என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில்சோதனை
- திடீர் என அலுவலகத்திற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்
- ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்தும் சோதனை நடைபெற்றது
ஆலங்குடி.
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இதில், ஆய்வாளராக நல்லதம்பி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென இந்த அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜவகர் பாபு, பீட்டர் தலைமையிலான போலீசார் வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர் மேலும். அலுவலக சோதனையில், சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்ப டுகிறது.
Next Story






