மாவட்ட செயலாளர் ரெங்கநாயகி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஆரஞ்சு பர்ஃபி எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்:

    ஆரஞ்சு பழங்கள் - 4
    சர்க்கரை சேர்க்காத கோவா - 400 கிராம்
    சர்க்கரை - 400 கிராம்
    முந்திரி, பாதாம் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    ஆரஞ்சு பழங்களை உரித்து, மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி, சுளைகளை தனியாக எடுத்து வைக்கவும்.

    கோவாவை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த கோவாவை அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில் கொட்டி அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

    இந்தக் கலவையை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவை கெட்டியான பதத்துக்கு வரும் வரை கிளறவும்.

    பின்பு அதில் ஆரஞ்சு சுளைகளைக் கொட்டிக் கிளறவும்.

    இப்போது கலவை சற்றே நீர்த்து போகும். அது மீண்டும் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும்.

    கெட்டியான பதத்துக்கு வரும்போது, அதில் நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

    நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சமமாக்கவும்.

    ஆறிய பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த செசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முந்திரி - 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
    பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
    தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)
    சர்க்கரை - 1 1/2 கப்
    நெய் - 1/2 கப்
    கிஸ்மிஸ் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    தண்ணிரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள்.

    கலவை கெட்டியாகி இறுகி வரும் போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள்.

    பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தேங்காய் அல்வா ரெடி.
    பாதாம் பூரி இந்தியாவின் பல இடங்களில் பண்டிகைகளின் போது விருப்பமாக செய்யப்படுகிறது. இன்று இந்த பூரியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 1 கப்
    சர்க்கரை - 3/4 கப்
    உருக்கிய நெய் - 1/4 கப்
    உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்
    உப்பு - சுவைக்கேற்ப
    ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    கிராம்பு - 8-10

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள்.

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும். நன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும்.

    அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும்.

    இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன பந்து மாதிரி உருட்டி பூரில் போல் தேய்த்து பூரியை முக்கோண வடிவில் எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி).

    கடாயில் எண்ணெயை சூடானதும் ஒவ்வொரு பூரியாக போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்.

    பொரித்து சுடச்சுட உள்ள பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்.

    அதன் மேல் துருவிய தேங்காயை தூவி அப்படியே சுவையுடன் அழகாக சாப்பிடலாம்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தித்திப்பான மாம்பழக் கூழ் - ஒரு கப்,
    சர்க்கரை - அரை கப்,
    பால் - ஒரு லிட்டர்,
    அரிசிக்குருணை - 2 டேபிள்ஸ்பூன்,
    கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்,
    மேங்கோ எசன்ஸ் (விரும்பினால்) - சில துளிகள்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

    செய்முறை:

    முந்திரி, திராட்சையை நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.

    மீதமுள்ள நெய்யை விட்டு அரிசிக் குருணையைப் போட்டு லேசாக வறுத்து, அதில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

    அரிசி நன்றாக வெந்து கண்ணாடி போல் ஆகி பால் சிறிது வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

    பிறகு கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, மாம்பழக் கூழையும் சேர்க்கவும்.

    எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி, முந்திரி - திராட்சை, மேங்கோ எஸன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.
    ‘இயற்கை ஜெல்லி’ என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். நுங்கு வைத்து அருமையான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள்:

    நுங்கு - 5
    பால் - ½ லிட்டர்
    சர்க்கரை - 75 கிராம்
    ஏலக்காய் - 3
    குங்குமப்பூ - 2 சிட்டிகை

    செய்முறை:

    நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஊற வைத்துத் தோல் உரித்த பாதாம், ஏலக்காய் மற்றும் சிறிது பால் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    காய்ச்சிய பாலை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாதாம் கலவையைக் கலந்து சற்று கெட்டியாகும் வரை காய்ச்சி ஆற வைக்கவும்.

    பின்பு அதில் நுங்குத் துண்டுகளைச் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரச்செய்து, குங்குமப்பூவைத் தூவி சில்லெனப் பரிமாறவும்.

    இப்போது அருமையான நுங்கு பாயாசம் ரெடி.
    • சாக்லேட் பால்ஸ் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரிச்சான ரெசிபி.
    • அளவான பொருட்களை வைத்து அதிரடியாக செய்யக்கூடிய ரெசிபி இது.

    தேவையான பொருட்கள்

    கோகோ பவுடர் - 25 கிராம்,

    கன்டென்ஸ்டு மில்க் - கால் கப்,

    பட்டர் - ஒரு ஸ்பூன்,

    உப்பு - சிறிது,

    சாக்லேட் பால்களை உருட்ட தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் (உலர வைத்தது).

    பருப்பு துகள்கள் சாக்லேட் மற்றும் கலர் ஸ்பிரிங்கில்ஸ்.

    செய்முறை

    ஒரு பிளேட்டில் சிறிது வெண்ணெய்யை தடவி வைக்கவும்.

    இன்னொரு பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், வெண்ணெய், உப்பு, கோகோ பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து சூடுபடுத்தவும். மிதமான தீயில் கலவையைக் கலந்து பாகும் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

    இரண்டு நிமிடத்தில் கலவை கட்டியானதும் வெண்ணெய் பூசப்பட்ட தட்டில் மேல் ஊற்றவும்.

    சிறிது ஆற வைத்து இந்த பிளேடை பிரிட்ஜில் வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து கையில் வெண்ணெயை தடவி இந்த சாக்லேட் கலவையை உருண்டைகளாக உருட்டவும்.

    இந்த உருண்டையை ஸ்ப்ரிங்கில்ஸ், பருப்பு துகள்கள் மீது உருட்டி எடுத்தால் சுவையான சாக்லேட்ஃபட்ஜ் பால்ஸ் தயார்.

    • பாப்கார்ன், சாக்லேட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • இன்று இது இரண்டையும் வைத்து ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாப்கார்ன் சோளம் - ஒரு கப்,

    குக்கீஸ் சாக்லேட் - 50 கிராம்,

    வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய், உப்பு - சிறிதளவு,

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பொடித்துப் போடவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது சாக்லேட் உள்ள

    பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும். உருக ஆரம்பித்ததும் இறக்கி நெய் (அ) வெண்ணெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு, பாப் கார்னைப் போட்டு, உப்பு சேர்த்து மூடியால் மூடி விடவும். பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும்.

    பிறகு, தயாரித்த சாக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும்.

    நன்கு குலுக்கி சீராக பரவ விடவும்.

    சூப்பரான சாக்லேட் பாப்கார்ன் ரெடி.

    இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் போட்டு வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

    • தீபாவளியை முன்னிட்டு க.செல்வராஜ் எம்.எல்.ஏ.முன்னிலையில் இனிப்புகள்- புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை பகுதியில் திருப்பூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் தலைமையில் தீபாவளியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும்,திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ.முன்னிலையில் மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ,சுகாதார பணியாளர்களுக்கு இனிப்புகள்- புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன்,தெற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.குமார்,பொங்கலூர் ஒன்றிய செயலாளர் எஸ்.அசோகன், மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, ஒன்றிய அவைத்தலைவர் மு.அப்துல்பாரி,ஒன்றிய பொருளாளர் மு.சர்புதீன் , தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் சுமதிசெந்தில், சகாப்தீன், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபுபாலசுப்பிரமணியம் ,மங்கலம் இளைஞர் அணி அமைப்பாளர் இப்ராஹிம் , முன்னாள் மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் தம்பிரஹீம், காங்கிரஸ் கட்சியின் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சபாதுரை மற்றும் தி.மு.க. கட்சியின் மங்கலம் நிர்வாகிகள் முபாரக்ராஜா , சேக்முஜிபுர் ரகுமான், சுல்தான்பேட்டை நிர்வாகிகள் பண்ணையார்திருமூர்த்தி ,பாலு , முருகன்,கிட்டான்,அர்ஜூனன் மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நம்பிக்கை மனநல காப்பகத்தில் தங்கி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • புதிய ஆடைகள் , இனிப்பு மற்றும் பட்டாசுகள் டெல்டா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி கீழ வீதியில் இயங்கி வரும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் தங்கி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய ஆடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகள் டெல்டா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்விற்கு தலைவர்ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மண்டலம் 25 உதவி ஆளுநர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    டெல்டா ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகளை வாழ்த்தி நம்பிக்கை மனநல காப்பக சேர்மன் சௌந்தர்ராஜன், அவரது துணைவியார் காப்பகத்தின் துணை சேர்மன் விஜயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி டெல்டா ரோட்டரி உறுப்பினர்களை கௌரவித்தனர்.

    முடிவில் செயலாளர் ராஜதுரை நன்றி கூறினார்.

    இந்த தீபாவளி சிறப்பு புத்தாடை வழங்கும் ஏற்பாட்டினை பொருளாளர் அகிலன், உடனடி முன்னாள் தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மனநல காப்பகத்தில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    • 1243 துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு- புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமிராஜா திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியா ளரான தூய்மைப் பணியாளர்களை பாராட்டி கவுரவப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 3-வது முறையாக ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் தூய்மைப் பணியாளர்கள் 1243 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், கொரோனா காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் தொற்று பரவாத வகையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடனும் சிறப்பாகவும் பணியாற்றிய முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா காலத்தில் கோவில்கள் கூட மூடி இருந்தது. ஆனால் தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் சிறப்பாக பணியாற்றி ராஜபாளையம் தொகுதியில் கொரோனா தாக்கத்தை குறைத்துள்ளீர்கள். உங்களை பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.

    இந்த நிகழ்வில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம்ராஜா, தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா,(தெற்கு) ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ,மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×