search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    5 ஆயிரம் கிலோ எடை கொண்ட பிரமாண்டமான கொடி கம்பம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது
    X

    5 ஆயிரம் கிலோ எடை கொண்ட பிரமாண்டமான கொடி கம்பம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது

    • அயோத்தி ராமர் கோவில் கொடி கம்பமும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் அதற்கான மரங்கள் தேடப்பட்டது.
    • அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக அந்த கொடி மரம் நிறுவப்படும்.

    அயோத்தி:

    அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் வருகிற 22-ந்தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    பிரதமர் மோடி உள்பட நாட்டின் பிரபலங்கள் சுமார் 7 ஆயிரம் பேர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

    அயோத்தி கோவில் எந்த அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறதோ அதே அளவுக்கு அங்குள்ள ஒவ்வொரு அமைப்பும் பிரமாண்டமானதாக அமைக்கப்படுகிறது. கோவில் நுழைவு வாயில் கதவுகள், மணிகள், சிலைகள் அனைத்தும் பல அடி உயரத்துக்கு பிரமிக்க தக்க வகையில் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கொடி கம்பமும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் அதற்கான மரங்கள் தேடப்பட்டது. இறுதியில் குஜராத் மாநிலத்தில் அதற்கான மரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த கொடி கம்பம் தங்க முலாம் பூசப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது. 5 கிலோ எடையுடன் அந்த கொடி கம்பம் பிரமாண்டமானதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த 5-ந்தேதி அந்த பிரமாண்ட கொடி கம்பத்தை குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரமாண்டமான லாரியில் அந்த கொடி கம்பம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டது.

    நேற்று அந்த கொடி கம்பம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது. அயோத்தியில் ஏற்கனவே குழுமி உள்ள ராம பக்தர்கள் கொடி கம்பத்தை தொட்டு வணங்கினார்கள். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு அந்த கொடி கம்பத்தை வரவேற்றனர்.

    அந்த கொடி கம்பம் 44 அடி உயர வெண்கல கம்பத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதன் மொத்த உயரம் 161 அடி உயரமாக இருக்கும். அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிக பிர மாண்டமாக அந்த கொடி மரம் நிறுவப்படும்.

    வருகிற 22-ந்தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் அதே நேரத்தில் இந்த கொடி மரமும் நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    Next Story
    ×