பல்லடம் அருகே கட்சி கொடி கம்பங்களை சேதப்படுத்திய கும்பல்

சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தி யுள்ளனர். பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 சேதமடைந்த கொடிக்கம்பங்களை படத்தில் காணலாம்.
 சேதமடைந்த கொடிக்கம்பங்களை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதனை சம்பவத்தன்று சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தி யுள்ளனர்.

இதையடுத்து கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.இதேபோல பா.ஜ.க. சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதேபோல பணிக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன் சார்பில் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com