search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raid"

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார்.
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை எஸ்.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள பேக்கரியில் வாலிபர் ஒருவர் 2 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கியுள்ளார். தண்ணீரில் குப்பை மற்றும் பாசி படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

    அந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார். அதில் தூசிகள் இருந்ததால் அந்த பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடையில் உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெறாமல் மேலும் பேக்கரி கடை நிறுவனத்திற்கான சான்றிதழை வைத்து கடையை நடத்தியது தெரியவந்தது.

    மேலும் ஆய்வு செய்யும் போது அழுகிய உருளைக்கிழங்கு, தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருந்தது.இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் அந்த குடிநீர் பாட்டிலை பறிமுதல் செய்து பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    • துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதேபோல், கரூர் மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர்களை அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து, அதிகாரிகள் நேற்று இரவு மீண்டும் துணை மேயர் வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர். ஆனால், வீட்டில் யாரும் இல்லாததை அடுத்து கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

    துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • மத்திய பிரதேச மாநில வீட்டுவசதித் துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
    • இவரது வீட்டில் 100 நாய்கள், வீடு முழுக்க வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

    மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் மத்திய பிரதேச அரசு அலுவலர் வீட்டில் 5 முதல் 7 ஆடம்பர கார்கள் உள்பட மொத்தம் இருபது வாகனங்கள், 20 ஆயிரம் சதுர அடி நிலம், விலை உயர்ந்த இரண்டு டசன் கிர் இன மாடுகள், ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 98 இன்ச் டாப் எண்ட் டிவி மாடல் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் சோதனையின் போது கண்டறிந்தனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் வீட்டுவசதித்துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார் 36 வயதான ஹேமா மீனா. பணியில் சேர்ந்த பத்து ஆண்டுகளுக்குள் இவரது உறவினர்கள் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

     

    ஊழல்தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஹேமாவின் வீட்டில் நடத்திய திடீர் ஆய்வின் போது, அவரின் வீட்டில் இருந்த கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட பொருட்களை கண்டு பிடித்தனர். இவரது வீட்டில் 100 நாய்கள், வீடு முழுக்க வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறை, மொபைல் ஜாமர்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

    ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் முதல் நாளிலேயே ரூ. 7 கோடி மதிப்பிலான சொத்துக்களை கண்டறிந்தனர். இது ஹேமா வாங்கும் மாத சம்பளத்தை விட 232 சதவீதம் வரை அதிகம் ஆகும். ஹேமா முதலில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை தனது தந்தை பெயரில் வாங்கி, அதில் ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டை கட்டியுள்ளார்.

    ஆடம்பர வீடு மட்டுமின்றி ரைசன் மற்றும் விதிஷா மாவட்டங்களிலும் நிலம் வைத்திருக்கிறார். முதற்கட்ட ஆய்வுகளின் படி இவர் வீட்டுவசதி வாரிய பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட பொருட்களை கொண்டு தனது வீட்டை கட்டியிருக்கிறார் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இத்துடன் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

    • புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர்.
    • சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.

    திருவாரூர்:

    திருவாரூர் ஜி.ஆர்.டி கார்டனை சேர்ந்தவர் முத்துமீனாட்சி. இவர் தற்போது விழுப்புரம் சர்க்கரை ஆலையின் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே தங்கி உள்ளார்.

    இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த போது நத்தம் புறம்போக்கு இடத்தில் வீட்டு மனைபட்டா வழங்கியதும், அந்த இடத்தை நெடுஞ்சாலைதுறை விரிவாக்க பணிக்காக மீண்டும் அரசிடமே நல்ல விலைக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

    புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர். அதில் முத்து மீனாட்சி, நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி, உதவியாளர் கார்த்தி, அடியக்கமங்கலத்தை சேர்ந்த முருகன், முல்லையம்மாள், குமார், சுகுமார், சிவகுமார், சதீஷ்குமார், வினோத்குமார், திருப்பாலியூர் சுகுமாரி ஆகிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் இன்று திருவாரூரில் உள்ள முத்து மீனாட்சி வீட்டிற்கு 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அப்போது வீட்டின் வெளி கதவை பூட்டிவிட்டு வீட்டில் இருந்தவர்களை வெளிளே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பல்வேறு அறைகளில் சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.

    இதேப்போல் வீட்டு மனை பட்டா முறைகேட்டுக்கு உதவியாக இருந்ததாக கூறி அப்போதைய அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ.வும், தற்போதைய விளமல் வி.ஏ.ஓ.வுமான துர்காராணி என்பவரின் விளமல் சிவன் கோவில் நகரில் உள்ள வீடு மற்றும் அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ. உதவியாளர் கார்த்தி என்பவரது அடியக்கமங்கலத்தில் உள்ள வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி தனி குழுவாக சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேப்போல் தஞ்சாவூரில் உள்ள நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை என்பவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

    மேலும் சோதனை நடைபெறும் திருவாரூர் மாவட்டம் 3 அரசு அலுவலர்கள் மற்றும் தஞ்சையில் உள்ள ஒரு அரசு அலுவலர் ஆகிய 4 பேரின் வீடுகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 4அரசு அலுவலர்களின் வீடுகளில் நடந்து வரும் சோதனை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரெய்டு’.
    • இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்ததாக 'ரெய்டு' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.


    ரெய்டு

    ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ், எம் ஸ்டூடியோஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    ரெய்டு

    அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சொந்தமான வீடு
    • முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்

    திருச்சி

    வேலூர் கலெக்டர் அலுவலக அருகே ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திலிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணி–களுக்கு நிதி ஒதுக்கீடு செய் யப்படுகிறது.இதில் திட்ட இயக்குனராக ஆர்த்தி பணியாற்றி வருகி–றார். தர்மபுரியில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. குடும்பத்தினரும் அங்கு வசிப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஆர்த்தி சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் சத்துவாச் சாரியில் உள்ள ஆர்த்தி வீட்டிற்கு இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் அதிரடியாக நுழைந்தனர். வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி காஜாமலை பிச்சையம்மாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கலைமணி (72). இவர் ஆர்த்தியின் தந்தை ஆவார். மகள் ஆர்த்தி மற்றும் மருமகன் ஆகிய இருவரும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு துறை–யினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆர்த்தியின் தந்தை ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான கலைமணி வீட்டில் திருச்சி மாவட்டலஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. மணிகண்டன், ஆர்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர்கள் என 3 பேர் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2013 ஆம் ஆண்டு சூரியூர் பகுதியில் 72 ஏக்கரில் கோழிப்பண்ணை அமைக்க இடம் வாங்கியது உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.
    • அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், ராஜாஜிபுரம், விவேகானந்தர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.2.10 லட்சம் அரசு மானியத்துடன் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரசின் விதிமுறைகளை மீறி பெருமளவில் முறை கேட்டில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதனையடுத்து திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர்கள் தமிழரசி, சுமித்ரா மற்றும் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் நாராயணன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 3 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.

    இந்த அலுவலகம் சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு மாற்றப்பட்டதில் கடந்த ஓராண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் சென்னையையும் சேர்த்தால் 85 ஆயிரம் வீடுகளில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சோதனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூரில் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்களிடம் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    • திடீர் என அலுவலகத்திற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்
    • ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்தும் சோதனை நடைபெற்றது

    ஆலங்குடி.

    ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இதில், ஆய்வாளராக நல்லதம்பி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென இந்த அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜவகர் பாபு, பீட்டர் தலைமையிலான போலீசார் வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர் மேலும். அலுவலக சோதனையில், சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்ப டுகிறது.

    • ஜெயங்கொண்டம் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
    • கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் பறிமுதல்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சந்திரசேகர் மற்றும் செந்துறை துணை வட்டாட்சியர் ராமலிங்கம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பவுன்ராஜ், ரவி மற்றும் போலீசார் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென நுழைந்து ஆய்வு செய்தனர். ஆய்வில் கணக்கில் வராத ரூ 6 ஆயிரம் தொகையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலக பொறுப்பு சார்பதிவாளர் பிரகாஷ் மற்றும் உள்ளே இருந்த அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோசடி தொடர்பாக 22க்கும் மேற்பட்ட வழக்கு
    • 4 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆலங்குடி ஆண்டிகுளத்தைச் சேர்ந்த நெல்லைமகன் பன்னீர் செல்வம்(வயது 60).இவர் மீது 22க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ள நிலையில் இன்று ஆண்டிக்குளத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சென்னை வீட்டிலும் சோதனை நடைபெற்றது.சென்னை குற்றப் பிரிவு உதவி காவல் ஆணையர் ஜான் விக்டர் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்ற னர். மோசடி வழக்கு தொடர்பாக இந்த, அதிரடி சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பரசுராமன் (வயது 30) என்ற வாலிபர், 12 பவுன் போலி தங்க தங்க நகையை, விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
    • இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பெரமசாமி பிள்ளை விதியில் ஜுவ்வல்லரி நடத்தி வரும் கைலாஷ் என்பவர் கடையில், கடந்த 10-ந்தேதி, காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச் சேர்ந்த பரசுராமன் (வயது 30) என்ற வாலிபர், 12 பவுன் போலி தங்க தங்க நகையை, விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.பரசுராமனிடம் நடத்திய விசாரணையில், நகையை கொடுத்து விற்கச் சொன்னது திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான் (35) என்பதும், இது போன்ற போலி தங்க நகை விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர் புதுவை போலீஸ் துறையில் சஸ்பெண்ட் ஆன, சப்.இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38), அவரது நெருங்கிய தோழி (கள்ளகாதலி) புவனேஸ்வரி (35) காரைக்காலைச் சேர்ந்த ரமேஷ் (32) ஆகியோர் உள்ளது தெரியவந்தது. இதில் ரிபாத் காமில்தான், ஜெரோம் மற்றும் ரமேஷை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் போலீசார் விசாரனை மேற்கொ ண்டபோது, தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு நபர்களை வைத்து இது போன்று போலி நகையை வங்கிகளில் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.       

         காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த முகமது மைதீன் (35) என்பவர், காரைக்காலில் உள்ள புதுவை பாரதியார் வங்கியில் 30 பவுன் போலி தங்க நகையை வைத்து, கடன் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் முகமது மைதீனை நேற்று கைது செய்தனர் .,இந்நிலையில், காரைக்காலில் உள்ள தனியார் நிதி நிறுவனமான கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிட் வாங்கி கிளையில், காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த தேவதாஸ் (38) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 12 பவுன் போலி தங்க செயினை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் பெற்றுள்ளார். இதுநாள் வரை நகை கடன் பெற்றதுக்கு வட்டி ஏதும் செலுத்தாததால் வங்கி மேலாளர் நகையை பரிசோதித்தார். இதில் அது போலி நகை என தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தேவதாஸை தேடி வருகின்றனர். புவனேஸ்வரி மற்றும் தேவதாஸ் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    • கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா‌ என‌‌ வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா என வாகன சோதனை மேற்கொண்டனர்.

    கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    தமிழக அரசு சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்–படும் ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவை கடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்ப–டையில் அவ்வழியாக வந்த லாரி, சரக்கு ஆட்டோ மற்றும் கனரக வாகனங்–களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் ரேஷன் அரிசி மற்றும் மண் எண்ணை எதுவும் பிடிபட–வில்லை எனவும் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.

    வழியாக வந்தால் அனைத்து வாகனங்க–ளையும் நிறுத்தி சோதனை செய்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×