என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மணல் கடத்தல்; மாட்டு வண்டி பறிமுதல்
- கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்யபட்டது
- போலீசார் திருமாநிலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
கரூர்,
கரூர் மாவட்ட அமராவதி ஆற்றங்கரையோரம் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வந்தாலும் மணல் திருட்டை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் மணல் கடத்தல் நடப்பதாக வந்த புகாரையடுத்து கரூர் பசுபதிபாளையம் போலீசார் திருமாநிலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரட்டை மாட்டு வண்டியில் கரூர் செல்லாண்டி பாளையத்தை சேர்ந்த ராம்ராஜ் (வயது 40) என்பவர் மணல் கடத்தி சென்றார். இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க சென்ற போது ராம்ராஜ் தப்பி ஓடினார். பின்னர் போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






