கடலூர் அருகே சாலை ஓரம் இறந்து கிடந்த முதியவர்

நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே  சாலை ஓரம்  இறந்து கிடந்த  முதியவர்
Published on

கடலூர்:

கடலூர் செம்மண்டலத்தில் உள்ள நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com