search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadside"

    • நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலத்தில் உள்ள நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
    • சனிக்கிழமைதோறும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக சனிக்கிழமைதோறும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு ,பிச்சம்பாளையம்,பி.என்.ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலையோர ஆக்கிரமிப்புகள் 2-வது நாளாக அகற்றப்பட்டது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலூர் மெயின் ரோட்டில் யூனியன் அலுவலகம் அருகே சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    இந்தப்பணியில் மேலூர் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், நகர அமைப்பு ஆய்வாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பாலமுருகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும்போது கடைக்கா ரர்களுக்கும், அலுவலர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த மேலூர் நகராட்சி கவுன்சிலர்கள் திவாகர், ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ள உதவினர். 2வது நாளாக இன்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

    • வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன.
    • வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் கிடையாது.

    உடுமலை :

    உடுமலை நகரில் ராஜேந்திரா ரோடு, கல்பனா வீதி, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட வழித்தடங்கள் பிரதான பகுதியாக உள்ளன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன.தினமும் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் என எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. ஆனால் இப்பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் கிடையாது. பெரும்பாலான வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு, தங்கள் பணிகளுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த ரோடுகளில் தினமும் இடநெருக்கடி நீடிப்பதால், வாகன ஓட்டுனர்கள் திணறுகின்றனர்.

    முறையற்ற போக்குவரத்து, வாகன நிறுத்தம் இல்லாமை போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கின்றனர். மத்திய பஸ் நிலையம் ஒட்டிய ரோடுகளில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சிறு விபத்துக்களும் அதிகரிக்கின்றன. பிரதான பகுதிகளில், வாகன நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய கடைகள், நிறுவனங்கள், உணவகங்களில் வாகனம் நிறுத்த வசதி ஏற்படுத்தாவிடில், உரிமத்தை புதுப்பிக்க அனுமதிக்கக்கூடாது. விதிகளை மீறும் தனி நபர், நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது, போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு தொடர்ந்தால் மட்டுமே விதிமீறலை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சாலையானது மிகவும் குறுகலாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிக்கி கீழே விழுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
    • அபாய பள்ளங்களை உடனடியாக சரி செய்து வாகன விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசியில் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வரும் நிலையில் பழைய குற்றாலம் முதல் மெயின் அருவி வரை செல்லும் சாலைகளில் இடையிடையே அபாய பள்ளங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்த சாலையானது மிகவும் குறுகலாக இருப்பதால் எதிரெதிரே கார், வேன் உள்ளிட்டவை வரும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிக்கி கீழே விழுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    எனவே பழைய குற்றாலம் முதல் மெயின் அருவி வரை செல்லும் சாலையில் காணப்படும் அபாய பள்ளங்களை உடனடியாக சரி செய்து வாகன விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் இயங்கி வரும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு வார காலமாக சாலையோரம் கடை அமைக்க தடை விதிக்கப்பட்டது .
    • கடை அமைப்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு அருகாமையில் சாலையோரங்களில் வியாபாரிகள் கடை அமைத்து காய்கறிகள் விற்பனை செய்து வந்தனர்.

    இந்தநிலையில் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு வார காலமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் கடை அமைக்க தடை விதிக்கப்பட்டது . மேலும் கடை அமைப்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே சாலையோரங்களில் உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் அப்பால் வியாபாரம் செய்து வந்ததைப் போல தற்போதும் அனுமதி வழங்கிட வேண்டும் , காலை 4 மணி முதல் 8 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ,டி,யு. சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மதுக்கூர், வடசேரிலிருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் 7 பேர் வந்து இன்று அதிகாலை வந்து கெண்டிருந்தனர்.
    • நுகர்பொருள் வாணிபக் கழகம் எதிரே நெல் காயவைத்துள்ளது தெரியாமல் அதில் உள்ள பேரிகாடில் கார் மோதி உள்ளது.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் - திருக்கானூர்பட்டி சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளது. அங்கு நெல்லை சாலையில் கொட்டி வைத்து நேற்று காய வைத்துள்ளனர். பின்னர் பர்தாவை போட்டு நெல் குவியல்கள் மூடி வைக்கப்பட்டு இருந்துள்ளது.

    இந்நிலையில் மதுக்கூர், வடசேரிலிருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் 7 பேர் வந்து இன்று அதிகாலை வந்து கெண்டிருந்தனர். அப்போது நுகர்பொருள் வாணிபக் கழகம் எதிரே நெல் காயவைத்துள்ளது தெரியாமல் அதில் உள்ள பேரிகாடில் கார் மோதி உள்ளது. இதில் நிலை தடுமாறி கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது

    இதில் காரில் வந்த வடசேரி நெம்மேலி பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் காரில் பயணம் செய்த ராமமூர்த்தி (50), பாலமுருகன் (35), மாரிமுத்து (60), சங்கீதா (40), அன்பரசன் (45), சிறுவன் பிரிநீத் (5) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    இதில் படுகாயமடைந்த 3 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான திருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாலையில் நெல்லை காய வைத்து மூடி வைக்கப்பட்டு இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் வீடுகள் இன்றி தெருவில் வசிப்போர் குறித்த விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #StreetDwellers
    சென்னை:

    தமிழகத்தில் வீடுகள் இன்றி சாலையோரம் வசிப்பவர்கள் குளிர்காலத்தில் கடுமையாக அவதிப்படுவதாகவும், அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்ய வேண்டியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதிலும் எத்தனை பேர் வீடின்றி வசிக்கிறார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

    தமிழகம் முழுவதிலும் வீடுகள் இன்றி சாலையோரம் அல்லது தெருவில் வசிக்கும் மக்கள் குறித்து கணக்கெடுத்து ஜனவரி 4-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. #MadrasHC #StreetDwellers
    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஷேர் ஆட்டோக்கள் விழுப்புரம் கோர்ட்டு முன்புறம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    மேலும் விழுப்புரம் நேருஜி சாலையில் மாதத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை சாலையின் வலதுபுறமும், அடுத்த 15 நாட்கள் சாலையின் இடதுபுறமாகவும் சுழற்சி முறையில் இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று காலை விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், சப்- இன்ஸ்பெக்டர் வசந்த், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் அதிரடியாக அகற்றினர்.

    அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையோரமாக இருந்த பழக்கடைகள், காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள், கடைகளின் விளம்பர பலகைகள் ஆகியவற்றை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் யாராவது ஆக்கிரமிப்பு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். 
    ×