search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டர்களில் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மறியல்
    X

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    டிராக்டர்களில் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மறியல்

    • ராஜபாளையம் அருகே டிராக்டர்களில் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • பலமுறை எச்சரிக்கை செய்தும் எந்த பலனும் இல்லை.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லம் கொண்டான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு உரிய வயல்வெளிகள் மற்றும் இதர காடுகளுக்கு குமிட்டி குளம் கண்மாய் பிரதானமாகும்.

    இங்கு தேங்கும் தண்ணீர் பாசனத்திற்கும், இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் இதர குடிநீர் ஆதாரங்களுக்கும் இந்த குளத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கண்மாயில் ஒரு கும்பல் 5 ஜே.சி.பி. எந்திரங்கள், 20 டிராக்டர்களை வைத்து 10 அடி ஆழம் வரை தோண்டி மணல் கடத்தி வருகின்றனர்.

    ஒரு நாளைக்கு 100 முதல் 150 டிராக்டர்களில் மணல் கடத்தப்படுகிறது. ஒரு டிராக்டர் மணல் ரூ.1,600- க்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

    அந்த பகுதி வழியாக அதி வேகமாக மணல் கடத்தல் வாகனங்கள் இயக்கப் படுவதை கண்டித்து பொது மக்கள் பலமுறை எச்சரிக்கை செய்தும் எந்த பலனும் இல்லை.

    இதை கண்டித்து பொதுமக்கள் வாக னங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதையறிந்த மணல் கடத்தல் காரர்கள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி வாகனங்களை எடுத்து சென்று விட்டனர்.

    அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி கோரி ஜமீன் கொல்லங் கொண்டான் பிரதான சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×