search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "political party"

    • பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    நெல்லை:

    மகாகவி பாரதியாரின் 141- வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாநில வழக்கறிஞர் பிரிவு இணை தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், ஐ.என்.டி.யூ.சி. ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மண்டல தலைவர்கள் அய்யப்பன், கெங்காராஜ்,ராஜேந்திரன், வட்டார தலைவர்கள் கணேசன், காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் இலந்தை ராமகிருஷ்ணன்,ஆட்டோ அருள்ராஜ், மகேந்திரன், அனந்த பத்மநாபன், கிருஷ்ண மூர்த்தி, வர்த்தக காங்கிரஸ் ராஜகோபால்,மறுகால் குறிச்சி செல்ல பாண்டியன், வக்கீல் பினிக்ஸ், மகளிர் அணி மெட்டில்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க.

    பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நிர்வாகிகள் சுரேஷ், வேல் ஆறுமுகம் உள்ளிட்டோர் சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

    இதில் மாநகர் மாவட்ட செயலாளர் துரைபாண்டியன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, மணிமாறன், மானூர் கிழக்கு ஓன்றிய செயலாளர் ஆதிபாண்டியன், மேலப்பாளையம் பகுதி தலைவர் டிக்முத்து, டவுன் பகுதி செயலாளர் சங்கர், பரமசிவபாண்டியன், ராஜா, மாணவரணி பாண்டி, பழனி, முத்துவளவன், சுரேஷ்பாண்டியன், ராஜன் வேளாளர், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க சார்பில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
    • தி.மு.க. சார்பில், மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் அ.தி.மு.க சார்பில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் சிவபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் வேலுமணி, நகராட்சி கவுன்சிலர், செண்பகமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செல்வக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில், மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை அமை ப்பாளர் அமலி பிரகாஷ், இலக்கிய அணி செயலாளர் மணி, மாத்தையா உட்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமை யில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மாலை அணிவித்தார். இதில் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், பவுன் மாரியப்பன், முத்து ச்செல்வன், கொம்பையா, செண்பகராஜ், நாகராஜ், குழந்தைவேல் உட்பட பலர் கலந்து கொண்டு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பாக எஸ்.சி. அணி மாநில துணை தலைவர் மாரிமுத்து தலை மையில் மாலை அணி விக்கபப்ட்டது. இதில் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
    • மாவட்டத்தின் மொத்தம் உள்ள 5 தொகுதிகளிலும் 13,51,178 வாக்காளர்கள் உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.

    கலெக்டர் வெளியிட்டார்

    மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம், பயிற்சி கலெக்டர் கோகுல், தேர்தல் தாசில்தார் கந்தப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி காசி மணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கர், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் சிந்து முருகன், காங்கிரஸ் சார்பில் சொக்கலிங்க குமார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக 7,722 பேர் சேர்ப்பு

    5.1.2022-ன் படி நெல்லை மாவட்டத்தில் 13,86,140 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு நெல்லை தொகுதியில் 1,374 பேரும், அம்பையில் 1,241 பேரும், பாளையில் 2,059 பேரும், நாங்குநேரியில் 1,779 பேரும், ராதாபுரத்தில் 1,269 பேரும் என புதிதாக 7,722 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதே போல் 42 ஆயிரத்து 684 பேர் நீக்கப்பட்டும், 5,283 பேர் திருத்தம் செய்யப்பட்டும், 1,006 பேர் முகவரி மாற்றமும் செய்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி மாவட்டத்தின் மொத்தம் உள்ள 5 தொகுதிகளிலும் 13,51,178 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6,61,503 பேர் ஆவர். பெண்கள் 6,89,557 பேர் ஆவர். 3-ம் பாலினத்தவர் 118 பேர் ஆவர்.

    வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    சிறப்பு முகாம்

    வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இதனை பார்த்து பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை ஆன்-லைன் மூலமாகவும், நேரடியாகவும் செய்து கொள்ளலாம்.

    இதற்காக இந்த மாதம் 12,13,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும். நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை 51.76 சதவீதம் பேர் இணைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
    • அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதனை சம்பவத்தன்று சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர்.

    இதையடுத்து கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க பணிக்கம்பட்டி செயலாளர் ஈஸ்வரன், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார், உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா,உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் கடந்த தீபாவளியன்று இரவு பணிக்கம்பட்டியை சேர்ந்த மதன் (21),லோகநாதன் (20) ,சூர்யா (21) ,ராஜேஷ் (22), சஞ்சீவ் (19) ஆகிய 5 பேரும் குடிபோதையில் அங்கிருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்களின் மீது ஏறி சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

    பெங்களூர்:

    நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

    இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பி.சி. மோகன் வெற்றிபெற்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

    தேர்தல் தோல்வி குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘‘தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது’’ என்று கூறி இருந்தார்.

    இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 6 மாதமாக பெங்களூர் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன்.

    நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சுயேச்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

    இன்னும் 1 வருடத்தில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில் எங்களது வேட்பாளர்களை களம் இறக்கி சிறிய அளவில் இருந்து ஆதரவை பெருக்கப் போகிறேன். சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிக்கவும் இருக்கிறேன். அரசியல் கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு ஊழியர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என புதுவை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 10-03-2019 அன்று இந்திய லோக்சபா தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு வெளி வந்த தினத்திலிருந்து தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    தேர்தல் நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்தவும், எதிர்வரும் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்திட அனைத்து முயற்சிகளும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த தேர்தலின் போது மாநில மத்திய அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதாக பல புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது.

    எனவே அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பொழுது நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் நடக்கும் காலத்தில் ஊழியர்கள் நடுநிலையோடு செயல்படுவது மக்களுக்கு தெரிய வேண்டும். அவ்வாறு தெரிந்தால் தான் தேர்தல் நியாயமான, சுதந்திரமான ஒரு நல்ல சூழலில் நடக்கிறது என்று பொதுமக்களுக்கு உணரப்படும்.

    எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்படக்கூடாது. மீறுவோர் மீது மத்திய அரசு பணிநடத்தை விதிகள் 1961-ல் உள்ள விதிகள் கீழ் மற்றும் அனைத்திந்திய பணியில் இருப்போருக்கான விதிகளின் கீழும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊழியர்கள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் மற்றும் ஓட்டு பதிவின் போது தங்கள் செல்வாக்கை பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தான் தண்டிக்கப்படுவார்கள்.

    இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 234-ன் கீழ் அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலக கடமைகளை மீறி செயல்படக்கூடாது.

    அவ்வாறு மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தேர்தலின் போது தேர்தல் முகவர்களாக, வாக்குச்சாவடி முகவர்களாக மற்றும் எண்ணுகை முகவர்களாக செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள் மேற்கூறிய நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கைக்கு எடுத்து தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

    இந்தியாவில் நடக்கவுள்ள 17வது பாராளுமன்ற தேர்தல் உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையை பெறுகிறது. #Parliamentaryelections
    சென்னை:

    இந்திய பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தியாவில் 17வது பாராளுமன்ற தேர்தலான இது உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையை பெறுகிறது.

    தேர்தலுக்காக நாடு முழுக்க அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைப்பதிலும் வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரமாக உள்ளனர். தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை, பிரசாரம் என இந்தியா முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    வரும் தேர்தல்தான் உலகத்திலேயே மிகப்பெரிய தேர்தல் (எண்ணிக்கையின் அடிப்படையில்) என கூறப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 2017 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இங்கு 133.97 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதன் அடிப்படையில் வரும் தேர்தலில் அதிக மக்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.



    இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் 90 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். இதற்கு முன் நடைபெற்ற 2014-ம் ஆண்டு தேர்தலில் 85 கோடியே 50 லட்சம் பேர் வாக்களித்தனர். தற்போது 5 கோடியே 50 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். இந்தியாவில் முதல்முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டபோது, 17 கோடி மக்கள் மட்டுமே வாக்களித்தனர். இந்தியாவில் மொத்தம் ஒரு கோடியே ஐம்பது லட்சம் மக்கள் 20 வயதுக்குள்ளும் மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் 35 வயதுக்கும் கீழ் உள்ளனர்.

    38,325 மூன்றாம் பாலினத்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். நாடு முழுவதும் 3,626 கட்சிகள் உள்ளன. இவற்றில் 1841 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த சுமார் 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் 11 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. #Parliamentaryelections
    ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்ட பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். #ADMK #MinisterJayakumar #JactoGeo
    ராயபுரம்:

    ராயபுரத்தில் உள்ள புனித பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூகநலத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு ஆயிரத்து 36 பயனாளிகளுக்கு தங்கம் அளித்தனர்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டாலின், தினகரன் ஆகியோர் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. இதனால் எந்த கொம்பன் நினைத்தாலும் இந்த ஆட்சியை அழிக்க முடியாது.

    எனவே, ஆட்சி கவிழும் என்பது கனவல்ல நினைவாகும் என்று ஸ்டாலின் கூறியது கனவாக மட்டுமே இருக்கும்.



    அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை பிடிப்போம். 2021-ல் சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.

    அ.தி.மு.க. அரசுக்குதான் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி அரசின் சிரமங்கள் எடுத்து சொல்லப்பட்டுள்ளது, 100 சதவீதம் வருவாயில் 71 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என அனைத்தையும் கொடுக்கிறோம். மீதம் உள்ள 29 சதவீதத்தை நல திட்டங்களுக்கு செலவிட்டு வருகிறோம்.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்ட பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளன.

    போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் பிடிவாத போக்கை கடைபிடித்து வருகிறார்கள். எனவே வேறு வழி இல்லாமல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    மாணவர்கள் நலன் கருதி அவர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும். யாரையும் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆசிரியர்களை அச்சுறுத்த நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. நிதி இல்லை என்பதை விளக்கமாக பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் சரோஜா கூறும்போது, “தமிழகத்தில் இதுவரை 10 லட்சத்து 53 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் பட்டதாரி பெண்கள் பயன் பெற்றுள்ளனர்” என்றார். #ADMK #MinisterJayakumar #JactoGeo
    ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று எம்.ஜி.ஆர். கழக பொதுக்குழு கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பன் கூறினார். #RajiniKanth
    சென்னை:

    ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.

    எம்.ஜி.ஆர். கழக பொதுக்குழு கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மஹால் ஒன்றில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.ராமலிங்கம், மகளிர் அணி செயலாளர் இரா.அபிராமி, மாநில அமைப்பு செயலாளர்கள் என்.ஜி.கலைவாணன், சு.ப.தமிழ்வேள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பனின் மகன் செல்வம், மாவட்ட செயலாளர்கள் பெரம்பூர் துரைராஜ், கே.எம்.ஆறுமுகம், சங்கரலிங்கம், பெ.சிவகுமார், சேவியர், கட்சியின் வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் கருணாகரன், மயிலாப்பூர் பகுதி செயலாளர் ஆர்.பி.வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணா நிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. என்பது, நான் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஆரம்பித்த இயக்கம். எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்தபோது, வீடியோ காட்சிகளை படம் எடுத்து தமிழகத்தில் பரப்பி தான் அவரை 3-வது முறை முதல்-அமைச்சராக ஆக்கினோம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா அந்த இயக்கத்தை கைப்பற்றினார். அவர் ஆட்சி செய்த போதுதான், தமிழக மக்களுக்காக பாடுபட்ட ஒரு அரசு, ஒரு இயக்கம் பணம் சம்பாதிக்கிற வியாபாரக் கூட்டமாக மாறியது. அது ஜெயலலிதா மறைந்த பிறகும் இன்றும் தொடர்கிறது.

    எம்.ஜி.ஆர். கழகம் என்பது ஒரு அரசியல் கட்சி தான். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். கழக தொண்டர்கள் பாடுபடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் யாராவது போட்டியிடுவர்களா? என்பதை இப்போது சொல்ல முடியாது.

    ரஜினிகாந்த் எனக்கு மிக வேண்டிய, நெருங்கிய நண்பர். பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் ரஜினி பேசியதில் ஜெயலலிதா கோபப்பட்டு என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினார். இன்றைக்கும் ரஜினிகாந்த் மிகப்பெரிய படங்களில் நடித்தாலும், பாட்ஷா என்று சொன்னால் அவருக்கு தனி புகழ் இருக்கிறது.



    அப்போது தான் ரஜினி என்னோடு சேர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்றெல்லாம் கூறினார்கள். அப்போது அவரை அரசியலுக்குள் வரவிடாமல் தடுத்தவர்களும் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் மிகச் சிறந்த நடிகர். பொதுமக்களின் நன்மைக்காக பாடுபடுபவர். ஆனால், ஒரு நிலையான அரசியல் கட்சியை நடத்துவது அவரால் முடியுமா? என்றால் எனக்கு சந்தேகம். ஏன் என்றால் நான் பல நேரம் அவரோடு விவாதித்து இருக்கிறேன். அவர் மிகச்சிறந்த மனிதர். சிந்தனையாளர். ஆன்மிக உணர்வு மிகுந்தவர். எதிர்பாராத வகையில் இயற்கையாகவே தமிழகத்துக்கு கிடைத்த மாபெரும் நடிகர். அவரது அரசியல் நிலைமைகளை பற்றி கூற தயாராக இல்லை.

    எம்.ஜி.ஆர். போன்று அரசியல் உலகத்திலும், கலை உலகத்திலும் புகழ் பெற்ற மனிதரை இந்தியா கண்டது இல்லை. இப்போது இருப்பது அ.தி.மு.க.வே இல்லை. அ.தி.மு.க. என்று எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிற ஒரு பெரிய கூட்டுக்கம்பெனி தான் இருக்கிறது. அவர்களுக்கு அரசியலை பற்றி கவலை இல்லை. மக்களை பற்றி கவலை இல்லை. தனது பதவி காப்பாற்றப்பட வேண்டும். தன் பதவியின் மூலம் பொருள் ஈட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajiniKanth
    ×