என் மலர்
உள்ளூர் செய்திகள்

இனிப்பு வழங்கி பா.ஜ.க.வினர் கொண்டாடினர்.
பா.ஜ.க. இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனை நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனை நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி மதுக்கூர் வடக்கு பகுதியில் பெரமையா கோயில் எதிரே பெட்ரோல் பங்க் அருகில் மதுக்கூர் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கென்னடி தலைமையில் மாவட்ட துணைத்தலைவர்கள் பஞ்சாட்சரம், அத்தி.வேதா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அப்போது மத்திய அரசை பின்பற்றி மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதில் மாவட்ட செயலாளர் ரெங்கநாயகி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






