search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharathiyar Birthday"

    • மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாள் இன்று.
    • பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம்!

    சென்னை:

    மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

    வாழிய வாழியவே!

    வான மளந்த தனைத்தும் அளந்திடும்

    வண்மொழி வாழியவே!" எனத் தமிழை வாழ்த்தி, தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம்!

    வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர்.
    • பாரதி அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதியவர்.

    புதுடெல்லி:

    மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    ஒரு கவிஞரான மகாகவியின் படைப்புகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது. தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர். பாரதி அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதியவர். அவரது வாழ்க்கை சரித்திரமும் அவரது செயல்களும் என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.

    • பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    நெல்லை:

    மகாகவி பாரதியாரின் 141- வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாநில வழக்கறிஞர் பிரிவு இணை தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், ஐ.என்.டி.யூ.சி. ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மண்டல தலைவர்கள் அய்யப்பன், கெங்காராஜ்,ராஜேந்திரன், வட்டார தலைவர்கள் கணேசன், காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் இலந்தை ராமகிருஷ்ணன்,ஆட்டோ அருள்ராஜ், மகேந்திரன், அனந்த பத்மநாபன், கிருஷ்ண மூர்த்தி, வர்த்தக காங்கிரஸ் ராஜகோபால்,மறுகால் குறிச்சி செல்ல பாண்டியன், வக்கீல் பினிக்ஸ், மகளிர் அணி மெட்டில்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க.

    பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நிர்வாகிகள் சுரேஷ், வேல் ஆறுமுகம் உள்ளிட்டோர் சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

    இதில் மாநகர் மாவட்ட செயலாளர் துரைபாண்டியன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, மணிமாறன், மானூர் கிழக்கு ஓன்றிய செயலாளர் ஆதிபாண்டியன், மேலப்பாளையம் பகுதி தலைவர் டிக்முத்து, டவுன் பகுதி செயலாளர் சங்கர், பரமசிவபாண்டியன், ராஜா, மாணவரணி பாண்டி, பழனி, முத்துவளவன், சுரேஷ்பாண்டியன், ராஜன் வேளாளர், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    ×