search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pettai"

    • நெல்லை நகர்ப்புற கோட்டம் சார்பில் பேட்டையில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
    • பேட்டை பிரிவுக்கு உட்பட்ட 22-வது வார்டு திருத்து பகுதியில் புதிதாக 63 கிலோவாட் மின்மாற்றி ரூ.4.26 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் நெல்லை நகர்ப்புற கோட்டம் சார்பில் பேட்டையில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    பேட்டை பிரிவுக்கு உட்பட்ட 22-வது வார்டு திருத்து பகுதியில் புதிதாக 63 கிலோவாட் மின்மாற்றி ரூ.4.26 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அப்புதி மக்களுக்கு குறைந்த மின்னழுத்தம் சரி செய்யப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புதிய மின்மாற்றியை மாநகராட்சி மேயர் சரவணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ராஜூ, நெல்லை கோட்ட செயற் பொறியாளர் முத்துக்குட்டி, பழைய பேட்டை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சங்கர், உதவி மின் பொறியாளர்கள் சரவணன், ஜன்னத்துல் சிபாயா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பழையபேட்டை சமூகரெங்கன் கட்டளையை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகள் இசக்கியம்மாள் (வயது19).
    • பாளையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

    நெல்லை:

    பழையபேட்டை சமூகரெங்கன் கட்டளையை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகள் இசக்கியம்மாள் (வயது19). இவர் பாளையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 25-ந்தேதி வழக்கம்போல ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார். ஆனால் இரவில் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. ஓட்டலில் இருந்து பணி முடிந்து ெசன்றுவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கியம்மாள் எங்கு சென்றார்? என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    • பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது40). இவர் அப்பகுதியில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார்.
    • இந்த கடையை அதேபகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான லெட்சுமணன் (62) என்பவருக்கு விற்பனை செய்ததாகவும், சிறிது காலம் அவகாசத்தில் கடையை காலிசெய்து தருவதாக மகேந்திரன் கூறியதாக தெரிகிறது.

    நெல்லை:

    பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது40). இவர் அப்பகுதியில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு இந்த கடையை அதேபகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான லெட்சுமணன் (62) என்பவருக்கு விற்பனை செய்ததாகவும், சிறிது காலம் அவகாசத்தில் கடையை காலிசெய்து தருவதாக மகேந்திரன் கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் கடையை கேட்க லெட்சுணன் சென்றதாக தெரிகிறது. அப்போது கடை பூட்டியிருந்ததால் கதவின் மீது மேல்பூட்டு போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மகேந்திரன் பேட்டை போலீசில் புகார் செய்தனார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேட்டையை சேர்ந்த அரபாத் என்பவர் அப்பகுதியில் உள்ள பொட்டகுளத்தின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
    • சுமார் 15 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டையை சேர்ந்தவர் அபுதாகிர். இவரது மகன் யாசர் அரபாத்(வயது 23).

    இவர் அப்பகுதியில் உள்ள பொட்டகுளத்தின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்டவைகளை சட்டவிரோதமாக பதுக்கி விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ேசாதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுமார் 15 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் யாசர் அரபாத்தை கைது செய்தனர்.

    • அனைத்து குக்கிராமங்களிலும் அடிப்படை தேவைகளான குப்பை அகற்றம், குடிநீர் குழாய் உடைப்பு, தெருவிளக்குகள் சரிபார்த்தல், சுகாதார பொருட்கள் வாங்கியது, மோட்டார் பழுதுபார்த்தல் போன்ற செலவீன பட்டியல்களுக்கு ஊராட்சியில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • பொதுமக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

    நெல்லை:

    மானூர் யூனியனுக்கு உட்பட்ட பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களது பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் அடிப்படை தேவைகளான குப்பை அகற்றம், குடிநீர் குழாய் உடைப்பு, தெருவிளக்குகள் சரிபார்த்தல், சுகாதார பொருட்கள் வாங்கியது, மோட்டார் பழுதுபார்த்தல் போன்ற செலவீன பட்டியல்களுக்கு ஊராட்சியில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த செலவு தொகைகளை கொடுப்பதற்கு ஊராட்சி ரொக்க புத்தகத்தில் எழுதப்பட்டும் பஞ்சயாத்தின் துணைத்தலைவர் அதில் கையொப்பமிட மறுக்கிறார்.

    இதனால் எங்களது ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவேமாவட்ட கலெக்டர் விஷ்ணு இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    • ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் மத்திய பிரதேசத்தில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • கிருஷ்ணபேரி சாலையில் வந்த போது இவரது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மாரியப்பன் மீது உரசுவது போல் வந்துள்ளனர்.

    நெல்லை:

    ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் மத்திய பிரதேசத்தில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த மாரியப்பன் நேற்று மோட்டார் சைக்கிளில் நெல்லை பேட்டைக்கு வந்தார்.

    கிருஷ்ணபேரி சாலையில் வந்த போது இவரது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மாரியப்பன் மீது உரசுவது போல் வந்துள்ளனர். இதனால் அவர்களை மாரியப்பன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் மாரியப்பனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாரியப்பனை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற வாலிபர் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 சிறுவர்களை கைது செய்தனர்.

    • நெல்லையை அடுத்த பேட்டை சாம்பவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடக்கன். இவரது மகன் அய்யப்பன்(வயது 36).
    • இவர் பேட்டை செக்கடி பகுதியில் மணல், ஜல்லி மற்றும் ஹார்வேர்ஸ் விற்பனை கடை நடத்தி வருகிறார்

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை சாம்பவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடக்கன். இவரது மகன் அய்யப்பன்(வயது 36).

    ரூ.47 ஆயிரம் கொள்ளை

    இவர் பேட்டை செக்கடி பகுதியில் மணல், ஜல்லி மற்றும் ஹார்வேர்ஸ் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்ற அய்யப்பன் இன்று காலை கடையை திறப்பதற்காக சென்றார்.

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.47 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. மேலும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த 3 சி.சி.டி.வி. காமிராக்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவையும் திருட்டு போனது.

    விசாரணை

    இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்த சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு 12 மணி வரை அய்யப்பன் கடையில் இருந்துள்ளார்.

    அதன்பின்னர் தான் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் அதிகாலையில் வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அருகில் உள்ள மற்ற கடைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நெல்லையை அடுத்த பேட்டை மற்றும் கோடீஸ்வரன்நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
    • பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை மற்றும் கோடீஸ்வரன்நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    ரோந்து போலீசார்

    இதனை தடுக்க அந்த பகுதிகளில் இரவு நேரங்களில் கூடுதல் ரோந்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறிக்க முயன்றுள்ளனர்.

    பேட்டை வீரப்பாநகர் பகுதியில் வசித்து வருபவர் அந்தோணி. இவரது மனைவி தனிகா தேவி(வயது 75). இவரது வீட்டுக்கு கேரளாவில் இருந்து அவர்களது உறவினர்களான லீலாம்மாள்(63), லெசி(55) ஆகியோர் வந்திருந்தனர்.

    செயின் பறிக்க முயற்சி

    நேற்று இரவு அவர்கள் 2 பேரும் தனிகா தேவியுடன் அந்த பகுதியில் நடை பயிற்சி சென்றனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் லீலாம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட அவர் செயினை கையில் பிடித்துக்கொண்டார். உடனே அவர்கள் 3 பேரும் கத்தி கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற ஜெப பாண்டியன் மாலையில் வீடு திரும்பினார்்.
    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை எம்.ஜி. ஆர்். நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெப பாண்டியன் (வயது 55).இவர் டீ வியாபாரம் செய்து வருகிறார்்.

    நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற ஜெப பாண்டியன் மாலையில் வீடு திரும்பினார்். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை காணவில்லை. இது தொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    பழைய பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத். இவரது மகன் முகமது ரியாஸ் (24). இவர் பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி எதிரே டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற ரியாஸ் இன்று காலை கடைக்கு சென்றார்

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாகவும் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன..அதில் இருந்த 2 கிராம் தங்க காசு உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
    • சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், அன்னலெட்சுமி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை கோடீஸ்வரன்நகரை சேர்ந்தவர் சிவன்(வயது 68). பேட்டை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சிவன், கடந்த 2010-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.

    திருட்டு

    இவர் தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமீபத்தில் வெளியூருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இன்று காலை வீடு திரும்பிய அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.அதில் இருந்த பித்தளை குத்து விளக்குகள், 2 கிராம் தங்க காசு உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. அதிர்ச்சி அடைந்த சிவன் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது பின்புறத்தில் இருந்த ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு இருந்தது.

    கண்காணிப்பு

    இதனால் அந்த வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்திருப்பதை அவர் அறிந்தார். உடனே பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், அன்னலெட்சுமி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, பீரோவில் பதிந்திருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோடீஸ்வரன்நகர் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவதாகவும், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னையில் ரெயில்வேயில் வேலை பார்த்து வரும் ஊழியர் கண்ணன் கொடை விழாவுக்காக நெல்லை வந்துள்ளார்.
    • வீட்டில் நகை பணம் இல்லாததால் கொள்ளையர்கள் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை பேட்டை அருகே உள்ள கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55).

    ரெயில்வே ஊழியர்

    இவர் சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கோமளவள்ளி. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பாளையில் உள்ள கோவில் திருவிழாவிற்காக கண்ணன் குடும்பத்துடன் நெல்லை வந்தார். பின்னர் கொடை விழா முடிந்ததும் இன்று அதிகாலை கோடீஸ்வரன்நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய்விட்டது.

    மேலும் பீரோவில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன. இதுதொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் நகை பணம் இல்லாததால் கொள்ளையர்கள் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தொழுவத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இறைவைத்து விட்டு இரவில் மாடசாமி தூங்க சென்றார்.
    • காலை பார்த்த போது ஒரு ஆட்டை காணவில்லை.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாடசாமி (வயது65). விவசாயி. இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இறைவைத்து விட்டு இரவில் மாடசாமி தூங்க சென்றார். நேற்று காலை பார்த்த போது ஒரு ஆட்டை காணவில்லை.

    மேலும் அவரை ஆட்டை வாலிபர்கள் சிலர் திருடி கயத்தாறு வாரசந்தையில் விற்பனைக்கு கொண்டு சென்றதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அவர் நேற்று கயத்தாறு சந்தைக்கு சென்றார். அப்போது அவரது ஆட்டை சிலர் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    இது குறித்து அவர் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பேட்டை அருகே உள்ள கண்டியப்பேரியை சேர்ந்த 3 வாலிபர்கள் என்பதும், அவர்கள் தான் மாடசாமியின் ஆட்டை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 3 வாலிபர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×