search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்புரவு தொழிலாளர்களை மதிக்காத மோடி, தேர்தலுக்காக  காலை கழுவுகிறார்- சந்திரபாபு நாயுடு காட்டம்
    X

    துப்புரவு தொழிலாளர்களை மதிக்காத மோடி, தேர்தலுக்காக காலை கழுவுகிறார்- சந்திரபாபு நாயுடு காட்டம்

    உத்தரபிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, அங்குள்ள துப்புரவு தொழிலாளிகள் காலை கழுவியது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். #KumbhMela #PMModi #ChandrababuNaidu
    அமராவதி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி புனித நீராட பிரதமர் மோடி சென்றார். அங்கு பணிபுரிந்த  துப்புரவு தொழிலாளிகளின் கால்களை கழுவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் துப்புரவு பணியாளர்கள் மட்டுமே எவ்வித பாகுபாடுமின்றி பணி புரிகின்றனர் என மோடி பாராட்டினார். அத்துடன் அவர்களுக்கு அங்கவஸ்திரமும் அணிவித்து கவுரவித்தார். இந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவியது. மோடியின் இந்த செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.



    இந்நிலையில் ஆந்திர முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இது குறித்து கூறியதாவது:-

    துப்புரவு தொழிலாளர்கள் 4 ஆண்டுகளாக சேவை செய்து வருகின்றனர். ஒரு முறை கூட மோடி இவ்வாறு செய்யவில்லை. தற்போது தேர்தலை நினைவில் கொண்டு துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி மரியாதை செலுத்துகிறார்.  இந்த செயலினால் மோடியை விட சிறந்த நடிகர் யாரும் இல்லை என தெரிகிறது.

    தனக்கு வணக்கம் கூறுபவர்களுக்கு கூட திரும்ப மரியாதை செய்யாத மோடி, தனது குருவான அத்வானியையும் அவமரியாதை செய்தார்.  மத்தியில் ஆட்சியில் இருந்தும் அனைத்து துறைகளிலும் தோல்வியைக் கண்டுள்ளார். அமலாக்கத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என அனைத்தையும் தவறான வழியில் பயன்படுத்தினார். விவசாயிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியை தவிர, நாட்டில் அனைவரும் மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KumbhMela #PMModi #ChandrababuNaidu

    Next Story
    ×