search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand"

    • திருநா வலூர் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.
    • மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் ெகாண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை தாலுக்கா கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் திருடப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருநா வலூர் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி, திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பசலை ராஜ் தலைமையிலான போலீசார் கெடிலம் ஆற்றுப் பகுதியில் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது, 5 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றப்படுவதை போலீசார் பார்த்தனர். மணலை திருடி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த 5 பேரை பிடிக்க போலீசார் முயற்சித்தனர்.

    இதில் 5 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து திருட்டு மணலை ஏற்ற பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் ெகாண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிமிரெட்டிப் பாளையத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 30), வைப்பாளையத்தை சேர்ந்த ராஜா (35), தியாகராஜ் (40), வெங்கடாஜலபதி (37), களத்தூரை சேர்ந்த மணயரசன் (39) ஆகியோர் மாட்டு வண்டியின் உரிமை யாளர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • உரிமையாளர்-டிரைவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி மற்றும் போலீசார் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அந்த வழி யாக வந்த டிராக்டரை நிறுத்துமாறு சைகை காண் பித்தனர்.

    டிராக்டரை ஓட்டி வந்த நபர், போலீசாரை பார்த்த தும் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அந்த டிராக்டரை சோதனை செய்தபோது, அதில் வண்டல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். டிராக்டரை ஓட்டி வந்த மாரியப்பன் மற்றும் உரிமை யாளர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    • கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்யபட்டது
    • போலீசார் திருமாநிலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

    கரூர்,

    கரூர் மாவட்ட அமராவதி ஆற்றங்கரையோரம் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வந்தாலும் மணல் திருட்டை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் மணல் கடத்தல் நடப்பதாக வந்த புகாரையடுத்து கரூர் பசுபதிபாளையம் போலீசார் திருமாநிலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரட்டை மாட்டு வண்டியில் கரூர் செல்லாண்டி பாளையத்தை சேர்ந்த ராம்ராஜ் (வயது 40) என்பவர் மணல் கடத்தி சென்றார். இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க சென்ற போது ராம்ராஜ் தப்பி ஓடினார். பின்னர் போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணல் ஏற்றி செல்லும் லாரிகள் அதனை தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கிறது.
    • அந்த லாரிக்கு அபராதம் விதிக்க சீர்காழி காவல்து றைக்கு பரிந்துரைத்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மாதிரவேளுர், பாலுரான் படுகை ஆகிய இடங்களில் மணல் குவாரி அமைக்கப்பட்டு ஆன்லைன் பதிவு செய்து மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த மணல் குவாரியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மணல் ஏற்றி செல்லும் லாரிகள் அதனை தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கிறது.

    இதனால் அந்த சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இந்நிலையில், வழக்கம்போல் மணல் குவாரியில் இருந்து திருநகரிக்கு மணல் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.

    அந்த லாரி சீர்காழி சூரக்காடு வழியாக கலெக்டரின் ஆய்விற்கு சென்று கொண்டிருந்த தாசில்தார் செந்தில்குமார் லாரியை வழிமறித்து நிறுத்தினார்.

    பின், ஆவணங்களை ஆய்வு செய்து விட்டு தார்ப்பாய் கொண்டு மூடாமல் மணல் ஏற்றி சென்றதை அறிந்து அந்த லாரிக்கு அபராதம் விதிக்க சீர்காழி காவல்து றைக்கு பரிந்துரைத்தார்.

    அதேபோல், அவ்வழியாக வந்த மற்ற லாரிகளையும் நிறுத்தி அபராதம் விதிக்க காவல்துறைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தார்.

    இதனை அறிந்த மற்ற லாரிகள் மாற்று பாதை வழியாக திருப்பிக்கொண்டு சென்றனர்.

    • ஆமூர் ஏரியில் இருந்து சவுடு மண் எடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏரியில் மணல் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அருகே காட்டுப்பள்ளி பஞ்செட்டி பகுதியில் உள்ள சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொன்னேரி அருகே உள்ள ஆமூர் ஏரியில் இருந்து சவுடு மண் எடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் ஏரியில் விதிமுறையயை மீறி சுமார் 20 அடி ஆழம் மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வெளியிடங்களுக்கு முறைகேடாக விற்கப்படுவதாகவும் தெரிகிறது.

    ஏரியில் மணல் அள்ளப்படுவதால் சுற்றி உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளுக்கும் விவசாயத்திற்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏரியில் மணல் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்ட மான சூழ் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஏரியில் மணல் அள்ளுவது தற்கா லிகமாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ராஜபாளையம் அருகே டிராக்டர்களில் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • பலமுறை எச்சரிக்கை செய்தும் எந்த பலனும் இல்லை.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லம் கொண்டான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு உரிய வயல்வெளிகள் மற்றும் இதர காடுகளுக்கு குமிட்டி குளம் கண்மாய் பிரதானமாகும்.

    இங்கு தேங்கும் தண்ணீர் பாசனத்திற்கும், இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் இதர குடிநீர் ஆதாரங்களுக்கும் இந்த குளத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கண்மாயில் ஒரு கும்பல் 5 ஜே.சி.பி. எந்திரங்கள், 20 டிராக்டர்களை வைத்து 10 அடி ஆழம் வரை தோண்டி மணல் கடத்தி வருகின்றனர்.

    ஒரு நாளைக்கு 100 முதல் 150 டிராக்டர்களில் மணல் கடத்தப்படுகிறது. ஒரு டிராக்டர் மணல் ரூ.1,600- க்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

    அந்த பகுதி வழியாக அதி வேகமாக மணல் கடத்தல் வாகனங்கள் இயக்கப் படுவதை கண்டித்து பொது மக்கள் பலமுறை எச்சரிக்கை செய்தும் எந்த பலனும் இல்லை.

    இதை கண்டித்து பொதுமக்கள் வாக னங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதையறிந்த மணல் கடத்தல் காரர்கள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி வாகனங்களை எடுத்து சென்று விட்டனர்.

    அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி கோரி ஜமீன் கொல்லங் கொண்டான் பிரதான சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.
    • இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மானத்தாள் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமார். இவர் அந்த பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.

    இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது. இதனால் அச்சமடைந்த வினோத்குமார் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.தனக்கு மிரட்டல் விடுத்த மணல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    மேலும் அந்த கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் புகார் தெரிவித்தார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் கிராம நிர்வாக அதிகாரிக்கு மணல் கடத்தல் அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் எந்திரங்களை கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
    • அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே மத்தியக்குடியில் விவசாய நிலங்களுக்கு மையத்தில் குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.

    இங்கு எடுக்கப்படும் மண் குத்தாலம்,திட்டச்சேரி வழியாக பனங்குடி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த குவாரியில் அரசு அனுமதித்ததை விட கூடுதலாக மண் எடுப்பதாகவும், இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து நாகை புள்ளியியல் துறை உதவி புவியியலாளர் சேகர், தா சில்தார் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் மத்தியக்கு டியில் உள்ள குவாரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது உதவி புவியியலாளர் சேகர் கூறியதாவது:-

    மத்தியக்குடியில் உள்ள குவாரி மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.

    இங்கு எடுக்கப்படும் மண் 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

    அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மண் எடுத்து கரையில் வைக்கப்பட்டுள்ளது.

    அதிலிருந்து பார்க்கும்போது ஆழமாக தெரிகிறது.

    எனவே அதை உடனடியாக அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு விதிகளுக்கு உட்பட்டுதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை என்றார்.

    • மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது.
    • சிதிலம் அடையாமல் அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடந்த 8-ந்தேதி அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கடற்கரை ஓரம் மணலில் மூன்று சிலைகள் இருப்பதை கண்டறிந்து தகவல் அளித்ததன் பேரில் புதுப்பட்டினம் போலீசார் மற்றும் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் நேரில் சென்று இரண்டு பெருமாள் சிலைகள் மற்றும் ஒரு அம்மன் சிலை ஆகியவைகளை கைப்பற்றி எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு சிலைகள் அதே கடற்கரையில் இருப்பதாக தகவல் அறிந்த வி.ஏ.ஓ. பவளச்சந்திரன் மற்றும் புதுப்பட்டிணம் போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த 3 அடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் இரண்டடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை ஆகிய இரண்டு சிலைகளையும் எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    ஏற்கனவே மீட்கப்பட்ட மூன்று சுவாமி சிலைகள் குறித்து நடைபெற்ற விசாரணையில் சிலைகள் சீனிவாச பெருமாள், துவாரபாலகர , சிம்மவாகனி என தெரியவந்தது

    மேலும் கிடைக்கப்பெற்ற சிலைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் கடற்கரை மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது. யார் கொண்டு வந்து குறிப்பாக இங்கு போட்டார்கள். எதற்காக போட்டார்கள் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுவாக சிதிலமடைந்த சிலைகளை மட்டுமே கோயில்களில் பயன்படுத்த மாட்டார்கள்.

    ஆனால் இங்கு எடுக்கப்பட்ட அனைத்து சாமி சிலைகளும் சிதிலம் அடையாமல் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.

    ஏன் நல்ல சாமி சிலைகளை இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்ற கோணத்திலும் புதுப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர் அருகே சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்கள்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு அருகே வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தண்ணீர்பந்தல் மேட்டிலிருந்து பரமத்தி நோக்கி அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் நிறுத்தி வாகன சோதனை செய்ய முயன்றனர். அப்போது சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அதில் வந்த மற்றொருவரும் சரக்கு ஆட்டோவை நிறுத்தி சாவியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

    இதனையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 40 மணல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக அனுமதியின்றி காவிரி ஆற்றில் இருந்து கடத்தி வந்த மணல், சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

    பின்னர் வழக்குப்பதிவு செய்து, மணல் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய  2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    ராமேசுவரம் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால் சமீப காலமாக அடிக்கடி கடல் உள்வாங்கி வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. 4 பக்கமும் கடல் சூழ்ந்த ராமேசுவரத்தில் ராமர் சிவபூஜை செய்ததாக ஐதீகம். இதனால் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

    காசி செல்லும் பக்தர்கள் ராமேசுவரத்திலும் புனித நீராட வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே காசி செல்லும் பக்தர்கள் ராமேசுவரத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று (ஞாயிற்று) விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதியில் புனித நீராடினர். அப்போது திடீரென 100 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கி சென்றது. இதனை கண்ட பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இயற்கை சீற்றம் ஏதோ ஏற்பட போகிறதோ? என்று பதட்டம் அடைந்தனர். ஆனால் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. கடல் அமைதியாக காணப்பட்டது.

    இதனால் ஒரு சில பக்தர்கள் அச்சம் அடைந்த போதிலும் பல பக்தர்கள் அதை பற்றி கவலைபடாமல் புனித நீராடினர்.

    முன்னதாக ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வடக்கு வாசல் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    அதனை தொடர்ந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதணை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால் சமீப காலமாக அடிக்கடி கடல் உள்வாங்கி வருகிறது. கடந்த 10 நாட்களாக திடீர், திடீரென கடல் உள்வாங்கியபடி இருப்பதால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விடுமோ? என்று ராமேசுவரம் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.

    சங்கரன்கோவில் அருகே மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
    தென்காசி:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளத்தை அடுத்த ராமசாமியாபுரம் ரெயில்வே பாலம் அருகே மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாதவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த 5 பேரை சுற்றி வளைத்தனர். 

    ஆனால் அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மணல் திருடியது அதே பகுதியை சேர்ந்த மதியழகன், மனோஜ்குமார், தேவராஜ், கலைக்குமார் மற்றும் மணிசேகர் என்பது தெரியவந்தது.  இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட தேவராஜ், கலைக்குமார் மற்றும் மணிசேகர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    தலைமறைவான டிராக்டர் உரிமையாளர் மதியழகன் மற்றும் டிரைவர் மனோஜ் குமார் ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து டிராக்டர் மற்றும் 1 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
    ×