அரசியல் கட்சி கொடி கம்பங்களை சேதப்படுத்திய 5 பேர் கைது

சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர். அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர்.
சேதப்படுத்தியுள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை படத்தில் காணலாம்.
சேதப்படுத்தியுள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதனை சம்பவத்தன்று சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க பணிக்கம்பட்டி செயலாளர் ஈஸ்வரன், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார், உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா,உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் கடந்த தீபாவளியன்று இரவு பணிக்கம்பட்டியை சேர்ந்த மதன் (21),லோகநாதன் (20) ,சூர்யா (21) ,ராஜேஷ் (22), சஞ்சீவ் (19) ஆகிய 5 பேரும் குடிபோதையில் அங்கிருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்களின் மீது ஏறி சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com