search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடி கம்பம்"

    • அயோத்தி ராமர் கோவில் கொடி கம்பமும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் அதற்கான மரங்கள் தேடப்பட்டது.
    • அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக அந்த கொடி மரம் நிறுவப்படும்.

    அயோத்தி:

    அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் வருகிற 22-ந்தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    பிரதமர் மோடி உள்பட நாட்டின் பிரபலங்கள் சுமார் 7 ஆயிரம் பேர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

    அயோத்தி கோவில் எந்த அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறதோ அதே அளவுக்கு அங்குள்ள ஒவ்வொரு அமைப்பும் பிரமாண்டமானதாக அமைக்கப்படுகிறது. கோவில் நுழைவு வாயில் கதவுகள், மணிகள், சிலைகள் அனைத்தும் பல அடி உயரத்துக்கு பிரமிக்க தக்க வகையில் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கொடி கம்பமும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் அதற்கான மரங்கள் தேடப்பட்டது. இறுதியில் குஜராத் மாநிலத்தில் அதற்கான மரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த கொடி கம்பம் தங்க முலாம் பூசப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது. 5 கிலோ எடையுடன் அந்த கொடி கம்பம் பிரமாண்டமானதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த 5-ந்தேதி அந்த பிரமாண்ட கொடி கம்பத்தை குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரமாண்டமான லாரியில் அந்த கொடி கம்பம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டது.

    நேற்று அந்த கொடி கம்பம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது. அயோத்தியில் ஏற்கனவே குழுமி உள்ள ராம பக்தர்கள் கொடி கம்பத்தை தொட்டு வணங்கினார்கள். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு அந்த கொடி கம்பத்தை வரவேற்றனர்.

    அந்த கொடி கம்பம் 44 அடி உயர வெண்கல கம்பத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதன் மொத்த உயரம் 161 அடி உயரமாக இருக்கும். அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிக பிர மாண்டமாக அந்த கொடி மரம் நிறுவப்படும்.

    வருகிற 22-ந்தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் அதே நேரத்தில் இந்த கொடி மரமும் நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • உகாயனூர் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொடிக்க ம்பங்கள் உள்ளது.
    • அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் உகாயனூர் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க.,அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொடிக்க ம்பங்கள் உள்ளது.இந்த கொடிக்கம்பங்க ளில் உள்ள கொடிகளை மர்மநபர்கள் இரவு நேரங்களில் மாற்றி கட்டும் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போன்று நடைபெற்றது.இது குறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க கொடியையும், தி.மு.க.வின் கொடிக்கம்ப த்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியையும் கட்டி சென்றுள்ளனர்.

    இரவு நேரங்களில் மர்ம நபர்கள் இது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறா ர்கள்.எனவே போலீசார் இந்த செயலில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்காணித்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்து ள்ளனர்.

    • சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
    • அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதனை சம்பவத்தன்று சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர்.

    இதையடுத்து கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க பணிக்கம்பட்டி செயலாளர் ஈஸ்வரன், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார், உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா,உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் கடந்த தீபாவளியன்று இரவு பணிக்கம்பட்டியை சேர்ந்த மதன் (21),லோகநாதன் (20) ,சூர்யா (21) ,ராஜேஷ் (22), சஞ்சீவ் (19) ஆகிய 5 பேரும் குடிபோதையில் அங்கிருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்களின் மீது ஏறி சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தி யுள்ளனர்.
    • பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதனை சம்பவத்தன்று சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தி யுள்ளனர்.

    இதையடுத்து கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.இதேபோல பா.ஜ.க. சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதேபோல பணிக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன் சார்பில் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    • கோட்டகுப்பம் அருகே பெரிய முதலியார் சாவடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சொந்தமான கொடி கம்பம் உள்ளது.
    • அந்த வழியாக சென்ற விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே பெரிய முதலியார் சாவடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சொந்தமான கொடி கம்பம் உள்ளது. நேற்று இரவு இந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் இந்த கொடி கம்பத்தை வெட்டி பின்புறம் உள்ள காலி மனையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்ற விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சுமார் 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பெரியமுதலியார் சாவடியில் ஒன்று திரண்டனர். அவர்கள் கொடிக்கம்பத்தை வெட்டி வீசிய நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் டிஎஸ்பி மித்ரன் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்வோம் என்று கூறியதின் பெயரில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையோர கோட்டகுப்பம் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பெரிய முதலியார் சாவடியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்திய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    ×